பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்புரை IV அறிக்கை மீதான இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்கள்

பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்புரை IV அறிக்கை மீதான இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை மீது அதன் பிந்திய உறுப்புரை IV அலுவலர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. உறுப்புரை IV செயன்முறை உள்ளடக்குவது; அ) 2021 திசெம்பரில் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுதல், இவ்விஜயத்தின் போது நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி அதேபோன்று பல்வேறு அரசாங்க முகவராண்மைகள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் … Read more

கொழும்பில் நடுவீதியில் திடீரென தீப்பற்றிக்கொண்ட சொகுசு கார்

கொழும்பில் நடுவீதியில் இன்றைய தினம் சொகுசு காரொன்று திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது.  பேஸ்லைன் வீதியின், தெமட்டகொட மேம்பாலத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தையடுத்து அந்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Traffic congestion reported on Baseline Road as a SUV catches fire on the Baseline flyover pic.twitter.com/xCFhvM8rsF — NewsWire 🇱🇰 (@NewsWireLK) March 26, 2022 Source link

நீரேந்து பகுதிகளில் கடும் வறட்சி – நீர் மட்டம் வெகுவாக வீழ்ச்சி

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையையடுத்து காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நீரில் மூழ்கி இருந்த பல கட்டிடங்கள், ஆலயங்கள், முதலானவற்றை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. நீர்த்தேக்கத்தில் நேற்று (25) 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக மின்சாரதுறை பொறியியலாளர் தெரிவித்துள்ளனர். மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 29.7 வீத நீர் மாத்திரம் எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று கொத்மலை நீர்த்தேகத்தில் 21.5 வீத நீரும் விக்டோரியா நீர்த்தேகத்தில் 33.2 வீதமும், ரந்தனிகலை நீர்த்தேக்கத்தில் 56.1 வீதமும் சமனலவெவவில் 14.6 வீத நீரும் எஞ்சியிருப்பதாகவும் … Read more

IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர்

இந்திய எரிபொருள் நிறுவனம் நேற்று இரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இதேவேளை ,எரிபொருள் விலையை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்காது என்றும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். 30 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று நாளை இலங்கை வரவிருப்பதாக ,அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

டொலரின் இருப்பை அதிகரிக்க இலங்கை அரசு போட்டுள்ள திட்டம்

இலங்கையில் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு தீர்வாக கஞ்சாவை வளர்த்து ஏற்றுமதி செய்வது குறித்தும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர். அமைச்சர் பந்துல குணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான டயானா கமகே, எம்.ஏ. சுமந்திரன் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர். ஏற்றுமதிக்காக கஞ்சாவை பயிரிடுவதற்கு அல்லது வளர்பதற்கு தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கான யோசனை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கஞ்சா விஷ போதைப்பொருள் … Read more

கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம்

அதிகரித்து வரும் கோழித் தீவனப் பொருட்களின் விலைகள் காரணமாக சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கலாம் என அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர, டொலர் தட்டுப்பாடு மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக உற்பத்தியாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றார். அதிகரித்து வரும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பல விவசாயிகள் வியாபாரத்திலிருந்து விலகி வருவதாகவும் அவர் கூறினார். இந்திய கடன் வழியாக 1,000 மெட்ரிக் … Read more

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

எரிபொருள் விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். லங்கா ஐ.ஓ.சி  நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் அனைத்து வகை பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை  49 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதேவேளை எரிபொருள் விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.   Source link

அவுஸ்திரேலிய – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ரி-ருவன்ரி போட்டிகள் ஜுன் மாதம் கொழும்பில்

அவுஸ்திரேலிய அணி – இலங்கைக்கு எதிர்வரும் ஜுன் மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஆறு வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி – இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 ரி-ருவன்ரி போட்டிகளில் விளையாடவுள்ளன. ரி-ருவன்ரி போட்டிகள் ஜுன் மாதம் 7ம், 8ம், 11ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளன. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஜுன் மாதம் … Read more

பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்கள் குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்கள் குழுவை 2022 மார்ச் 24, வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்தார். இதன் போது, சுகாதாரச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளிலான ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கையில் பிரெஞ்சு நிறுவனங்களின் முதலீடு, இலங்கையில் இருந்தான பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதிக்கான சந்தைகளை பிரான்சில் விரிவுபடுத்துதல் (குறிப்பாக தேயிலை, மீன்பிடிப் பொருட்கள், ஆடைகள், இரத்திணங்கள் மற்றும் ஆபரணங்கள்), மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு … Read more

சிங்கள மக்களின் நம்பிக்கையாகும் விடுதலைப் புலிகளின் தலைவர்! விழி பிதுங்கும் இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்ற நாமத்தையே தென்னிலங்கையில் இருக்கக்கூடிய மக்களும் உச்சரிக்கிறார்கள் என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது, விடுதலைப் புலிகளின் தலைவரை தென்னிலங்கையில் இருக்கக்கூடிய மக்களும் தானே அதிகமாக தேடுகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், சம்பந்தனோ, சுமந்திரனோ, கஜேந்திரனோ, விக்னேஸ்வரனோ தான் வந்து எங்களை காப்பார்கள் என்று அவர்கள் சொல்லவில்லை. … Read more