தொற்றுநோயியல் பிரிவு அறிக்கையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) கொவிட் தடுப்பூசிகள் 4 ஆயிரத்து 125 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1 கோடியே 70 இலட்சத்து 6 ஆயிரத்து 94 பேர் முதல் டோஸையும்,1 கோடியே 44 இலட்சத்து 13 ஆயிரத்து 773 பேர் இரண்டாவது டோஸையும்,78 இலட்சத்து 04 ஆயிரத்து 499 பேர் பூஸ்டர் டோஸையும் பெற்றுள்ளனர். இதில் ஞாயிற்றுக்கிழமை(27) 2 ஆயிரத்து 779 பேருக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டுள்ளது .கடந்த ஞாயிற்றுக்கிழமை(27) பைசரின் முதல் டோஸை 379 பேருக்கும், இரண்டாவது டோஸை 758 பேருக்கும் வழங்கப்பட்டது. மேலும் சினோபார்மின் முதல் டோஸை 21 பேரும், இரண்டாவது டோஸை 188 பேரும் பெற்றுள்ளனர் . இது வரையில் மொத்தமாக பைசரின் முதல் டோஸ் 25 இலட்சத்து 14 ஆயிரத்து 565 பேருக்கும், இரண்டாவது டோஸ் 8 இலட்சத்து 78 ஆயிரத்து 554 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன.சினோபார்மின் முதல் டோஸை 1 கோடியே 20 இலட்சத்து 47 ஆயிரத்து 987 பேரும், இரண்டாவது டோஸை 1 கோடியே 11 இலட்சத்து 73 ஆயிரத்து 453 பேரும் மொத்தமாக பெற்றுள்ளனர்.அஸ்ட்ராசெனிக்காவின் முதல் டோஸ் 14 இலட்சத்து 79 ஆயிரத்து 631 பேருக்கும், இரண்டாவது டோஸ் 14 இலட்சத்து 18 ஆயிரத்து 593 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.8 இலட்சத்து 04 ஆயிரத்து 801 பேர் மொடோனா தடுப்பூசியின் முதல் டோஸையும்,7 இலட்சத்து 87 ஆயிரத்து 361 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்ஸ்புட்னிக் வீ தடுப்பூசியினை 1 இலட்சத்து 59 ஆயிரத்து 110 பேர் முதல் டோஸையும், 1 இலட்சத்து 55 ஆயிரத்து 812 பேர் இரண்டாவது டோஸையும் இது வரையில் மொத்தமாக பெற்றுள்ளனர்.