மக்களின் நம்பிக்கையை இழந்தவர்கள் பதவி விலக வேண்டும்! மஹேல

இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் சிலர் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டனர், எனவே அவர்கள் பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கோரியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றில், இந்த பிரச்சனைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும், சரியான, தகுதி வாய்ந்தவர்களால் மாத்திரமே இதனை சரி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார். நாட்டிற்கு நம்பிக்கையையும் நம்பிக்கையையும் கொடுக்க ஒரு நல்ல குழு தேவை. நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. தேவையற்ற காரணங்களை … Read more

12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது : ராமேஸ்வர கடற்தொழிலாளர் சங்கத்தினர் விடுத்துள்ள கோரிக்கை (Photos)

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகுகளுடன் விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் கடற்தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்திய கடற்தொழிலாளர்கள் நேற்று நெடுந்தீவு அருகே கடற்தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி கடற்தொழில் ஈடுபட்டதாக  12 கடற்தொழிலாளர்களை  கைது செய்துள்ளதுடன், அவர்களது விசைப்படகு ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.  இவ்வாறு … Read more

கௌரவ பிரதமர் பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் பதவி விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். கௌரவ பிரதமர் பதவி விலகியுள்ளதாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அடிப்பயைற்றவையாகும். அத்துடன் அவ்வாறானதொரு திட்டம் இல்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறோம். பிரதமர் ஊடக பிரிவு

அலரி மாளிகையில் தற்சமயம் முக்கிய கலந்துரையாடல்! மாற்றங்கள் பல நேரலாம்

நாட்டில் இடம்பெறும் பாரிய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வலையில் கொழும்பில் தற்போது மிக முக்கியமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று  வருவதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கலந்துரையாடல் அலரிமாளிகையில் இடம்பெறுவதாக  அறிய முடிகின்றது.  இதன்போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச தவிர்ந்த ஏனைய அனைத்து ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் முக்கியமான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக அறிய முடிகின்றது. தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடலின் பின்னர் முக்கிய தீர்மானங்கள் பல எடுக்கப்படலாம் எனவும் மாற்றங்கள் பல நேரலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   … Read more

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக கொந்தளித்த மக்கள்! அவசர அவசரமாக கோட்டாபயவை சந்திக்கவுள்ள மகிந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் மகிந்த ராஜபக்ச அவசரமாக இன்று இரவு  சந்திக்கவுள்ளார்.  நாட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், இதன்போது பிரதமர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, சர்வகட்சிகளை இணைத்து இடைக்கால  அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு விடுத்த கோரிக்கைக்கு அரச தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக சற்று முன்னர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், பொருட்கள் பற்றாக்குறை, அதிகரித்த … Read more

இந்திய உதவியின்கீழ் இலங்கைக்கு 40,000 மெட்ரிக்தொன் டீசல் கையளிப்பு

இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஊடாக வழங்கப்படுகின்ற 40,000 மெட்ரிக்தொன் டீசல்  உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் இலங்கை வலுச்சக்தி அமைச்சர் கௌரவ காமினி லொக்குகே அவர்களிடம்  கொழும்பில் கையளிக்கப்பட்டது. இதற்கு முன்னதாக, எரிபொருளுக்கான கடனுதவியின்கீழ் கடந்த மார்ச் மாதம் 16, 20 மற்றும் 23 ஆகிய திகதிகளில் வழங்கப்பட்டவற்றின் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் நான்காவது தொகுதி இதுவாகும். கடனுதவி திட்டத்திற்குள் உள்வாங்காமல் 2022 பெப்ரவரியில் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்பட்டுள்ள 40,000 மெட்ரிக்தொன் … Read more

கொழும்பின் மற்றுமொரு பகுதியில் மக்கள் போராட்டம்: பொலிஸார் குவிப்பு (Video)

கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த பகுதியில் தற்பொழுது பொலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மக்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவண்ணம் பதாதைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Source link

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரமே அவசரகால சட்டமும் ,ஊடரங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளன

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரமே அவசரகால சட்டம் மற்றும் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க விடுத்துள்ள ஊடக அறிக்கையில், அமைதியையும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பேணவும், பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேச்சு சுதந்திரம், கருத்துத் தெரிவித்தற் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான சுதந்திரத்தைப் … Read more

தவணைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அழைக்க வேண்டும்

தவணைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களை மாத்திரம் ,நாளை முதல் எட்டாம் திகதி வரை பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்று கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். அனைத்து கல்விசார் ஊழியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டும். ஆரம்ப பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கத்தேவையில்லை. இதே போன்று இதுவரையில்  தவணை பரீட்சையை நிறைவு செய்த  மாணவர்களை அழைக்கத்தேவையில்லையென செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்படி, தவணை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை மாத்திரம் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.