திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்

புத்தாண்டு காலப்பகுதியில் கடைகள் மற்றும் வீதிகளில் ஏற்படக்கூடிய திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார். பெறுமதி மிக்க உபகரணங்கள் மற்றும் வாகனங்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்கள் இக்காலப்பகுதியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையான சிலர் திட்டமிட்ட வகையில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். விசேடமாக தாம் மேற்கொள்ளும் பயணங்களின் போது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென்றும் அவர் … Read more

ரணிலுக்கு பச்சை கொடி காட்டியது அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.   இன்று  காலை ரணில் விக்ரமசிங்க விடுத்த அறிக்கையில், சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பில் உடனடியாக நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரியிருந்தார். முன்னாள் பிரதமரின் இந்த கோரிக்கைக்கு பதிலளித்த ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அடுத்த நாடாளுமன்ற அமர்வில் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். Source … Read more

இந்தியாவில் கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிலும் பார்க்க இன்று குறைவு 

இந்தியாவில் நாளாந்த கொரோனா வைரசு தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிலும் பார்க்க இன்று குறைவடைந்துள்ளது.  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை இந்திய சுகாதாரத்துறை இன்று (27) வெளியிட்டது. அதற்கமைய இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 1,660-ஐ விட சற்று குறைவாகும். இதனால், இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 453 ஆக அதிகரித்துள்ளது. நாடு … Read more

இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு முன்னாள் பெண் போராளிக்கு ..

பருத்திதுறையில் இரண்டு பிள்ளைகள் மற்றும் தனது கணவருடன் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்துவரும் முன்னாள் எல்டீடீ போராளியொருவருக்கு அவரது வறுமை நிலையை கருத்தில் கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மனிதாபிமான அடிப்டையில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு திங்கட்கிழமை (21) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பினூடாக கொழும்பு றோயல் கல்லூரியின் (1980 தமிழ் மொழித் பிரிவு) முன்னாள் மாணவரான கலாநிதி வல்லிபுரம் சிவகுமார் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு, … Read more

வெகு விரைவிலே வடக்கு – கிழக்கு மாகண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும்: சி.வி.விக்னேஸ்வரன் (Video)

தற்போது அரசாங்கம் செல்லும் நிலையைப் பார்த்தால் வெகு விரைவிலே வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பில் வெண்மதி கைத்தறி ஆடை உற்பத்தி நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், எங்களுக்குள் ஒரு பொதுவான கருத்து இருக்கின்றது. வடக்கு, கிழக்கு மக்கள் வேற்றுமைப்படக்கூடாது. தங்களுக்குள் ஒருமித்துச் செயலாற்ற வேண்டும். நாங்கள் … Read more

சிறுவர்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தல்

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு காய்ச்சலால் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளதால், அதிகளவில் தண்ணீiu gUf;f வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். குளிப்பதைக் கட்டுப்படுத்துவதால் வியர்வை கொப்புளங்கள் அதிகரிக்கலாம் எனவும் அதனால் இருமல், சளி எதுவாக இருந்தாலும் குழந்தைகளைக் குளிப்பாட்டுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, குழந்தைகளுக்கு தண்ணீரில் விளையாட … Read more

இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள்

இரத்மலானை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்ட பின்னர், முதலாவது விமானம் இன்று (27) காலை 8.45ற்கு இலங்கையை வந்தடைந்தது. இரத்மலானை விமான நிலையத்தின் விமான சேவைகள் 55 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான சேவைகள் பிரதானமாக மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெறுகின்றன. இந்தியா மற்றும் மாலைதீவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை பெரும் எண்ணிக்கையில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த விமான சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் … Read more

இராணுவ தளங்களை குறி வைத்த ரஷ்யா – உக்ரேனுக்கு நெருக்கடி

உக்ரேனின் முக்கிய இராணுவத் தளங்களைக் குறிவைத்து ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் உக்ரேனுக்கு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உக்ரேன் தனது எரிபொருள், உணவுச் சேகரிப்புக் கிடங்குகளை தொடர்ந்து ரஷ்யா அழிப்பதாகத் அல்ஜெஸுரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்யும் என்ற நகரில் உள்ள ஒரு எரிபொருள் கிடங்கு தீப்பற்றி எரியும் காட்சிகளின் செயற்கை கோள் படங்களும் வெளியாகியுள்ளன. மேலும் ஈர்பின் ஆற்றிற்கு அருகேயும் சில கட்டடங்கள் தீப்பற்றி எரிந்துள்ளது. அங்கு ஆளில்லா பீரங்கிகளும் … Read more

இந்தியாவின் நடைபெற்ற ஆசிய க்ரோஸ் கன்ரி – சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவத்தினர் வெற்றி

இந்தியாவின் நாகாலாந்தில் நடைபெற்ற ஆசிய க்ரோஸ் கன்ரி – சம்பியன்ஷிப் ஓட்டப் போட்டியில் 5 வது இலங்கைப் பீரங்கி படையணியின் சார்ஜன் ஆர்.எம்.எஸ் புஷ்பகுமார வெள்ளிப் பதக்கத்தை … அதேபோன்று, 3 போட்டியாளர்களை உள்ளடக்கிய போட்டிகளில் இலங்கை இராணுவ ஆண்கள் அணி போட்டியில் ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தைப் பிடித்தது. மேலும் இராணுவத்தின் இரண்டு பெண் போட்டியாளர்கள் இந்தப் போட்டியின் போது ஒட்டுமொத்தமாக பெண்களுக்கான இரண்டாம் இடத்தைப் பிடித்தனர். போட்டியில் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களின் பெயர்கள் இங்கே … Read more

பிரதமரின் தலைமையில் கொழும்பில் நடைபெறும் பங்களாதேஷின் 51வது சுதந்திரதினக் கொண்டாட்டம்

இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பங்களாதேஷின் 51வது சுதந்திர மற்றும் தேசிய தின நிகழ்வுகள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (26) கொழும்பு கோலஃ;பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம் அவர்களின் அழைப்பின் பேரில், கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷ அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி … Read more