முல்லைத்தீவு வீராங்கனைக்கு ,இந்திய குத்துச்சண்டை போட்டியில் தங்கம்

இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட யுவதி யோகராசா நிதர்சனா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். INTERNATIONAL BRAVE BOXING COUNCIL  நடாத்தும் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நேற்று முன்தினம் (26), சென்னையில் நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் இந்திய அணியினர் கலந்துகொண்டனர். இலங்கை அணி வீரர்கள் சார்பாக  வவுனியா மாவட்டத்தை சேர்ந்த T.சிறீதர்சன் T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த E.கிருஸ்ணவேணி, Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர். நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் மற்றும் ஒருவர்  வெள்ளி … Read more

ஜனாதிபதி தலைமையில் ,பிம்ஸ்ரெக் மாநாடு இன்று ஆரம்பம்

இலங்கை அரசாங்கத்தின் ஊற்பாட்டின் கீழ் ஐந்தாவது பிம்ஸ்ரெக் மாநாடு இன்று (28) கொழும்பில் ஆரம்பமாகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகவுள்ள இந்த மகாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதிவரையில் மூன்று நாட்களுக்கு நடைபெறும். பிம்ஸ்ரெக் சிரேஷ்ட அதிகாரிகளின் மாநாடு மற்றும் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் பங்ளாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் பிம்ஸ்ரெக் கொள்கைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளதுடன் உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படும். … Read more

அவசர அவசரமாக அனுமதி வழங்கும் அமைச்சரவை! இலங்கையில் செயற்படும் இந்தியாவின் சொத்து (Video)

டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய வேண்டும் என நிர்ப்பந்திப்பதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் இந்தியா ஊடுறுவ முயல்கிறது என இலங்கையை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய யோசனைகளுக்கு அமைச்சரவை அவசர அவசரமாக அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் டோனியர் கண்காணிப்பு விமானம் இலங்கையில் செயற்படும் இந்தியாவின் சொத்து, இது எமது அமைப்பிற்குள், கடல்கண்காணிப்பிற்குள், பாதுகாப்பு அமைச்சிற்குள், விமானப்படைக்குள் ஊடுறுவுவதற்கான வழிமுறையாகும் எனவும் ஊடகமொன்றுக்கு … Read more

அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! கொந்தளிக்கும் தென்னிலங்கை மக்கள்

நாட்டு மக்கள் உணவுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் நாட்டை மீட்க முன்னுரிமை வழங்க வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பாரிய அழுத்தங்களுக்குள்ளாகியிருப்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகவும், இது தொடர்பில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடியானது அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியல்ல. அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கோரிக்கை விடுத்தார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய விவசாய அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மக்களும் … Read more

ஜெய்சங்கர் – கூட்டமைப்பு நாளை கொழும்பில் முக்கிய சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நாளை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. உறுதிப்படுத்தினார். இலங்கையில் நடைபெறவுள்ள ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை காலை கொழும்பு வருகின்றார். கொழும்பு விஜயத்தின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன் அவர் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. … Read more

ரணிலுக்கு பச்சை கொடி காட்டியது அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.   இன்று  காலை ரணில் விக்ரமசிங்க விடுத்த அறிக்கையில், சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடியாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரியிருந்தார். முன்னாள் பிரதமரின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். Source … Read more

நாட்டு மக்களுக்கு உணவு கூட கிடைக்காத நிலை ஏற்படும்! வெளியான எதிர்வுகூறல்

அரசாங்கம் கண்மூடித்தனமாக பணத்தை அச்சிட்டு நடைமுறைப்படுத்தும் தவறான பொருளாதாரக் கொள்கைகளினால் நாட்டில் அதிக பணவீக்கம் ஏற்படுவதுடன் மக்களுக்கு உணவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  இப்படி காலவரையின்றி பணத்தை அச்சடித்து பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கிய நாடுகள் பல உள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் இதுதான் … Read more

அடுத்த மாதம் வெள்ளவத்தைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில், யாழ்-நைட் எக்ஸ்பிரஸ் புதிய ரயில் சேவை

வெள்ளவத்தைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில், யாழ்-நைட் எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் தொடக்கம் இந்த புதிய கடுகதி ரெயில் சேவை ஆரம்பமாகவுள்ளது. இந்த ரெயில் வெள்ளவத்தையில் இரவு 10.00 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும். அதன் பின்னர் அதிகாலை 5.30ற்கு யாழ்ப்பாணத்தைச் சென்றடையும் என்று ரெயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முழுமையாக குளிரூடப்பட்டுள்ள இந்த ரெயில் 500 ஆசனங்களைக் கொண்டுள்ளது. ரெயில்வே திணைக்களத்தின் கையடக்க செயலியின் மூலம் ஆசனங்களை … Read more

திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்

புத்தாண்டு காலப்பகுதியில் கடைகள் மற்றும் வீதிகளில் ஏற்படக்கூடிய திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். பெறுமதி மிக்க உபகரணங்கள் மற்றும் வாகனங்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்கள் இக்காலப்பகுதியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையான சிலர் திட்டமிட்ட வகையில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். விசேடமாக தாம் மேற்கொள்ளும் பயணங்களின் போது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் … Read more

ரணிலுக்கு பச்சை கொடி காட்டியது அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.   இன்று  காலை ரணில் விக்ரமசிங்க விடுத்த அறிக்கையில், சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடியாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரியிருந்தார். முன்னாள் பிரதமரின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். Source … Read more