ஊரடங்குச்சட்டம்: இதுவரை 664 பேர் கைது

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு அமைதியான முறையில் செயற்படுமாறு அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கலகம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்படலாம் என அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. ஆகையினால் நாடு தழுவிய ரீதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இதுவரை 664 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று மாலை 6.00 மணியிலிருந்து நாளை காலை 6.00 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை அத்தியாவசியப் பணிகளுக்காகச் … Read more

டீசலுக்காக காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

மின் உற்பத்திக்காக நாளொன்றுக்கு 3500 மெற்றிக் தொன் டீசல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் இருப்புக்களை விநியோகிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எண்ணெய் தட்டுப்பாட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது, அத்துடன் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  Source link

ஊரடங்கு நடைமுறைப்படுத்தியமைக்கான காரணத்தை வெளியிட்ட அரசாங்கம் (Photo)

அவசரச் சட்டத்தை அரசு அறிவித்தது அமைதி, பொது வாழ்க்கை மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்துடன் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.  பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான உரிமை, பொது ஒழுங்கு மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Source link

2021 க. பொ. த. உயர்தர பரீட்சை செய்முறை பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

2021 கல்விப் பொதுத் தராதப் பத்திர உயர்தர பரீட்சை செய்முறை பரீட்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

சமூக வலைத்தளங்களை முடக்கிய அரசு – பதவியை ராஜினாமா செய்த தலைவர்

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனநாயக்க இராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் சமூக ஊடகங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ராஜினாமா அறிவித்தல் வெளியாகி உள்ளது. இன்று காலை அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சமூக ஊடக வலையமைப்புகளை அணுகும் அனைத்து இணையத்தளங்களையும் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு தனது அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் நேற்று தெரிவித்திருந்தார். … Read more

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்03ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு2022 ஏப்ரல் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் ,மத்திய, சப்ரகமுவ, மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி … Read more

ஊரடங்கு சட்டத்தை மீறிய பெருமளவானோர் பொலிஸாரினால் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் … Read more

ஏடிஎம் இடையூறுகள் குறித்து தனியார் வங்கிகள் எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று பல தனியார் வங்கிகள் எச்சரித்துள்ளன. இது குறித்து இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகள் தமது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. ATM/CRM/CDM இயந்திரங்களில் சேவைத் தடங்கல்களை சந்திக்க நேரிடலாம் என்பதையும், மின்சார விநியோகத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் காரணமாக எங்கள் சில கிளைகள் மூடப்படலாம் எனவும் வங்கிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திரங்களுக்கான தற்காலிக மின்பிறப்பாக்கிகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதிசெய்ய டீசல் … Read more

இலங்கை அரசின் கோரிக்கையை மறுத்த புலம்பெயர் அமைப்புகள்!

இலங்கையில் முதலீடு செய்ய முன்வருமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையினை புலம்பெயர் அமைப்புகள் மறுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனடா, பிரித்தானியா, மற்றும் அமெரிக்காவில் செயற்படும் புலம்பெயர் அமைப்புகள் இவ்வாறு மறுப்பு வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாயின் மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இந்த நிலையில் முதலீடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என்று புலம்பெயர் அமைப்புகள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள … Read more