இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாக மாறுகிறதா இலங்கை?

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி காரணமாக பெரும் நெருக்கடி நிலையில் அரசாங்கம் சிக்கியுள்ளது. இந்நிலையில் எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் தொடர்ந்தும் திணறி வருகின்றனர். இலங்கை கடற்பரப்பில் அனைத்து விதமான பொருட்களுடன் பல கப்பல்கள் நங்கூரமிப்பட்டுள்ள போதிலும், அவற்றை இறக்க போதிய டொலர் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிராந்திய நாடான இந்தியாவின் பெரும் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது. ஏற்கனவே பெருந்தொகையான கடன்களையும், உதவிகளையும் பெற்றுள்ளன. இந்நிலையைில் … Read more

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கையில் வரவேற்பு

இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்ரெக் மகாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கை வருகை தந்துள்ளார். இவருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் 3 உயர் அதிகாரிகளும் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்திய விமானப் படைக்கு சொந்தமான விஷேட விமானத்தில் வருகை தந்த இவர்களை அமைச்சர்களான பிரசன்ன ரனதுங்க, காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்டோர் இலங்கை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பு…

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சங்  (Julie Chung)  தெரிவித்தார். ஜூலி சங் அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கும் இடையில்  இன்று, (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் (Victoria … Read more

வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!

நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள்  வேகமாக  அதிகரித்துச் செல்கின்றது.  வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.  அதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூ. 185,000 ஆக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை சுமார் 170,000 ரூபாவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, சந்தையில் தங்கத்துக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Source link

பேரீச்சம்பழத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு

எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு முஸ்லிம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் பேரீச்சம்பழம் இறக்குமதிக்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள ஒரு கிலோவுக்கு 200 ரூபா என்ற விசேட வர்த்தக பொருட்கள் வரியில், ஒரு கிலோவிற்கு 1 ரூபா மாத்திரம் அறிவிடும் வகையில் இந்த வரியை 199 ரூபாவாக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமரினால் ,2022 மார்ச் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 2007 இலக்கம் 48 இன் கீழான விசேட வர்த்தக … Read more

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய சவுதி அரேபியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, 2022 மார்ச் 19 முதல் 21 வரை சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அவர்கள் 2022 மார்ச் 14ஆந் திகதி வெளிவிவகார அமைச்சர் மட்டத்தில் இலங்கைக்கு மேற்கொண்ட முதலாவது இருதரப்பு விஜயத்தைத் தொடர்ந்து இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இந்த விஜயத்தின் போது, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அடெல் பின் அஹமட் அல்-ஜுபைருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட … Read more

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

நாட்டிற்கு ஒரு தொகுதி லிட்ரோ எரிவாயுவை விநியோகிப்பது தொடர்பில் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 3,500 மெட்ரிக் தொன் எரிவாயு தாங்கிய கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தது. இந்த நிலையில் நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயுவினை விரைவில் நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.  அத்துடன், நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கும் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, … Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்…

மூன்று நாள்  உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) இன்று, (28) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்தார். கொழும்பில் இன்று தொடங்கும் ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திரு.ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை வந்துள்ளார். திரு. ஜெய்சங்கரின் வருகை தொடர்பில் மகிழ்ச்சியை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்,  உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை … Read more

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்கள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வோரின் சங்கம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளுக்கு பின்னர் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை எந்தவித தட்டுப்பாடும் இன்றி வழங்கக்கூடியதாக இருக்கும் என்று சங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் இந்திய கடனுதவியின் கீழ் துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விரைவாக விடுவித்து … Read more

எரிபொருள் நெருக்கடி தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு போதியளவு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என   கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாங்கிக் குவிப்பதால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை விநியோகிப்பதால் தாமதம் ஏற்படுவதாக அவர் கூறுகிறார். ஐஓசி எரிபொருள் விலை உயர்வால், சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு மக்கள் அதிகளவில் குவிந்து வருவதாக அவர் கூறுகிறார். எனினும் நாளாந்தம் … Read more