மிரிஹான சம்பவம் கடும்போக்குவாதிகளின் செயற்பாடு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு

மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்று (31) முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை கடும்போக்குவாதிகளின் செயற்பாடு. இதனால் 39 மில்லியன் ரூபா பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு உரிமை இருந்தாலும், அதனூடாக நாட்டை அராஜகப்படுத்துவதற்கான உரிமை இல்லை என்றும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக … Read more

மிரிஹான சம்பவம்: பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது

மிரிஹான பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக நாட்டில் காணப்படும் குற்றவியல் தண்டனை சட்டக்கோவை மற்றும் பொது சொத்துக்கள் தொடர்பான சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மிரிஹான பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற சம்பவம் அதாடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் … Read more

இன்றும் தொடர்கிறது மக்கள் போராட்டம்! பேருவளையில் குழுமிய மக்கள்

அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது  மேலும்  தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பேருவளை நகரிலும் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.  எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.   Source link

ஆளுங்கட்சி எம்பியை நோக்கி முட்டை வீச்சு தாக்குதல்

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பயணித்த வாகனம் மீது இன்று முட்டை வீச்சு தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வெல்லவாய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த வேளை இவ்வாறு  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர் ஆளுங்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. Source link

ராஜபக்ஷர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொதுமக்களின் சீற்றம் அதிகரிக்கிறது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள் சீற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது. மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தொடர்வதை அடுத்து, சமூக ஊடகங்களில் ராஜபக்சக்களுக்கு எதிரான கோபம் அதிகரித்து வருகிறது. சமூக ஊடக பயனர்கள், பல முக்கிய பிரமுகர்கள் உட்பட, தற்போதைய விடயங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் ராஜபக்ஷ நிர்வாகத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர். இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக ‘வெள்ளை துணி’ … Read more

கலவரத்தின் பின்னணியில் அடிப்படைவாதக் குழு…

நுகேகொடை ஜூபிலி சந்தி அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இருந்த திட்டமிட்டு செயற்படும் அடிப்படைவாதிகள் குழுவொன்று கலவரத்தில் ஈடுபட்டு, வன்முறை நிலையை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. இரும்புக் கம்பிகள், தடிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று, ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு மிரிஹான பெங்கிரி வத்தையில் உள்ள ஜனாதிபதி அவர்களின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று, கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் திட்டமிட்டு செயற்படும் அடிப்படைவாதிகள் என உறுதியாகியுள்ளது. அவர்கள் அரபு … Read more

கோட்டாபயவிற்கு எதிராக கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சர்

மிரிஹானவில் இடம்பெற்ற மோதலில் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மறுத்துள்ளார். தீவிரவாதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக நான் நினைக்கவில்லை என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். வன்முறை குழுக்கள் எதுவும் நுழைந்து வன்முறையில் செயலில் ஈடுபட்டிருக்கலாம். எனினும் தீவிரவாதிகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென்பது எங்களுக்கு தெரியும். அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் … Read more

இலங்கை, நேபாள வெளிவிவகார அமைச்சர்கள் இருதரப்பு உறவுகளை மேலும் புதிய ஒத்துழைப்பின் பகுதிகளாக விரிவுபடுத்துவதற்கான அர்ப்பணிப்பைப் புதுப்பிப்பு

கொழும்பில் நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டையொட்டி, நேபாள வெளியுறவு அமைச்சர் கலாநிதி நாராயண் கடகா, 2022 மார்ச் 30ஆந் திகதி இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்தார். கலந்துரையாடலின் போது, தொடர்ந்தும் விருத்தியடைந்து வரும் இருவழிப் பிணைப்பு குறித்து இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் திருப்தி தெரிவித்ததுடன், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், ஐக்கிய … Read more

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்னவின் மறைவு  –  பிரதமரின் இரங்கல் செய்தி 

அனுபவமிக்க அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன அவர்களின் மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். இடதுசாரி அரசியலின் செயற்பாட்டாளரான அதாவுத செனவிரத்ன அவர்கள், லங்கா சமசமாஜக் கட்சி ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார். ஆசிரியராக கடமையாற்றி வந்த அதாவுத செனவிரத்ன அவர்கள், 1954 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் பிரவேசித்தார். 1970 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெலியத்த தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட போது, லங்கா சமசமாஜக் … Read more