கண்காட்சியை ஆரம்பித்து வைக்க சென்ற ஷிரந்தி ராஜபக்ச: நுவரெலியா மக்கள் கொடுத்த பதிலடி

நுவரெலியாவில் மலர், செடிகள் கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காகச் சென்ற ஷிரந்தி ராஜபக்சவிடம் மக்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். நுவரெலியாவிற்கு மலர் செடிகள் கண்காட்சி இன்று ஆரம்பிக்கவிருந்தது. அந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஷிரந்தி ராஜபகச அங்கு சென்றிருந்தார். இதன்போது அரலியா ஹோட்டல் பெட்ரோல் கொட்டகைக்கு அருகில் உள்ள மக்கள் அவரை பார்த்து ஏளனம் செய்து, சாலையை அடைத்துள்ளனர். இதனால் அவர் விழாவில் கலந்து கொள்ளாமல் மீண்டும் கொழும்பிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராய்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (31) இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணை தலைவருமான காதர் மஸ்தான் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது. இதன்போது மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்களால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் அவை … Read more

மருதானை – டீன்ஸ் வீதியை மறித்து மற்றுமொரு ஆர்ப்பாட்டம்!

சுகாதார அமைச்சுக்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவச்சிகள் மருதானை – டீன்ஸ் வீதியை மறித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சிலரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். 30 வருட சேவையை பூர்த்தி செய்த குடும்ப சுகாதார ஊழியர்களுக்கு விசேட தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. Source … Read more

வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்படும் 

வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் நேற்று (31) நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.   வேகமாக அதிகரித்து வருகின்ற  கடலட்டைப் பண்ணைகளுக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் தற்போயை நிலவரங்களையும், நாட்டிற்கு தேவையான அவசர ஏற்றுமதி வருமானங்களையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாக  கடலில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு … Read more

மீரிஹான போராட்ட பதற்றம் தணியும் முன்னர் மற்றும் ஒரு முக்கிய பொருளின் விலை அதிகரிப்பு!

நாட்டில் பல பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சீமெந்தின் விலையிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.  அதன்படி உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் சீமெந்து பொதிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.  சீமெந்து விற்பனை முகவர்களை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதியாகும் 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகாிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link

பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்க பிரதிநிதிகள் சிலர் இலங்கை பாராளுமன்றம் விஜயம்

பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் தலைவரும் பிரான்ஸ் பாராளுமன்ற செனட் உறுப்பினருமான ஜொஎல் கெரியோ (Joel Guerriau) உள்ளிட்ட பிரான்ஸ் – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்க பிரதிநிதிகள் சிலர் இலங்கை பாராளுமன்றத்துக்கு அண்மையில் விஜயம் செய்தனர். நட்புறவுச்சங்கத்தின் பிரதித் தலைவி செனட் உறுப்பினர் அனிக் ஜக்மன்ட் (Annik Jacquemet), சங்கத்தின் உறுப்பினர் அலன் ஹூபர்  (Alain Houpert) மற்றும் சங்கத்தின் நிறைவேற்று செயலாளர் திருமதி. ஏன் லோரா (Anne Laure) உள்ளிட்டோர் இதன்போது கலந்துகொண்டனர்.   பிரதிநிதிகள் … Read more

சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஏப்ரல்01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் வடக்கு மாகாணத்தை தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல்,சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 … Read more

கடும் அச்சத்தில் ஜனாதிபதி கோட்டபாயவின் ஆஸ்தான ஜோதிடர்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆஸ்தான ஜோதிடரான அநுராதபுரம் ஞானக்கா தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறிய போது தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றைய பதற்றத்தின் போது ஜனாதிபதி மற்றும் இராணுவ தளபதியை அழைத்த ஞானக்கா உடனடியாக தற்போது உள்ள பாதுகாப்பை விடவும் அதிக பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார். காளி அம்மனின் சக்தி உள்ளதாக கூறி மக்களை ஏமாற்றும் ஞானக்காகவுக்கு ஜனாதிபதி … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இலங்கைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஏப்ரல் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: பொத்துவிலிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : … Read more

மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை

நாளை முதல், மின்சாரம் துண்டிக்கப்படும்  நேரம் மட்டுப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இதன்படி, நாளொன்றில் மின் துண்டிப்பு காலம் நான்கு மணி நேரமாக குறைக்கப்படும் என்று அவர் கூறினார். ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இந்த விடயத்தைத் தெரிவித்தார். மூன்று மாதகாலமாக மூடப்பட்டிருந்த கெனியோன் மின் உற்பத்தி நிலையத்தில் மீண்டும்  உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 60 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் … Read more