Central Bank continues regulatory actions against errant Money Changers

The Central Bank’s continued spot examinations at the places of Authorized Money Changers have revealed that the following Money Changers have transacted at rates beyond the rates offered to them by Licensed Banks, thereby violating the Directions issued to them under the provisions of Foreign Exchange Act No. 12 of 2017. i.Swiss Money Exchange (Pvt) … Read more

மிரிஹான சம்பவம் – அரசாங்கம் அரசியல் தீவிரவாதிகளையே குறிப்பிடுகிறதே தவிர மத தீவிரவாதிகளை அல்ல

மிரிஹான ஜனாதிபதியின் வீட்டருகில் 31.03.2022 அன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் .அரசாங்கம் அரசியல் தீவிரவாதிகளையே குறிப்பிடுகிறதே தவிர மத தீவிரவாதிகளை அல்ல என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெளிவுபடுத்தினார். டொலர் மற்றும் மின்சார நெருக்கடிக்கு எதிர்க்கட்சியிடம் தீர்வில்லை. மக்களை ஏமாற்றுவதே எதிர்க்கட்சியின் நோக்கம் வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்கள் எதிர்க்கட்சிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும் அமைச்சர் கூறினார். முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இதுவொரு அடிப்படைவாத செயற்பாடு என்பது தெரியவந்திருப்பதாக அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று … Read more

மேல் மாகாணத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது!

மேல் மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. கொழும்பிலும் நேற்று இரவு போராட்டங்கள் முன்னெடுப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை ஆறு மணியுடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.   Source link

பொருளாதார நெருக்கடியால் கொந்தளிக்கும் மக்கள்! – பதவியை இராஜினாமா செய்த பிரபலம்

 பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்களின் கோபம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் (MB) உறுப்பினர் சமந்த குமாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. சமந்த குமாரசிங்க நாட்டின் மிகப் பெரிய மூலிகை அழகுசாதனப் பொருட்கள் நிறுவனங்களில் … Read more

கோட்டாபய அரசின் பிழையான முடிவு! – அயல் நாட்டின் கடுமையான நிலைப்பாடு (Video)

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்பது தற்போது ஏற்பட்ட ஒன்று அல்லவென பிரித்தானியாவில் இருக்கும் பொருளாதார நிபுணர் பாலகிருண்ன தெரிவித்துள்ளார். கோவிட் பரவல் காலப்பகுதியில் இருந்தோ, உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாகவோ இலங்யைில் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். “இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ஆரம்ப காலங்களில் இருந்தே வந்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான போரில் அவர்களை அழிப்பதற்காக 22 நாடுகளிடம் இருந்து … Read more

மோசமடையும் இலங்கையின் நிலை! – சஜித் விசேட அறிவிப்பு

மிரிஹானவில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கும் நபர்களுக்கு ஆதரவாக 600 சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சி என்ற வகையில், தங்கள் வாழ்க்கையை கடுமையாகப் பாதித்த அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு ] ஐக்கிய மக்கள் சக்தி துணை நிற்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை … Read more

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்

இலங்கையில் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்ட்ளளது. இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில்  அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ளது.  2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். Source link

அதிகரித்த வெப்ப நிலை குறித்து விசேட அறிவிப்பு

நாட்டின் மேல், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மாத்தறை மாவட்டங்களிலும் வழமையான வெப்ப நிலையை விட அதிகமாகவும், உடல் வெப்பநிலை வழமை நிலையிலும் விட அதிகரிக்கும் நிலையில் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெப்ப சுட்டெண் எதிர்பார்க்கப்பட்ட ஈரப்பதன் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி வானிலை ஆய்வு திணைக்களத்தால் கணக்கிட்டு இதனை தெரிவித்துள்ளது.. இது உலகளாவிய எண்ணியல் வானிலை எதிர்வு கூறல் மாதிரிகளின் தரவுகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. மனித உடலில் வெப்பக் குறியீட்டின் … Read more

அடிப்படைவாதப் போதனைகளை பாடசாலைப் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்குவதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது…

இலங்கையின் கல்வி பாடத்திட்டத்தில் உள்ள அடிப்படைவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இட்டுச் செல்கின்ற போதனைகள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளில் இருந்து தமது பிள்ளைகளை பாதுகாத்துத் தருமாறும் மிதவாதப் போக்குடைய முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ். எச். ஹரிச்சந்திர ஆகியோர் “ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான” ஜனாதிபதி செயலணியுடன் கடந்த, … Read more

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு(Photo)

இலங்கை மின்சார சபையினால் நாளைய தினம் (02) மின்துண்டிப்பை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட கோாிக்கையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது. அதன்படி நாளைய தினம் 8 மணித்தியாலங்களும், 30 நிமிடங்களுக்கும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்துண்டிப்பு தொடர்பான அட்டவணை வருமாறு, Source link