பாதுகாப்பு அமைச்சின் ஊடக அறிக்கை

இந்திய அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட கடல்சார் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் சில அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களால் தவறாகப் சித்தரிக்கப்பட்டுள்ளது போன்று இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறையோ அல்லது அச்சுறுத்தலையோ ஏற்படுத்தாது. இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும்; மிதக்கும் தளமானது ஆண்டு தோறும் கப்பல் பழுதுபார்ப்பு வேலைகளுக்கு வெளியாருக்கு கொடுக்கப்படும் 600 மில்லியன் ரூபா செலவை மீதப்படுத்தக் கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டமானது 2015ஆம் ஆண்டு முதல் வரைவில் இருந்து வருகின்ற ஒன்றாகும். டோர்னியர் உளவு … Read more

பிரித்தானிய மக்களுக்கு அவசர அறிவிப்பு! – £20 – £50 நோட்டுகள் செல்லுபடியாகும் கால எல்லை நிர்ணயம்

பிரித்தானியாவில் தற்போது பாவனையில் இருக்கும் £20 மற்றும் £50 நோட்டுகள் செப்டம்பர் 30ம் திகதிக்கு பின்னர் செல்லுபடியாகாது என பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) அறிவித்துள்ளது. ஜே.எம்.டபிள்யூ டர்னர் மற்றும் கணிதவியலாளர் ஆலன் டூரிங் ஆகியோரைக் கொண்ட காகிதத் தாள்களுக்குப் பதிலாக நீடித்து நிலைத்திருக்கும் பிளாஸ்டிக் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டுவர பேங் ஒப் இங்கிலாந்து (The Bank of England) தீர்மானித்துள்ளது. இந்நிலையில், தங்களின் காகித £20 மற்றும் £50 நோட்டுகளை செலவழிக்க … Read more

இலங்கை மின்சார சபையின் அதிரடி – கட்டணங்கள் செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு மின் தடை

பல மாதங்களாக மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கான மின்சாரத்தை துண்டிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, மின்கட்டணத்தை செலுத்தாத வீடுகளின் பட்டியலை சேகரித்து அந்த நபர்களின் மின்சார இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல வீடுகளில் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று காரணமாக சில வாடிக்கையாளர்கள் பல மாதங்களாக கட்டணம் செலுத்தவில்லை எனவும், அவர்களுக்கு சில காலம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் … Read more

வெளிநாடுகளில் தகாத தொழில் ஈடுபடுத்தப்படும் இலங்கை பெண்கள்

இலங்கைப் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டு வேலைகளுக்கு அனுப்புவது என்ற போர்வையில் தகாத நடவடிக்கையில் ஈடுபடுத்தும் வலையமைப்பு தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று டுபாய் சென்றுள்ளது. குற்ற விசாரணை திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றவியல் பிரிவினரால் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களும் தரகர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைப் பெண்களை டுபாய், ஓமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப் பணிப்பெண்ணாக … Read more

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு 10 ஆம் திகதிக்கு முன்னர் உரம்

சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவு, வளமான தேசத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சேதனைப் பசளை விநியோகம் தொடர்பான மாவட்ட மட்ட குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (28) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 32 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக பயிர்ச்செய்கைக்கான சேதனப்பசளையினை எவ்வாறு விநியோகிக்க முடியும் என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் விவசாயிகளுக்கான உரத்தினை வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட … Read more

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியால் இணைய சேவைகள் பாதிப்பு

இலங்கையில் நீண்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுவதால், இணைய சேவைகளை வழங்குவதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இன்மையால் 3G மற்றும் 4G வலையமைப்பில் குறுக்கீடு குறைப்பு அமைப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொலைபேசி கோபுரங்களின் ஜெனரேட்டர்களுக்கான டீசல் வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்படும் போது தொலைபேசி கோபுரங்களில் அவற்றின் 3G மற்றும் 4G குறுக்கீடு குறைப்பு அமைப்புகள் செயலிழக்கப்படும். இதன் காரணமாக … Read more

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம் வரையான கடற்பரப்புகளில் மிதமான அலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள … Read more

இந்திய எரிபொருளால் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

இலங்கையில் கடந்த சில நாட்களாக விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கான எரிபொருள் தரமற்றதென சாரதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதற்கு முன்னர் முழுமையான எரிபொருள் நிரப்பிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் அளவை தற்போது மேற்கொள்ள முடியவில்லை என சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர். எரிபொருள் விரைவாக முடிந்து விடுவதாகவும் பயணிக்கும் கிலோ மீற்றர் அளவு மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் பெட்ரோலின் நிறங்களும் வித்தியாசமாக உள்ளது. இரண்டு சுற்றுகள் பயணிக்கும் போதே எரிபொருள் முடிந்து விடுவதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் தாம் கடுமையான … Read more

மக்களின் நிலை குறித்து வருத்தமடைகின்றேன்! – சமல் ராஜபக்ஷ கவலை

மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். “தன்னால் இன்னும் கிராமத்திற்கு செல்ல முடிகின்ற போதிலும் மக்கள் வரிசையில் நிற்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பதவி விலகுவதில் அர்த்தமில்லை எனவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் நிதியை … Read more

மக்கள் கொந்தளிப்பு! – நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களில் திடீர் மாற்றம்

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது வாகனங்களில் இருந்த ‘நாடாளுமன்ற உறுப்பினர்’ அடையாளங்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பலகைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அடையாளம் காணும் வசதிக்காக நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டன. எவ்வாறாயினும், இந்த நாட்களில் நாடு முழுவதும் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.   Source link