தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஆலோசனைக் குழு…

தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 16 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நியமித்துள்ளார். 01. பேராசிரியர் எச்.டி.  கருணாரத்ன 02. பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த 03. கலாநிதி துஷ்னி வீரகோன் 04. திரு.தம்மிக்க பெரேரா 05. திரு.கிருஷான் பாலேந்திர 06. திரு. அஷ்ரப் ஒமார் 07. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய 08. திரு. விஷ் கோவிந்தசாமி 09. திரு. எஸ். ரெங்கநாதன் 10. திரு.ரஞ்சித் பேஜ் 11. திரு. சுரேஷ் … Read more

இன்று நள்ளிரவில் இருந்து விலகுகிறோம்! மற்றுமொரு அறிவிப்பால் இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடி

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளிலிருந்து விலக இலங்கை எரிபொருள் தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட அந்த சங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் 80 சதவீதம், தனியார் துறையினரே முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தமது போக்குவரத்து கட்டணத்தை குறைந்தது 60 வீதத்தால் அதிகரிக்குமாறு, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பெட்ரோலிய கூட்டுதாபனத்திடம் இந்த சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், டீசல் விலையேற்றத்திற்கு ஏற்ப கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதாக … Read more

மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான காஸ் சிலிண்டர்கள்

ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான காஸ் சிலிண்டர்களை பொலிசார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட காஸ் சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே இடத்தில் வைத்து மக்களுக்கு அவை விற்பனை செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும். இதேவேளை சில எரிபொருள் நிரப்பகங்களில் எரிபொருள் இல்லை என்று கூறி ஒரு சில தரப்புகளுக்கு மாத்திரம் இரகசியமான முறையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளார்கள். … Read more

2021 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை: மட்டக்களப்பு மாவட்டத்தில் 1271 மாணவர்கள் சித்தி!!

20 21 ஆம் ஆண்டிற்க்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 1271 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களில் இருந்து கடந்த ஆண்டு 9726 மாணவர்கள் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியிருந்த நிலையில் அதில் இம்முறை சுமார் 1271 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். இதனடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து 2051 மாணவர்கள் பரீட்சைக்கு தகுதிபெற்றிருந்த நிலையில் 449 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் … Read more

விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியானது

60 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்களின் அதிகபட்ச விலையை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  சுகாதார அமைச்சரினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.  இன்று  முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் அதிகபட்ச விலை 2 ரூபா 97 சதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானியில், 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் அதிகபட்ச விலை 2 ரூபா 30 சதமாக … Read more

கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம்

நேற்று (14) இலங்கையில் கொவிட் – 19 க்கு எதிராக மேலும் 25 ஆயிரத்து 14 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 302 பேருக்கும், இரண்டாவது டோஸ் 903 பேருக்கும் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோapay; பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (14) பைசர் தடுப்பூசியின் முதல் டோஸை 2 ஆயிரத்து 503 பேர் பெற்றுக்கொண்டனர், அதே நேரத்தில் இரண்டாவது டோஸினை 7 ஆயிரத்து 831 பேர் பெற்றுக்கொண்டனர். மேலும், 13 ஆயிரத்து … Read more

கடும் இக்கட்டான கட்டத்தில் நாடு! இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எடுத்துள்ள அதிரடி முடிவு

உடனடியாக நடைமுறைக்கு  வரும் வகையில் கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதனை இடைநிறுத்துமாறு அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவுறுத்தியுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வாகனங்களுக்கு மேலதிகமாக, கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏராளமான வாகனங்கள் … Read more

முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறைக்கு 583 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை 583 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 117.5 பில்லியன்) வருமானமாக பெற்றுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி, சுற்றுலாத்துறை ஜனவரியில் 268 மில்லியன் அமெரிக்க  டொலர்களையும். பெப்ரவரியில் 314.5 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வருமானமாக பெற்றது. இருப்பினும் இதற்கு மாறாக 2021 ஆம் ஆண்டின் முதல் 2 மாதங்களிலும் 16.4 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே பெறப்பட்டது. இந்த ஆண்டு பெப்ரவரியில் 1 இலட்சத்து 78 ஆயிரத்து 834 சுற்றுலாப் … Read more