25 வருடங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் மிகப்பெரும் வீழ்ச்சி! இன்று பதிவானது

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அதன் வெகுவான வீழ்ச்சி இன்று பதிவானது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் நாளாந்த வெளிநாட்டு நாணயமாற்று வீதத்தின் அடிப்படையில், இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 264.66 ரூபாவாகவும் விற்பனை விலை 274.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலரொன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதி … Read more

இலங்கையில் இதுவரையில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 78.86 வீதம்

கடந்த திங்கட்கிழமை (14) கொவிட் 19 தடுப்பூசி 25 ஆயிரத்து 14 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் இதுவரையில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 78.86 வீதத்தை எட்டியுள்ளதுடன், இரண்டாவது டோஸ் பெற்றவர்களின் எண்ணிக்கை 66.33 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் அறிக்கையின்படி, 20 வயதிற்கு மேற்ட்டவர்களில் 96 வீதமானோர் முதல் இரண்டு டோஸினையும், 51.94 சதவீதமானோர் மூன்றாவது டோஸினையும் பெற்றுள்ளனர். 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 96.1 வீதமானோர் முதல் டோஸினையும் 82.1 வீதமானோர் 2 … Read more

தங்கம் விலை அதிரடியாக குறைவு! மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

உக்ரைன் ரஷ்யா போரினால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வரும் நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கத்தின் விலை கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்தே உயரத்தொடங்கியது. குறிப்பாக பிப்ரவரி 22ம் தேதி ரூ.38 ஆயிரமாகவும், மார்ச் 7ம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக குறைந்து வரும் நிலையில், இன்றும் சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.38,336க்கு விற்பனை செய்யப்படுகிறது. … Read more

நாளை முதல் உணவு இல்லை! இலங்கையர்களை வதைக்கும் பற்றாக்குறை

நாட்டில் நிலவும் பாரிய எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை (17) முதல் உணவகங்களில் உணவு வழங்குவதை முற்றாக நிறுத்த வேண்டியுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிவாயு விநியோகத்தை முற்றாக இடைநிறுத்துவதற்கு எரிவாயு நிறுவனங்களின் தீர்மானத்தினால் உணவகங்கள் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். உணவகங்கள் மூடப்படுவதால் சுமார் 500,000 வேலை இழப்புகள் ஏற்படும் என்று அவர் கூறுகிறார். இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் உணவகங்களில் பானைகள் அமைத்து ஜனாதிபதி … Read more

பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இலங்கை

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.   நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா  கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்துக்குள் இன்று இரண்டு அல்லது மூன்று பிரிவுகள் செயற்படுவதாக குறிப்பிட்ட அவர், சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரி இலங்கைக்கு வந்துள்ள நிலையில் அவர் மத்திய வங்கியின் ஆளுநரை சந்திக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். இந்தநிலையில் அரசாங்கத்துடன் முரண்பாடு என்ற வகையில் … Read more

இலங்கை பிரதிநிதிகளின் தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றி

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பிரதிநிதிகளின் குழு முன்வைத்த தர்க்கரீதியான விடயங்கள் மூலம் நாட்டுக்கு பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் அடிக்கடி பல்வேறு அறிக்கைகளை கோருவதன் மூலமான பயன்கள் என்ன? நாடு ஒன்றின் உள்ளக விடயங்களில் இந்த வகையில் அழுத்தங்களை மேற்கொள்வதன் நோக்கம் என்ன? அனைத்து நாடுகளையும் ஒரே மாதிரி கருதி இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்துவது போன்ற … Read more

நாட்டில் முதற்தடவையாக தயாரிக்கப்பட்ட சேலைன் போத்தல்கள் (Saline) சந்தைக்கு

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால், முதற்தடவையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சேலைன் (Saline) போத்தல்கள் நேற்று (15) உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு தேவையான சேலைன் (Saline) போத்தல்களில் 28 சதவீதம் தற்போது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், எதிர் காலத்தில் நாட்டிற்கு தேவையான அனைத்து சேலைன் (Saline) போத்தல்களையும் நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைகள் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். அத்துடன், வருடாந்தம் 26 மில்லியன் சேலைன் (Saline) … Read more

அமைச்சர்கள் தொடர்பில் நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு

சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.  சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 2015 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது குடும்ப ஆட்சி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட அதிகளவில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார். 2015இல் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களே பதவி வகித்தனர் தற்போது அதனை … Read more

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க விசேட நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையிலிருந்து யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு  தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில், விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் மற்றும் டீசலை எரிபொருள் நிலையங்களில் பெற்றுக்கொடுக்க விசேட பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்று (15) இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் விற்பனை நிலையங்களில் … Read more