இலங்கையில் ,இன்று கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை
இலங்கையில் ,இன்று கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
இலங்கையில் ,இன்று கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை
A consignment of 40,000 MT of diesel under Indian assistance through Line of Credit of US$500 million was handed over by High Commissioner Gopal Baglay to the Energy Minister of Sri Lanka, Hon’ble Gamini Lokuge in Colombo today. This is the fourth consignment under the fuel Line of Credit, with previous deliveries on 16 March, … Read more
இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை. அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பிலான புகைப்படங்கள், காணொளிகளை பொது மக்கள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. Source link
மலேசியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022ஆம் ஆண்டிற்கான அதன் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக சுற்றுலா நடத்துனர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. 2022 ஏப்ரல் 01 முதல் மலேசியா தனது எல்லைகளைத் திறந்து, உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் அத்தியாவசியமற்ற பயணங்களை அனுமதிக்கும் அதே நேரத்தில் கடுமையான சுகாதார நெறிமுறைகளும் நீக்கப்படும். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 மார்ச் 15ஆந் திகதி மலேசியா தனது எல்லைகளை மூடியதிலிருந்து இரண்டு முழுமையான நாட்காட்டி ஆண்டுகளுக்குப் பிறகு … Read more
புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியுள்ளது. ஹிஜ்ரி 1443 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று (02) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமை ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இதனை அடுத்து ரமழான் மாதம் ஆரம்பமாவதாக பிறைக்குழு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. கொவிட் சுகாதார வழிமுறைகள் மற்றும் ஊரடங்குச்சட்டம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோர்களின் பங்கேற்பில் இந்த மாநாடு இடம்பெற்றது. கொழும்பு பெரிய … Read more
இலங்கையில் நாளைய தினம் மின் துண்டிப்பை மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அந்தவகையில், A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலய பகுதிகளுக்குக் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5.30 மணிவரை 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை 3 மணித்தியாலங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். மேலும், P,Q,R,S,T,U,V, W ஆகிய வலய பகுதிகளுக்குக் காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை 2 … Read more
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கப்பலிலுள்ள டீசலை இறக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தில் உற்பத்தி நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிகுன், சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித கொஹோனவுடனான சந்திப்பின் போது, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார சவால்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் ஆலோசிக்குமாறு இலங்கையை ஊக்குவித்தார். 2030ஆம் ஆண்டளவில் இலங்கை தனது ஆற்றல் தேவைகளில் 70% ஐப் பெறுவதற்கான இலக்கை அடைய உதவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் விளக்கினார். இலங்கைத் தூதரகம், பெய்ஜிங் 2022 … Read more
கொழும்பில் ஊரடங்கு சட்டத்தையும் மீறி மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஹோமாகம, மஹரகம, யக்கல, குருணால் உட்பட பல பகுதிகளில் ஒன்று கூடியுள்ள பெருமளவு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர். மக்களின் எழுச்சிப் போராட்டங்களை தடுக்கும் வகையில் அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்று முதல் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொருட்படுத்தாத மக்கள் தமது எதிர்ப்பினை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் … Read more
தற்போது நிலவும் நீண்ட நேர மின்துண்டிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கவனத்திற்கொண்டு, ஏப்ரல் மாத விடுமுறையை சில தினங்களுக்கு முன்னதாக வழங்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, கல்வி அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கமைவாக 4 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க கல்வி அமைச்சை கோரியுள்ளார்.