அரசாங்கம் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு!

மருத்துவ உபகரணங்கள் சிலவற்றுக்கு திருத்தங்களுடன் ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிவிசேட வர்த்தமானி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. கண் வில்லைகள், உலோக ஸ்டென்ட்கள், இரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு அமைப்புகள், சோதனை கீற்றுகள் (test strips) மற்றும் ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு இவ்வாறு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   வர்த்தமானியை பார்வையிட… Source link

பிம்ஸ்டெக் சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் (பிம்ஸ்டெக்) சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் இன்று, 2022 மார்ச் 28ஆந் திகதி இலங்கையின் தலைமையில் கலப்பு முறையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கையின் வெளியுறவுச் செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, தனது ஆரம்ப உரையில், பொருளாதார மற்றும் புவிசார் மூலோபாய முக்கியத்துவத்தின் காரணமாக வங்காள விரிகுடா சர்வதேச அரசியலில் இன்று முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது … Read more

2021 உயர்தரப் பரீட்சை: நடன, சங்கீத பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை நாளை ஆரம்பம்

2021கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நடன மற்றும் சங்கீத பாடத்துக்குரிய செயன்முறைப் பரீட்சை நாளை (29) முதல் ஆரம்பமர்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப் பரீட்சை ஏப்ரல் 8ம் திகதி வரை இடம்பெறும். உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்பம், பொருளியல் தொழில்நுட்பம், மனைப்பொருளியல், நாடகம் மற்றும் போன்ற பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை புத்தாண்டு விடுமுறையின் பின்னர் இடம்பெறும். நாளை ஆரம்பமாகும் செயன்முறைப் பரீட்சைக்காக மாத்திரம் அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அனுமதிப்பத்திரம் கிடைக்கப் பெறாதவர்கள் இலங்கை … Read more

நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

மின்சார கட்டணம், எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   Source link

யாழ்ப்பாணக் கலாச்சார மத்திய நிலைய திறப்பு விழா (Video)

யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலைய திறப்பு நிகழ்வு தற்போது சிறப்பாக இடம்பெற்று வருகிறது. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ். பொது நூலகத்தின் அருகில் இந்த கலாச்சார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த கலாச்சார மத்திய நிலையம் குறித்து அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1.6 பில்லியன் ரூபா இந்திய நிதியுதவியின் கீழ் 2016ஆம் ஆண்டு இதற்கான கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. மேலும் கலாச்சார … Read more

மட்டக்களப்பில் டெங்கு: நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு  

மட்டக்களப்பு மாவட்டத்தில் ,டெங்குநோய் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. கடந்த மார்ச் 12 ஆந் திகதி தொடக்கம் மார்ச்சு 18 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்குநோய் தாக்கத்திற் குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு, வீடுகளில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்குநுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் ,சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு , பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் பொது மக்ளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். … Read more

மெல்பேர்னில் உள்ள புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனமான ஐ க்ரீன் டேட்டா முப்பத்திரண்டு இலங்கை மென்பொருள் பொறியியலாளர்களை ஆட்சேர்ப்பு  

அவுஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்காக புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனமான ஐ க்ரீன் டேட்டாவினால் வேலை அனுமதிப்பத்திரத்தில் அண்மையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 32 அதி திறமையான மென்பொருள் பொறியியலாளர்கள் அண்மையில் மெல்பேர்னில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு விஜயம் செய்தனர். மெல்போர்னைத் தலைமையிடமாகக் கொண்ட ஐ க்ரீன் டேட்டா, 2018 இல் வணிகத்தைத் தொடங்கியதுடன், வங்கி மற்றும் நிதிச் சேவைக் களத்தில் குறிப்பிட்ட கவனம் செலுத்தும் கிளவுட், டேட்டா மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை மையமாகக் கொண்ட நிறுவனமாகும். குறுகிய … Read more

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல் : 3 மாதங்களில் ஏழாயிரத்தை தாண்டிய தொற்றாளர்கள்

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதத்தில் 5 ஆயிரத்து 397 பேராகப் பதிவாகியுள்ளனர். பெப்ரவரி மாதத்தில் 1,826 நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 725 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய 1,433 பேர் கொழும்பு மாவட்டத்தில் … Read more