ஐபிஎல் 2022 போட்டித் தொடர் – கொல்கத்தா அணி,சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று (26) இந்தியாவில் ஆரம்பமானது. தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (26) நடைபெற்ற முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை … Read more

எரிபொருளை வழங்க தயார் நிலையில் ரஷ்யா – கண்டுகொள்ளாத இலங்கை

இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க ரஷ்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்த போதிலும், இலங்கை அரசாங்கம் இதுவரை முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கிடைக்கும் கச்சா எண்ணெயை விட குறைந்த விலையில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு கச்சா எண்ணெயை வழங்க ரஷ்யா முன்வந்திருந்தது. ஆனால் இலங்கை அரசாங்கம் அதிக விலை கொடுத்து டுபாயில் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவது முறையாக, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் … Read more

கொழும்பு இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவைகள்

விமான நிலையத்தில் 220 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விமான ஓடுபாதையில் இருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பமாகவுள்ளன. முதலாவது விமானம் இன்று காலை 8.40ற்கு மாலைதீவில் இருந்து இரத்மலானை விமான நிலையத்திதை வந்தடையவுள்ளது. முதலாவது விமானம் வருவதினை முன்னிட்டு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அதிதிகள் பங்கேற்கவுள்ளனர். இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து முதலில் மாலைதீவிற்கான விமான சேவை ஆரம்பமாவதுடன் பின்னர் பிராந்தியத்தில் உள்ள ஏனைய … Read more

கிளிநொச்சியில் நபரொருவரை வாகனத்தால் மோதி தள்ளிய கும்பல்! ஒருவர் ஆபத்தான நிலையில் (PHOTOS)

கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோதி கொலை செய்ய முயன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த வாகனத்திலிருந்து காயத்துடன் காணப்பட்ட நபர் தப்பி ஓடுவதற்கு முயன்று வீதியில் குதித்து ஓடியுள்ளார். இரண்டு தடவைகள் முயன்று இரண்டாவது தடவை குறித்த வாகனத்தை செலுத்தி அந்த நபரை கடத்தல்காரர்கள் என்று நம்பப்படும் நபர்கள் மோதியுள்ளனர். சம்பவத்தினால் குறித்த நபர் படுகாயம் அடைந்துள்ளார். அதேவேளை வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது. … Read more

குரு பெயர்ச்சி 2022 – 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட போகும் அதிரடி மாற்றம்… மின்னல் வேகத்தில் பணக்காரராகும் 3 ராசி எது தெரியுமா?

 ஏப்ரல் மாதம் 13ம் திகதி குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடபெயர்ச்சி அடைகின்றார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குருபகவான் மீன ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் இனி நாட்டின் பொருளாதார நிலை சற்றே உயரும். தங்கத்தில் அதிகமானவர்கள் முதலீடுகள் செய்வார்கள். குருபகவானின் இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை நடைபெறும் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். கும்ப ராசியில் உதயமாகும் குருபகவான்! 5 ராசிகளுக்கு கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷ்டம்    … Read more

மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி! – காசோலைகளை திருப்பி அனுப்ப தயாராகும் வங்கி

நாட்டின் முன்னணி அரச வங்கியொன்று இலங்கை மின்சார சபையின் அனைத்து காசோலைகளையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை மின்சார சபையின் கணக்குகளில் பணப்பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சேவை சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். எனவே, இலங்கை மின்சார சபைக்கு வங்கி மிகைப்பற்று வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காசோலைகளை வங்கிக்கு அனுப்ப வேண்டாம் என இலங்கை மின்சார சபையின் பண முகாமையாளர் ஏற்கனவே சபைக்கு அறிவித்துள்ளதாகவும் … Read more

பிரபல பாடசாலையில் மாணவனுக்கு நடந்த விபரீதம்! திருமணம் செய்ய வற்புறுத்துவதாக கூறும் ஆசிரியை – குற்றப்பார்வை

இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அதன்படி நாட்டின் பல இடங்களில் தொடர்ச்சியாக துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகி கொண்டு தான் இருக்கின்றன. நான்கு வருடங்களாக பாடசாலை மாணவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்தார் என சந்தேகிக்கப்படும் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியைக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த ஆசிரியை முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். சந்தேகநபராக கருதப்படும் ஆசிரியை சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண முன்வைத்துள்ள இந்த முன் பிணை … Read more

மாவனெல்ல பிரதேசத்தில் ,மின்னல் தாக்கம்: 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாவனல்லை பிரதேசத்தில் 25 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாவனல்லை பெமினிவத்தயில் இறுச்சடங்கில் கலந்து கொண்டவர்களே மின்னல் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சேவையில் ஈடுபடும் ரயில்களில் மேலதிக ரயில் பெட்டிகள்

பண்டிகைக் காலப்பகுதியில் சேவையில் ஈடுபடும் ரயில்களில் மேலதிக ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் தற்பொழுது நிலவும் ரயில் சாரதிகள் மற்றும் சமிக்ஞை பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக புதிய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் தடை ஏற்பட்டிருப்பதாகவும் பிரதி ரயில்வே பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன தெரிவித்தார்.

பிரபல பாடசாலையில் மாணவனுக்கு நடந்த விபரீதம்! திருமணம் செய்ய வற்புறுத்துவதாக கூறும் ஆசிரியை – குற்றப்பார்வை

இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அதன்படி நாட்டின் பல இடங்களில் தொடர்ச்சியாக துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகி கொண்டு தான் இருக்கின்றன. நான்கு வருடங்களாக பாடசாலை மாணவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்தார் என சந்தேகிக்கப்படும் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியைக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த ஆசிரியை முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். சந்தேகநபராக கருதப்படும் ஆசிரியை சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி அஜித் பத்திரண முன்வைத்துள்ள இந்த முன் பிணை … Read more