அடுத்தடுத்து நிறுத்தப்படும் விமானங்கள்! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் திடீர் முடிவு

எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் சில விமானங்கள் சேவையிலிருந்து நிறுப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திடீரென முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதன்படி கொழும்புக்கும் பஹ்ரைனுக்கும் இடையேயான UL201 மற்றும் UL202 விமானங்களை நிறுத்த முடிவு எட்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்புடைய செய்தி….. ரஷ்யாவிற்கான விமான சேவை … Read more

கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று, கொந்தளிப்பு

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் … Read more

உலக வர்த்தக நிலையத்தில் ஏற்றுமதி தர ஆடை கண்காட்சி

முதலீட்டு சபை நலன்புரி சங்கத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் ஆடை கண்காட்சி இம்முறையும் உலக வர்த்தக நிலையத்தில் இடம்பெற்றது. இந்த ஆடை கண்காட்சி மார்ச் 30 தொடக்கம் ஏப்ரல் முதலாம் திகதி வரை நடைபெற்றது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை (Photos)

இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கு இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும், எரிபொருள் நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் வரிசைகளில் மக்கள் நிற்பதுடன், இதன்போது மோதல்களும் பதிவாகியிருந்தன. சில போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன, இதற்கு பதிலடியாக போராட்டக்காரர்களை … Read more

பரீட்சைக்கான காகிதாதிகளுக்கு தட்டுப்பாடு இல்லை – கல்வி அமைச்சர்

பரீட்சை வினாத்தாள்களுக்கான காகிதாதிகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்ட போதிலும், அது தீர்க்கப்பட்டுள்ளதாகவும், அது அமைச்சு எதிர்கொண்ட பாரிய பிரச்சினையல்ல என்றும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கு தேவையான அனைத்து காகித தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இதேவேளை பரீட்சைகளை நடத்த அதிகளவான காகிதங்கள் தேவைப்படுவதால் அவற்றை கொள்வனசெய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் கூறினார்.

இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் உண்மையான பாதுகாவலரான மாண்புமிகு நெஸ்பியின் கடந்த கால நினைவுகளை உள்ளடக்கிய புத்தகம் வெளியீடு

தற்போது இலங்கையில் உள்ள பிரித்தானிய பழமைவாதக் கட்சி அரசியல்வாதியும் இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் இணை கூட்டுத் தலைவருமான மாண்புமிகு மைக்கல் நெஸ்பி அவர்கள், தனது புதிய புத்தகமான ” Sri Lanka: Paradise Lost; Paradise Regained ” இனை மாலை (29) ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ், ,இராஜதந்திரிகள், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்புப் பதவி … Read more

பொறுத்தது போதும்! பிரபல கிரிக்கெட் வீரரின் பதிவு

“பொறுத்தது போதும்” என பிரபல கிரிக்கெட் வீரரும், புகழ்பூத்த சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தர் ரொசான் மஹானாம தெரிவித்துள்ளார். சமூக ஊடகப் பதிவு ஒன்றின் மூலம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தகுதியற்ற அதிகார பேராசை கொண்ட ஆட்சியாளர்களினால் இந்த நாடு பாரியளவு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது என்பதனை கனத்த இதயத்துடன் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார். தேசப்பற்றாளர்கள் என பிரச்சாரம் செய்து வரும் அரசியல் தலைவர்களை விடவும் தாம் இந்த நாட்டை நேசிப்பதாகவும் பற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தருணத்தில், … Read more

தனிநபர் கடத்தல் முயற்சியினை வழிநடாத்திய இராணுவ அதிகாரி இராணுவ சேவையில் இருந்து பணிநீக்கம்

இரண்டு அயலவர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக, 2021 ஜூன் மாத இறுதியில், நுரைச்சோலை, பனியடியில் உள்ள ஒரு நபரை இராணுவ அதிகாரி ஒருவர் கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் விசாரணைகளின் அடிப்படையில், இலங்கை இராணுவத்தின் கெப்டன் நிலை அதிகாரியொருவரை 2022 மார்ச் 30 ஆம் திகதியிலிருந்து இராணுவ நீதிபதி குழு சேவையிலிருந்து நீக்கியுள்ளது. 2021 ஜூலை 12 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் … Read more

போக்குவரத்து சேவைகளில் பாதிப்பு இல்லை – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு

நாட்டில் டீசலுக்கான தட்டுப்பாடு இருந்தபோதிலும் ,இலங்கை போக்குவரத்து சபை தனது சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதில் தடைகள் இல்லை. மேலதிகமாக பஸ்கள் சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. நாளாந்தம் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் 5 ஆயிரம் போக்குவரத்து சபை பஸ்கள் ,தற்போது வழமை போன்று நாடளாவிய ரீதியில் தமது தொடர்ச்சியான சேவையில் ஈடுபடுவதாகவும், கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சுமார் ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பந்துக ஸ்வர்ண … Read more

கடும் அச்சத்தில் தென்னிலங்கை அமைச்சர்கள் – தம்மை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக மக்கள் கொந்தளித்துள்ள நிலையில் தமது வீடுகளும் தாக்கப்படும் என அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் உடனடியாக ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறும் இல்லை என்றால் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் வீடுகளும் சுற்றிவளைக்கப்படும் என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் அலரிமாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஆளுங்கட்சியின் விசேட குழு கூட்டத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு … Read more