முற்றுகையிடப்பட்டது ஜனாதிபதி இல்லம் அமைந்துள்ள பகுதி! சம்பவ இடத்தில் பலத்த பாதுகாப்பு: கடும் பதற்ற நிலை (Live)

களத்தில் விசேட  அதிரடிப்படையினர்! துண்டிக்கப்பட்ட இணைய இணைப்புக்கள்..  கொழும்பின் புறநகர் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகாமையில் போராட்டம் இடம்பெற்றுவரும் இடத்தில் சற்றுமுன்னர் விசேட அதிரடிப்படையினர் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையால் போடப்பட்டிருந்த தடுப்புச்சுவர் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடி படையினர் அழைக்கப்படுள்ளனர்.  இதேவேளை குறித்த பகுதியில் இணைய இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது பொலிஸ் தடுப்புச்சுவர் தகர்த்தெறியப்பட்டது..  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் பெருமளவான மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் … Read more

இலங்கையில் பதுக்கி வைக்கப்படும் தங்கம்

நாட்டில் தற்போது தங்கத்திற்கான தட்டுப்பாடு செயற்கையாக ஏற்பட்டுள்ளதென அகில இலங்கை நகை வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிகரித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர்  ஏ.விஜயகுமார் தெரிவித்தார். சில வர்த்தகர்கள் தங்கத்தை பதுக்கி வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  Source link

வீட்டில் இருந்து வேலை செய்யுங்கள்! ஊழியர்களுக்கு பிரதமர் மகிந்த வழங்கியுள்ள அறிவிப்பு

எரிபொருளைச் சேமிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் அவரது அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச  பணிப்புரை விடுத்துள்ளார். இது குறித்து தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர், தடையில்லா மின்சாரம் இல்லாத போதிலும், அதிகாரிகள் தங்களால் இயன்றதைச் செய்து வருவதாகக் கூறினார். இந்த நெருக்கடியினால் மக்கள் படும் இன்னல்களை அரசாங்கம் என்ற வகையில் நாம் உணர்ந்து கொண்டுள்ளதோடு, அந்த வரம்புகளை போக்குவதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு … Read more

ஸ்டெலிங் பவுண்க்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியில் இலங்கை ரூபா

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் விற்பனை விலை 394 ரூபாவும் கொள்வனவு விலை 379 ரூபாவாகும் பதிவாகி உள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 299 ரூபாவாகவும் கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – சித்தியடைந்த 9,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி

2021 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட அடிப்படையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தியடைந்த 9,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கப்படவுள்ளது. ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தில் அங்கத்தவராகவுள்ளவர்களின் பிள்ளைகளுக்கும் இப் புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. 15,000 ரூபாய் பெறுமதியான இப்புலமைப்பரிசிலைப் பொறுவதற்கான விண்ணப்ப படிவங்களை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைமைக் காரியாலயத்திலும் மற்றும் பிராந்திய காரியாலயத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். மே மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்ப படிவத்தை பூரணப்படுத்தி … Read more

தலை சுற்றவைக்கும் அப்பிள் பழத்தின் விலை

இறக்குமதி வரி உயர்வால் அப்பிள்  ஒன்றின் விலை ரூ.180 ஆக உயர்வடைந்துள்ளது.  மேலும், இறக்குமதி செய்யப்படும் தோடம்  பழத்தின் விலை 90 முதல் 100 ரூபாய் வரை உள்ளதாக பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். Source link

யாழ். கொவிட் சிகிச்சை நிலைய மோசடி குறித்த உடனடி விசாரணைக்கு பிரதமர் பணிப்பு

யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணித்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்களை இன்று (31) தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் உடனடி கவனம் செலுத்துமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்ட மூன்று இடைத்தங்கல் முகாம்களில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாயமாகியிருந்தமை கணக்காய்வு அறிக்கையில் அம்பலமாகியது. வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண … Read more

உலகளவில் கொரோனா தொற்று – 48,71 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 48,71 கோடியை கடந்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 கோடியே 71 இலட்சத்து 62 ஆயிரத்து … Read more

அமைச்சரவையிடம் லிட்ரோ நிறுவனத்தின் கோரிக்கை: மீண்டும் அதிகரிக்குமா எரிவாயு விலை..!

சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் தமது நிறுவனம் அமைச்சரவையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி ஊடகப் பிரிவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், சமையல் எரிவாயுவிற்கான விலையை அதிகரிப்பது குறித்து அமைச்சரவை இதுவரை அனுமதி வழங்கவில்லை. சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு தற்போது அதிகாரம் கிடையாது. விலையை அதிகரிப்பதற்கான … Read more

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை இன்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,225 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,233 ஐ விட சற்று குறைவாகும். இதனால், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 இலட்சத்து 24 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது. … Read more