பங்குச் சந்தை வர்த்தகத்தை இரண்டு மணி நேரமாக மட்டுப்படுத்த முடிவு!

தினசரி வர்த்தக நேரத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை (CSE) தீர்மானித்துள்ளது. அதன்படி, நேற்று (31) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே பங்குச் சந்தை தினசரி வர்த்தகத்திற்கு திறந்திருந்ததுடன், இன்று (01) தினசரி வர்த்தக காலம் 2 மணிநேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்குச் சந்தையில் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைப் பெற்றுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை (CSE) வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

பொலிஸ் ஊடரடங்கு நீக்கம்

கொழும்பில் சில பகுதிகளில் நேற்றிரவு அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் ,கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு கல்கிசை மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளிலும் மற்றும் கம்பாஹ மாவட்டத்தில் களனி பொலிஸ பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் மீண்டும் அறிவிக்கும் வரையில் பொலிஸ் மா அதிபரினால் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு ,இன்று 2022.04.01 அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு … Read more

ஊரடங்கு தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!

கொழும்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் காலை ஐந்து மணியுடன் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   கொழும்பு – மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதியின் இல்லைத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் முன்னெடுத்திருந்த நிலையில், கொழும்பில் பல இடங்களில் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவு, களனி மற்றும் கல்கிலை பொலிஸ் பிரிவுகளில் உடன் அழுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  … Read more

தரகராக செயற்பட வேண்டாம்! – லண்டனில் இருந்து சுமந்திரன் எம்.பிக்கு வேண்டுகோள்

இலங்கை அரசாங்கத்தின் தரகராக செயற்பட வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் விடுதலைப் புலிகள் அமைப்பு சார்பான இணையத்தளம் ஒன்றினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதான தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்கள் சார்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த எம்.ஏ.சுமந்திரனுக்கு அதிகாரம் இல்லை என குறித்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியல் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், எம்.ஏ. சுமந்திரன் லண்டன் வந்த போது தமிழ் … Read more

பல்வேறு துறைகளுக்கு மேலும் மூன்று நாடுகளின் ஒத்துழைப்பு…

வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிநுட்பம் உள்ளிட்ட பல துறைகளை மேம்படுத்துவதற்கு பிரித்தானியா, தென்கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இன்று, (31) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லோர்ட் மைகல் நெஸ்பி (Michael Naseby),  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்த போது, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்திக்கு அரசாங்கத்தின் ஆர்வத்தை பாராட்டினார். சூரிய சக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க வலுசக்தி … Read more

வெடித்தது போராட்டம்! – முக்கிய அமைச்சர் ஒருவரின் வீடும் முற்றுகை?

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடும் சற்று முன்னர் சுற்றி வளைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் போது இராணுவ வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டத்தை தொடர்ந்து கொழும்பில் உடன் அமுலாகும் வகையில் ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, வர்த்தக அமைச்சர் பந்துல … Read more

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார்

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார் . கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் காலமாகியுள்ளார். இறக்கும் போது அவருக்கு 91 வயது. அவர் 1989 ஆம் ஆண்டு கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர் ,பல அமைச்சு பொறுப்புக்களை வகித்துள்ளார்.  இவர் 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி பிறந்தார்.

இலங்கை மத்திய வங்கி பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டிற்கு வழங்கிய நாணய மாற்று அனுமதிப் பத்திரத்தினை இரத்துச் செய்கிறது

பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர்ந்த செலாவணி வீதங்களை வழங்குகின்றது என்று பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களம் 2022.03.30 அன்று பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட்டில் தலத்திலான விசாரணைகளை மேற்கொண்டது. விசாரணைகளில் பிரசன்னா மணி எக்சேன்ஜ் (பிறைவேற்) லிமிடெட் உயர் செலாவணி வீதங்களை வழங்கியுள்ளமை பற்றியும் அதன் மூலம் வாடிக்கையாளர்களிடமிருந்து உரிமம்பெற்ற வங்கிகளினால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த செலாவணி வீதத்திலும் பார்க்க உயர்ந்த வீதங்களில் வெளிநாட்டுச் … Read more

நுகேகொட பிரதான வீதி மூடப்பட்டு பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு (Photos)

நுகேகொட பிரதான வீதி மூடப்பட்டு மக்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அங்கிருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படாமையினால் கொதிப்படைந்த மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதுடன், வீதி மூடப்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையை அவதானிக்க முடிந்துள்ளது. தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் பெருந்திரளானவர்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் நுகேகொடவிலுள்ளவர்களும் மிரிஹான பகுதிக்கு செல்லப்போவதாக தெரிவித்த வண்ணமுள்ளனர். மிரிஹான – … Read more