ஐந்து முக்கிய விடயங்களின் கீழ் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்…

“நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்படுவோம்”  என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்கள் மீதும் தாம் ஒருசேர அவதானத்தைச் செலுத்துவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.   நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவோம்….                                                                                        ஜனாதிபதி. ஐக்கிய இலங்கையில் அனைத்து இனங்களையும் சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்வோம்…                                                                 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று, (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் … Read more

விளாடிமிர் புடினின் மொத்த சொத்துமதிப்பு இதுதான்: அம்பலமாகும் இரகசியங்கள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தனிப்பட்ட இரகசியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக அ,ம்பலமாகிவருகின்றன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்து நான்கு வாரங்களாகியுள்ளன. மூன்று நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றி, தங்கள் பலத்தை நிரூபிப்போம் என களமிறங்கிய ரஷ்யா தற்போது 30 நாட்கள் கடந்தும் உக்ரைனில் போரிட்டு வருகிறது. ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராகவும், அவருக்கு நெருக்கமான கோடீஸ்வரர்கள், நிறுவனங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவர் மீதும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் … Read more

இந்திய கடற்படைக் கப்பல் ஷர்தா கொழும்புக்கு வருகை

இந்திய கடற்படைக்கப்பலான ஷர்தா, நவீன இலகு ரக ஹெலிகொப்டருடன் 2022 மார்ச் 23 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 2.    ரோந்து கப்பலான ஷர்தாவின் கட்டளை அதிகாரியான தளபதி யதீஷ் பதௌதியா அவர்கள் மேற்கு கடற் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் ஏ.யு.சி டி சில்வா அவர்களை இந்த விஜயத்தின்போது சந்தித்திருந்தார். அத்துடன் இக்கப்பலில் 2022 மார்ச் 24 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் இந்திய அரசின் நன்கொடை … Read more

இலங்கையுடனான ஆளுமைவிருத்தி பங்குடைமையை கொண்டாடிய உயர் ஸ்தானிகராலயம்

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் 2022 மார்ச் 23ஆம் திகதி இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தினம் (ITEC) ஹோட்டல் தாஜ் சமுத்திராவில் கொண்டாடப்பட்டது. ITEC பயிற்சித் திட்டங்களில் கலந்து கொண்டவர்கள், இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயிற்சிகளில் கலந்துகொண்ட பலதரப்பட்ட துறைகளையும் சார்ந்த உத்தியோகத்தர்கள், இலங்கை அரசாங்கத்தின் அமைச்சுக்களை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் e-ITEC அமர்வுகளில் கலந்துகொண்டவர்கள் உட்பட கிட்டத்தட்ட 125 விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி … Read more

மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படுகிறதா? உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியானது

அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணித்தியாலம் மின் தடை செய்யப்படும் என இதற்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.  மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று அறிவித்தார். இதனையடுத்து அடுத்த வாரம் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Source link

மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்(Photo)

மார்ச் 21 முதல் நடைமுறைக்கு  வரும் வகையில் 25 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ள அந்நிய செலாவணியை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொழிலாளர்களின் வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை பாதிக்காது என்று மத்திய வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. வங்கிகள் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும் வெளிநாட்டுச் செலாவணி தொடா்பில்  தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.   Source link

கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட அதியுச்ச அதிகரிப்பு

நாட்டில் தற்போது ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 -900 ரூபா வரைக்கும், ஒரு முட்டையின் விலை விலை 30 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.   கால்நடை தீவன தட்டுப்பாடு மற்றும் அதிக விலை காரணமாக இலங்கையில் கோழிப்பண்ணை தொழில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இவ்வாறு கோழி மற்றும்  முட்டையின் விலை அதிகரித்துள்ளது.  கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களின் பற்றாக்குறையே தாம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என அகில இலங்கை … Read more

வங்கிகள் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்பிலான தெளிவுபடுத்தல்

வங்கிகள் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்படும் வெளிநாட்டுச் செலாவணி தொடர்பிலான தெளிவுபடுத்தல் 2022.03.21 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில், இலங்கை மத்திய வங்கிக்கு வங்கிகள் விற்பனை செய்யும் வெளிநாட்டுச் செலாவணியின் சதவீதம், 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் அதிகரிக்கப்பட்டமை வங்கிகளுக்கே பிரத்தியேகமாக ஏற்புடைத்தானதெனவும் அது வெளிநாட்டில் பணிபுரிவோர்களினது வெளிநாட்டுச் செலாவணி வருவாய்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதிப் பெறுகைகள் மீதான தற்போதைய தேவைப்பாடுகளின் மீது எந்தவொரு தாக்கத்தினையும் கொண்டிருக்காது என்பதனையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்த … Read more

கடந்த வாரத்தில் மாத்திரம் 733 டெங்கு நோயாளர்கள்

நாட்டில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் மாத்திரம் 733 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் வைத்தியர் அதிகாரி இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் 613 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த வாரம் நோயாளர்களின் எண்ணிக்கை 120 ஆல் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது தொடர்பில் ஆலோசனைகள் தேவைப்படின், அது தொடர்பாக தமது சுகாதார வைத்திய … Read more