இனி நான்கு மணிநேரமே மின்வெட்டு! இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவிப்பு

ஏப்ரல் 2ஆம் திகதிக்குப் பிறகு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  நேரத்தைக் குறைக்கக் கூடியதாக இருக்கும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 2ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் எனக் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. எனவே, 2ஆம் திகதிக்குப் பிறகு தற்போதைய … Read more

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுப்பாய்வின் படி மட்டக்களப்பு கல்வி வலயம் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற அடிப்படையில், இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வலயக் கல்விப் பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையிலுள்ள 100 கல்வி வலயங்களுள் மட்டக்களப்பு கல்வி வலயம் 2 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து 2,050 … Read more

பெரும் திண்டாட்டத்தில் நாட்டு மக்கள் – களியாட்ட நிகழ்வில் நாமல் உட்பட தென்னிலங்கை அமைச்சர்கள்

நாட்டு மக்கள் உணவுக்காக போராடி வரும் நிலையில் தென்னிலங்கை அமைச்சர்கள் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  கட்டுநாயக்க விமான நிலையத்தின் உயர் அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்டு வீட்டு தொகுதியில் அமைச்சர்கள் பலருக்கு மது விருந்து வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, பிரசன்ன ரணதுங்க, பவித்ரா வன்னிஆராச்சி மற்றும் ஷெஹான் சேமசிங்க உட்பட அமைச்சர்களுக்கும், கம்பஹா மாவட்டத்தின் அரசாங்க உள்ளூராட்சி நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுக்காக  விசேட உணவு மற்றும் மதுபான விருந்து ஒன்று நேற்று இரவு நடத்தப்பட்டுள்ளது. … Read more

Applications are invited from the children of Estate workers

Applications are invited from the children of Estate workers  Applications are invited from the children of estate workers, for award of scholarships by the Ceylon Estate Workers’ Education Trust (CEWET).   These scholarships are available for G.C.E. Advanced Level, Undergraduate courses and for students undergoing Vocational/Technical education in any other Government Technical Colleges in Sri Lanka. 2.     … Read more

முழுமையாக ஸ்தம்பிக்கவுள்ள இலங்கை – அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கை வரலாற்றில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார வீழ்ச்சியைக் குறிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் 13 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன. கடவுளின் உதவியால் மழை இல்லை என்றால், எரிபொருள் இல்லை என்றால் புத்தாண்டை இருளில் கழிக்க வேண்டியிருக்கும் என மின் பொறியாளர்களுக்கு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் டீசல் நெருக்கடி தொடருமானால் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் இருந்து நீக்கப்படும் … Read more

இன்றும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 31ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் வடக்கு மாகாணத்தையும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களையும் தவிர நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் … Read more

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். 5,000 குளக்கட்டுகளை புனரமைக்கும் இரண்டாம் கட்டப் பணிகளில் கலந்துக்கொண்டு நேற்று(30) அலரிமாளிகையில் வைத்து உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். குருநாகல் நிகவெரட்டிய தேர்தல் தொகுதியில் கொபெய்கனே மீகஸ்வௌ பிரதேசத்தில் உள்ள குளத்தின் புனரமைப்பு பணிகள் கௌரவ பிரதமரினால் இணையவழி ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் … Read more

ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின் விநியோகம்

ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திர வர்த்தக வலயங்கள், மின்சார நிலையங்களை அண்டிய பகுதிகள், கைத்தொழில் பேட்டைகள் உள்ளிட்ட நாட்டின் 191 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த 191 இடங்களுக்கு மின்சாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படாத இடங்கள் பற்றிய விபரங்கள் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் இணைய … Read more

திடீரென இளம் பெண்ணொருவர் உயிரிழப்பு

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கீரிமலை – கூவில் பகுதியை சேர்ந்தவரும் , கெப்பற்றிக்கொலாவ குடும்பநல உத்தியோகஸ்தருமான கந்தசாமி நிதர்சினி (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  கெப்பற்றிக்கொலாவையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் சுகவீனம் காரணமாக கீரிமலையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 26ஆம் திகதி … Read more

இலங்கை ஜனாதிபதியின் பேஸ்புக் பக்கத்தில் செய்யப்பட்டுள்ள திடீர் மாற்றம்! (Video)

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் பதிவுகளில் கருத்துக்கள் பதிவிடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பேஸ்புக் பதிவுகளில் பயனர்களால் கருத்துகளைப் பதிவு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து சமூக ஊடக ஆய்வாளர் சஞ்சன ஹத்தொட்டுவ தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “2010 ஜனவரி 26ம் திகதி முதல் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேஸ்புக் பக்கங்களை ஆய்வு செய்து வருகின்றேன். யாரும் … Read more