ரயில் சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்

நேற்று (29) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட ரயில் சாரதிகளின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று (29) இரவு போக்குவரத்து அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி கலந்துரையாடலின் பின்னர் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். புகையிரத பயணச் சீட்டுக்களின் கட்டணத்தை தன்னிச்சையாக அதிகரிக்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து ரயில் சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் மேலதிக நேர சேவையை … Read more

'பசுமையான தேசம்' தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை 2022 வடக்கு நோக்கி செடி நாட்டுதல்

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்துக்கமைய, ‘பசுமையான தேசம்’ தேசிய வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கை – 2022 வடக்கு நோக்கி செடி நாட்டுதல் என்ற திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் நேற்றைய தினம் (29) யாழ் நகர் கிழக்கு சமுர்த்தி வங்கி அலுவலகத்தில் இடம்பெற்றன. கொவிட் பெருந்தொற்று எல்லா நாடுகளிலும் சமூக, பொருளாதாரத் துறைகளில் பாரிய தாக்கங்கள் ஏற்படுத்திய நிலையிலும், இந்த நெருக்கடியிலிருந்து உருவான சவால்களை எதிர்கொள்வதற்காகவும், பசுமை சமூகப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக இலங்கையை மாற்றுவதற்கான ஜனாதிபதியின் … Read more

ரஷ்ய படைகள் மீளப்பெறப்பட்டமை சூழ்ச்சியாகும்- இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சு!(video)

உக்ரைனில் மீண்டும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தயார்படுத்தலுக்காகவே ரஷ்ய படைபிரிவுகள் பெலாரஸ் திரும்புவதாக இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. டொனெஸ்ட்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் நடத்துவதில் ரஷ்யா கவனம் செலுத்தி வருகிறது. இந்தநிலையில் பெரும் இழப்பைச் சந்தித்த படைப் பிரிவுகள் ரஷ்யாவிற்கும் பெலாரஸுக்கும் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இதேவேளை ரஷ்யா உள்ளூர்வாசிகளுக்கு எதிரான ‘சட்டவிரோத செயல்களை’ தொடர்கிறது என்று உக்ரைன் குற்றம் சுமத்தியுள்ளது. உக்ரைன்,தென்கிழக்கின் சபோரிஜியா மற்றும் தெற்கில் … Read more

பிம்ஸ்டெக்கின் அமைச்சர்கள் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) 18வது அமைச்சர் கூட்டம் 2022 மார்ச் 29ஆந் திகதி பண்டாரநாயக்கா நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் தலைமையில் கலப்பு முறையில் நடைபெற்றது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த அமைச்சர்கள் கூட்டத்தில் நேரில் பங்கேற்ற அதே வேளை, மியன்மார் வெளியுறவு அமைச்சர் இணைய வழியில் பங்கேற்றார். கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று உரையாற்றிய வெளிநாட்டு … Read more

உலக நெருக்கடியினால் வீழ்ச்சியடையும் பொருளாதாரத்தையும், மக்களையும் மேம்படுத்துவதற்கு நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு அவசியம்- பிம்ஸ்டெக் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

தற்போது நிலவுகின்ற உலகளாவிய நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களை வளப்படுத்துவதற்கும் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். சவால்கள் இருந்தபோதிலும், பிம்ஸ்டெக் நாடுகளின் எதிர்காலம் தெளிவாகவும் வலுவாகவும் இருப்பதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தை மையமாகக்கொண்டு, இணைய வழியாக (Online)  இடம்பெற்ற “வங்காள விரிகுடா சார்ந்த பல்தரப்பு தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு” (பிம்ஸ்டெக்) … Read more

புதிய உச்சம் தொட்ட தங்க விலை! தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு – இலங்கையில் நகை வாங்குவோருக்கு ஓர் தகவல்

வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை இலங்கையில் இரண்டு இலட்சம் ரூபாவாக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இன்றைய தினம் குறித்த விலை பதிவாகியுள்ளதாக தங்க வியாபாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இதேவேளை 22 கரட் தங்கத்தின் விலை ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரியவருகிறது. இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் காரணமாகவே இவ்வாறு தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக … Read more

பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம்

முதல் மற்றும் இரண்டாவது டோஸாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இலங்கையில், சிறுவர்கள் தவிர, ஏனையவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் மாத்திரமே வழங்கப்படுகின்றது பொதுவாக சில நாடுகளுக்கு செல்வதாயின் பைஸர் தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் என்பதனால், இவ்வாறான சந்தர்ப்பம் வெளிநாடு செல்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஊடகவியலாளர்களுக்கு இந்தோனேசியாவில் புலமைப் பரிசில்கள்

இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் வெகுஜன ஊடகத்துறையில் தொடர்புகளை மேற்கொள்வதற்கு இரு நாட்டு வெகுஜன ஊடக அமைச்சர்கள் உடன்பட்டுள்ளனர். இலங்கை ஊடகவியலாளர்களுக்கும் ஊடகத்துறை கற்கை நெறியை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தோனேசியாவில், சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும அந் நாட்டு தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் ஜோனி ஜி ப்லெட்டி உள்ளிட்ட ஊடகத்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை மூலம் ஊடகத்துறை … Read more

இலங்கையில் முதலீடு: கோட்டாவின் கருத்துக்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதங்கம் (Video)

மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை 30 வருடகால யுத்தத்தின் போதும் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டனர். இருந்தாலும் அவர்கள் எப்போதும் நாட்டை விட்டு வெளியேறவில்லை. இனவழிப்பு ஆரம்பித்ததிலிருந்துதான் மக்கள் புலம்பெயரத் தொடங்கினர் என புலம்பெயர் தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பொருளாதார நிலைமை அதள பாதாளத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில் பொருளாதார நிலைமையினை கட்டியெழுப்புவதற்குப் புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையினை நீக்கி அவர்களின் முதலீடுகளை வரவேற்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் … Read more

 ஜனாதிபதி தலைமையில், பிம்ஸ்ரெக் அரச தலைவர்கள் மாநாடு

 ஜனாதிபதி தலைமையில் ,பிம்ஸ்ரெக் அரச தலைவர்கள் மாநாடு இன்று இடம்பெறவுள்ளது. பிம்ஸ்ரெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இன்று  இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இம்முறை மாநாட்டிற்குத் தலைமை தாங்குகின்றார். பங்ளாதேஷ், பூட்டான், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றார்கள். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வரும பிம்ஸ்ரெக் அமைப்பின் மாநாடு இன்றுடன் முடிவுக்கு வருகின்றது.