கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பொது மக்களை ………

கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பொது மக்களை விழிப்புணர்வூட்டும், ஆர்வமூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் (22) பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பதி முன்வைத்த யோசனை குறித்துப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றது. தடுப்பூசி … Read more

புத்தாண்டுக்கு அரசு வழங்கும் கொடுப்பனவு

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை இரண்டு மாத்ஙகளுக்கு வழங்க நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் அத்தியவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக விளிம்பு நிலையில் வாழும் மக்கள் பெரும் … Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் – கடற்றொழில் அமைச்சருக்கு இடையே விசேட சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (28) நடைபெற்றது. பருத்தித்துறை உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கனவே இந்தியா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் இதன்போது விரிவாக ஆராய்ந்தனர். இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி எல்லை தாண்டி வந்து இலங்கை … Read more

தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசிய சிங்கள ஊடகவியலாளர் : கடும் கோபமடைந்த ரணில்

இனவாத கருத்துக்களை முன்வைப்பதற்கு முயன்ற சிங்கள தொலைக்காட்சியின் அறிவிப்பாளருக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையான பதில்களை வழங்கியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது முன்வைக்கப்பட்ட விடயங்களை விமர்சித்து இலங்கை பிரதான சிங்கள தொலைகாட்சியின் அறிவிப்பாளர் ஒருவர் இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க  சிங்கள தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது … Read more

கடற்பரப்புகளில் வானிலை கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 29ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது … Read more

இன்று மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து வெளியான அறிவிப்பு (செய்திப்பார்வை)

இன்றைய தினம் அனைத்து வலயங்களிலும் 7 மணித்தியாலங்களுக்கு அதிக நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.  எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்துண்டிப்பு நேரத்தை அதிகரிக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, P முதல் W வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இன்று காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையான காலப்பகுதியினுள் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு முன்னெடுக்கப்படவுள்ளது. இதேவேளை, மேற்குறித்த வலயங்களில் மாலை 6.30 மணி முதல் இரவு … Read more

இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர் அமைப்புகள் மறுப்பு!

இலங்கையில் முதலீடுகளை செய்ய பிரித்தானிய புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயாட்சிக்கு இலங்கை அரசாங்கம் உடன்பட வேண்டும் என புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ள பத்து புலம்பெயர் அமைப்புக்கள் இலங்கையில் முதலீடு செய்ய மறுத்துள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ் இனப்படுகொலையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு வடக்கு, கிழக்கை தனியான பிரதேசங்களாக … Read more

ரணிலுக்கு இணக்கம் வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!

தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில வாரங்களாக இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல்களில் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எவ்வாறாயினும், தேசிய அரசாங்க நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது கூறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. … Read more

பொருளாதார ரீதியில் திவாலான நிலையில் இலங்கை! – மகிந்தவின் நெருங்கிய சகா தகவல்

நாடு பொருளாதார ரீதியாக பலவீனமடைந்து வங்குரோத்து நிலையில் இருக்கும் போது கைச்சாத்திடப்படும் உடன்படிக்கைகள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மீரிகம, மினிஒலுவ வித்யாவாச பிரிவேனாவில் இன்று அரசாங்கத்தின் 11 அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் ராமண்ணா மகா நிகாயாவின் தலைவர் வண. மகுலேவே விமல மகாநாயக்க தேரரை சந்தித்தனர். பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். … Read more

அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்கவில்லை! – சுமந்திரன் எம்.பி

அரசாங்கத்துடன் இணைந்து பயணத்தை ஆரம்பிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பு இந்திய இல்லத்தில் இன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் … Read more