மஹிந்தவின் பதவி விலகல் தொடர்பில் சிங்கள ஊடகங்களில் வெளியான தகவல்கள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக நேற்று பல ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தன. இந்நிலையில் பிரதமரின் பதவி விலகலை அவரின் ஊடகப் பிரிவு மறுத்துள்ள போதிலும், பிரதமர் அலுவலக அதிகாரியை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரதமரின் உடல்நல குறைவு காரணமாக முழுமையாக பணியாற்ற முடியாத நிலையில், அவருக்கு பதிலாக மற்றுமொருவர் பணியாற்றவுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பணிச் சுமை அதிகரித்துள்ளதாகவும், மஹிந்த ராஜபக்ஷவினால் … Read more

சீனாவிடமிருந்து, இலங்கைக்கு இரண்டாயிரம் மெட்ரிக் தொன் அரிசி

25 இலட்சம் டொலர் பெறுமதியான அரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது. இதற்கமைவாக , இரண்டாயிரம் மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டும் இந்த உதவி வழங்கப்படுவதாக இலங்கைக்கான சீன தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை வெளியானது!

இலங்கை குறித்த தமது அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிநோக்கியுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடி பற்றிய பகுப்பாய்வு இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் பரவல் இலங்கயைின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்ததுடன், இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டிருந்ததுடன் பல கடுமையான முடக்கங்கள் தேவைப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறைக்கு … Read more

நாளைய தினம் மின்வெட்டு அமுலாகும் நேரங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது

நாளைய தினம் (26) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் … Read more

கடும் பொருளாதார நெருக்கடி! – கொழும்பின் முன்னணி செய்தி தாள்களின் அச்சுப் பதிப்பு நிறுத்தம்

இலங்கையின் இரண்டு முக்கிய செய்தித்தாள்கள் காகிதப் பற்றாக்குறையால் தங்கள் அச்சு பதிப்புகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இந்த முடிவெடுத்துள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை, 1948ல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு, மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், ஆங்கில மொழி நாளிதழான தி ஐலண்ட் மற்றும் சிங்களப் பதிப்பான திவயின ஆகியவை “நிலவும் காகிதப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு” ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் … Read more

பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை

நீண்ட தூரம் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பெண்களிடம் அங்க சேட்டையில் ஈடுபடும் நபர் தொடர்பான தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. கொழும்பில் இருந்து மலையகம் மற்றும் அனுராதபுரம் வரை செல்லும் பேருந்துகளில் பெண்களிடம் தவறான நடந்து கொள்ளும் நபர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. பேருந்துகளில் அங்க சேட்டையில் ஈடுபடும் போது அங்கிருந்து சிலர் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். குறித்த நபரினால் பாதிக்கப்பட்ட … Read more

உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்த ரஷ்யா! (Video)

உக்ரைனின் முக்கிய எரிபொருள் கிடங்கை தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது 30வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, உக்ரேனிய பிராந்தியத்தில் மேலும் 4கிலோ மீற்றர் முன்னேறியுள்ளதாக தெரிவித்தது. அதுமட்டுமின்றி உக்ரைனின் Batmanka, Mikhailovka, Krasny, Partizan, Stavki மற்றும் Troitskoye பகுதிகளை ரஷ்யா படைகள் கைப்பற்றியுள்ளனர். மேலும், … Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பெடி வீரகோன், எம்.எஸ்.செல்லசாமி, ஜஸ்டின் கலப்பத்தி மற்றும் தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோரின் மறைவு குறித்து இன்று (25) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமரினால் முன்வைக்கப்பட்ட இரங்கல் பிரேரணை!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பெடி வீரகோன், எம்.எஸ்.செல்லசாமி, ஜஸ்டின் கலப்பத்தி மற்றும் தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோரின் மறைவு குறித்து இன்று (25) பாராளுமன்றத்தில் கௌரவ பிரதமரினால் முன்வைக்கப்பட்ட இரங்கல் பிரேரணை! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பெடி வீரகோன், எம்.எஸ்.செல்லசாமி, ஜஸ்டின் கலப்பத்தி மற்றும் தங்கேஸ்வரி கதிராமன் ஆகியோரின் மறைவு குறித்;;;;த இரங்கல் பிரேரணையை கௌரவ சபையில் முன்வைக்கிறேன். லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து அரசியலுக்கு பிரவேசித்த பெடி வீரகோன் அவர்கள், கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி கற்றவர். லக்ஷ்மன் … Read more

இலங்கையில் மீளவும் பெட்ரோல் விலை அதிகரிப்பு!

அனைத்து ரக பெட்ரோலின் விலைகளையும் இன்று (25) நள்ளிரவு முதல் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து ரக பெட்ரோலின் சில்லறை விலைகளும் லீற்றருக்கு 49 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. Source link

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிநெறிக் கருத்தரங்கு

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறிக் கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. சிறுவர்களுக்கான செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய பயிற்சிநெறிக் கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கிற்கு வளவாளர்களாக மாவட்ட முன்பிள்ளை அபிவிருத்தி உதவியாளர் வீ.முரளிதரன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பிள்ளை அபிவிருத்தி உதவியாளர் ரீ.மேகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவர்களை சுதந்திரமான புறச்சூழலில் … Read more