2022ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான அறிவிப்பு பிற்போடப்பட்டுள்ளது

2022 ஏப்பிரல் 05ம் திகதியன்று மு.ப 07.30 மணிக்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2022ஆம் ஆண்டின் 03ம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. அதற்கிணங்க , 2022 ஏப்பிரல் 05ம் திகதியன்று நடைபெறவிருந்த ஊடக மாநாடும் பிற்போடப்பட்டுள்ளது. ஊடக அறிக்கை மற்றும் ஊடக மாநாட்டுக்கான அறிவிப்பு திகதி விரைவில் தெரிவிக்கப்படும். Published Date: Monday, April 4, 2022

மருந்து இறக்குமதிக்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி அமைச்சு, சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளுக்கு தட்டுப்பாடு இன்றி மருந்துகளை விநியோகிக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு மேலும் 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் … Read more

அரசை திணறடிக்கும் போராட்டங்கள்: பொதுமக்களுடன் இணைந்த பொலிஸ் – செய்திகளின் தொகுப்பு

நாடாளவிய ரீதியில் மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக அரசாங்கத்திற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொட்டாவ பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் இணைந்து போராட்டத்தினை வலுப்படுத்தியுள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,  Source link

கடும் மழை காரணமாக பெரகல – கொஸ்லந்த வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நேற்றிரவு பெய்த கடும் மழை காரணமாக கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் பெரகல, கல்கந்த பிரதேசத்தில் மண்மேடு பாறைகள்  சரிந்துவீழ்ந்ததினால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக ,காப்பட் இடும் பணி அண்மையில் நிறைவுபெற்ற கல்கந்த கீழ்ப் பிரிவு வீதியின் ஒரு பகுதியும்  பாதிக்கப்பட்டுள்ளது. சரிந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணி, ஹல்துமுல்ல பிரதேசச் செயலாளரின் கண்காணிப்பின் கீழ், ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பெரகல மற்றும் கொஸ்லந்தவிற்கு இடையில் பெரகல … Read more

மஹிந்தவின் வீட்டிற்கு முன்னால் தற்போது பதற்றம் – மக்கள் மீது தண்ணீர் தாக்குதல் (Video)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்னால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.  ஹம்பாந்தோட்டை, தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் பொலிஸாரின் பாதுகாப்பு கடவைகளை உடைத்து மக்கள் உள்ளே நுழைந்தனர். இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்துள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் … Read more

கடற்பரப்புகளில் வானிலை, கடல் நிலை

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் … Read more

போராட்டத்தில் கலந்து கொள்ள முயற்சித்த பௌத்த தேரரரை ஆத்திரமடைந்து விரட்டிய பொதுமக்கள்

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்லே சீலரதன தேரரை கலந்து கொண்ட  ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். பத்தரமுல்லே சீலரதன தேரர்,  பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு வருகைத் தந்த வேளை அவர் மீது ஆத்திரமடைந்த மக்கள் அந்த இடத்தில் இருந்து அவரை விரட்டியுள்ளனர்.  அவருக்கு பேசுவதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்க பொதுமக்கள் மறுத்துள்ளனர்.   போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து,  பத்தரமுல்லே சீலரதன தேரர் போராட்டத்தை கைவிட்டு வெளியேறினார். “It … Read more

சில இடங்களில் 100 மி.மீ பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022ஏப்ரல் 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் … Read more

பொது போக்குவரத்து சேவைகள்

கடந்த சனிக்கிழமை (2) அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் ,தளர்த்தப்பட்டதையடுத்து ரயில்கள், இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள்கள் மற்றும் தனியார் பஸ்கள் உட்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் இன்று காலை 6.00 மணி முதல் தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன. அனைத்து அலுவலக ரயில்களும் வழமை போன்று சேவையில் ஈடுபட்டன .எனினும் நீண்ட தூர இடங்களுக்கான ரயில்கள் ஒரு மணித்தியாலம் தாமதமாக செயற்பட்டதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார். அனைத்து பஸ் … Read more