இந்திராகாந்தியின் இரகசிய திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் மோடி! ஆசியாவில் நடக்கும் அரசியல் ஆட்டம்…!

கிடைத்துள்ள அரிய வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா, இலங்கை தமிழர் தீர்வு விடயத்தில் தமது உச்சக்கட்ட இராஜதந்திரத்தை பயன்படுத்திக்கொள்ளுமா? இந்த கேள்வியைக் கேட்கும் போது, அவ்வாறு என்ன வாய்ப்பு கிடைத்திருக்கிறது? என்பதைப் பலரும் வினவலாம். சிலர் சந்தேகத்துடன் ஏற்றுக்கொள்ளலாம். இந்தநிலையில் முன்னைய காலத்தைக் காட்டிலும் தற்போது இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பம் பொன்னான சந்தர்ப்பம் என்றே கூறவேண்டும். இதுவரையான காலப்பகுதியில் தமிழர் விடயத்தில் இந்தியா, இலங்கையைக் கையாண்ட விதம் இறுதியில் இந்தியாவுக்கே பாதமாகவே முடிவடைந்தது. இந்தியத் தமிழர்களை இந்தியா … Read more

இலங்கைக்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி வழங்கப்படும்… சவூதி தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி (Abdulnasser Hussain Al-Harthi) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் தெரிவித்தார். தனது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு இந்நாட்டில் இருந்து வெளியேறிச் செல்லும் அப்துல் நாசர் இன்று, (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அவர்களைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தார். ஹுசைன் அல் ஹார்தியின் பதவிக்காலத்தில் அவர் வழங்கிய ஒத்துழைப்பிற்காக ஜனாதிபதி அவர்கள் … Read more

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையிலான பேச்சுக்களை இந்தியா வரவேற்கிறது

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரா. சம்பந்தன் அவர்கள் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேராளர்களை மார்ச் 28ஆம் திகதி சந்தித்திருந்தார். 2.         மார்ச் 25ஆம் திகதி அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்றிருந்த சந்திப்பு உள்ளிட்ட அண்மைய அபிவிருத்திகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேராளர்களால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விவகாரங்கள், காணாமல்போனோர் விவகாரங்கள், 13ஆவது … Read more

ஆசியாவில் முதலிடத்தை பிடித்த இலங்கை! உலகிலேயே ஆறாவது இடம் – பட்டியல் விபரம் வெளியானது

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் பணவீக்கம் 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிரபங்கள் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் இலங்கையின் பணவீக்கம் 55 சதவீதமாக உயர்ந்தது. இந்தத் தரவு 24/03/2022 திகதிய கணக்கிடப்பட்டது. உலகிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக வெனிசுலா அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்களுக்கமைய … Read more

வாகன விபத்துக்களில் 6 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணித்தியாலங்களினுள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மாதம்பே, கடுபொத, தங்கல்ல, அலவ்வ மற்றும் நாரம்மல ஆகிய பிரதேசங்களில் இந்த வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரும் அடங்குவர். இதேவேளை, ஹொரபே புகையிரத நிலையதத்தில் வைத்து புகையிரதயத்துக்கு ஏற முற்பட்ட ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்ததனால்  ரயிலில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ராகம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான ஒருவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பயிர் செய்கைக்கு பயன்படுத்தாத காணிகள், பசுமை வீட்டு தோட்ட வீட்டுப்பயிர்ச்செய்கைக்கு ……..

இதுவரையிலும்,  விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாத பல காணிகள் அரச நிறுவனங்களின் கீழ் காணப்படுகின்றன. அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘பசுமை வீட்டுத் தோட்டத் திட்டம் – 2022’ என்ற திட்டத்திற்காக இந்த காணிகளை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள்பட்டுள்ளது இது தொடர்பான அனைத்து தகவல்களும் காணி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சர்; எஸ். எம் சந்திரசேன கூறினார். ‘பசுமை வீட்டுத் தோட்டத் திட்டம்; – 2022’  தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற … Read more

ரணிலை பிரதமராக நியமிக்கும் திட்டம்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பகிரங்க தகவல் (Video)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு எந்தத்திட்டமும் கிடையாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்த விடயத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு, Source link

பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் – இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேச்சுவார்த்தை

கொழும்பில் நடைபெற்று வருகின்ற 5வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை 2022 மார்ச் 28ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். உச்சிமாநாட்டின் பக்க அம்சமாக, கொழும்பிற்கும் புது டில்லிக்கும் இடையிலான பரந்த அளவிலான அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை இரு அமைச்சர்களும் மீளாய்வு செய்தனர். உறவுகளை ஆய்வு செய்த … Read more

வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திற்கு புதிய கௌரவ தூதுவர் நியமனம்

வியட்நாமின் ஹோ சி மின் நகரிற்கான இலங்கையின் கௌரவ தூதுவராக ஷெர்லி மார்குரைட் ஹொப்மன் அலுவிஹாரே இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். வியட்நாம் சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சின் தூதரக விவகாரங்கள் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து 2022 மார்ச் 23 ஆந் திகதி ஹா நோயில் அவர் தனது பதவியைப் பெற்றுக் கொண்டார். ஹொப்மன் அலுவிஹாரே கொழும்பு மெதடிஸ்ட் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க அனுபவத்தைப் பெற்ற அவர், வோக்கர்ஸ் … Read more

இலங்கையில் இனி நடைமுறைக்கு வரும் தடை! மீறினால் கைது

உரிய அனுமதியின்றி தென்னை மரம் வெட்டுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், சிலோன் ரீ நாமம் போல, சிலோன் கொக்கனட்டுக்கும் (தேங்காய்) சர்வதேச சந்தையில் சிறந்த கேள்வி உள்ளது. இது எமது பொருளாதாரத்துக்குப் பெரும் பலமாக அமையும். தேயிலை தொழில்துறைக்கு நிகரான வருமானத்தை இதன்மூலமும் ஈட்ட முடியும். மரம் வெட்டுதல் கட்டுப்பாட்டுச் சட்டத்துக்குள் தென்னை மரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் … Read more