இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அவல நிலை! உண்மையை ஏற்றுக்கொண்டு அரசுக்கு சவால் விடும் அமைச்சர்

அரசாங்கத்தின் கொள்கைகள் மக்களுக்கு விரோதமானவை. இனியும் அவற்றுக்கு ஆதரவளிக்க வேண்டியதில்லை. எனவே, என்னுடைய அமைச்சுக்கு புதிய ஒருவரை நியமிக்க வேண்டிவரும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு, முடிந்தால் அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்குமாறும் சவால் விடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாட்டில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடி யாத மற்றும் தாங்கிக் கொள்ள முடியாதளவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளில் … Read more

மூடப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை

மூடப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். எம்பிலிப்பிட்டிய கடதாசித் தொழிற்சாலை 9 வருடங்களின் பின்னர் மீண்டும் திறப்பு. மூடப்பட்டிருந்த எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலை ஒன்பது வருடங்களின் பின்னர் இன்று (14) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். இதன் மூலம் வருடத்திற்கு 75 ஆயிரம் மெட்ரிக் தொன் கடதாசியை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர் ஒருவருடன் உடன்படிக்கை செய்து இந்தத் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்கக் … Read more

மலையகத்தின் சில பகுதிகளில் மகளிர் தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பித்து கொண்டாடும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் மலையகத்தில் மகளிர் தின நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.  தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் மலையாக பிரதேசங்களான நோர்வூட், கொட்டக்கலை, தலவாக்கலை, நுவரெலியா மற்றும் புசல்லாவை ஆகிய பகுதிகளில் இம் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மகன் உயிருடன் இல்லை: கண்ணீர்விட்டு கதறி அழுத தந்தை (Video)

எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற்றை இன்று அனுபவிக்க முடியாமல் போய்விட்டது என யாழில் டெங்கு காய்ச்சலால் உயரிழந்த மாணவனின் தந்தை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய் என்ற மாணவன் அண்மையில் டெங்கு நோய் தொற்று காரணமாக உயிரிழந்தார்.   கடந்தாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியான நிலையில் குறித்த 155 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். யாழ். … Read more

பல்வேறு துறைகளில் நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு…

பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊத் (Faisal bin Farhan Al Saud) அவர்களிடம் தெரிவித்தார். சவுதி அரேபியாவின் வெளிநாட்டு அமைச்சருடன்  இன்று, (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். விவசாயம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, தொழிநுட்ப மேம்பாடு மற்றும் துறைமுக நகர் சார்ந்த … Read more

புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ் மாணவன் (Video)

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு வெளியாகிய 2021 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். அந்நிலையில் தனது சாதனை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் … Read more

யாழ் மாவட்டத்தில் ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்

இந்திய அரசின் நிதியுதவியுடன், யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ‘ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்’ யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் தொடக்கம் (13 ஆம் திகதி) எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, யாழ் மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது. வலுவிழந்தோருக்கு சேவை செய்யும் பகவான் மகா வீரர் சஹயட சமித்தி ( Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti ) தொண்டு நிறுவனமும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு … Read more

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொது பட்டமளிப்பு விழாவின் 2 ஆம் நாள் நிகழ்வு நேற்றைய தினம் (13) நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் கூடத்தில் நேற்றைய (14) தினம்  காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி மூன்று அமர்வுகளாக இடம்பெற்றன. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்  அவர்களது ஒருங்கிணைப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின்  வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றின் பட்டமளிப்பின் போது இம்முறையே ஒரேதடவையில் … Read more

டொலர், வெளிநாட்டு கையிருப்பு இல்லை! நாம் உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறோம் – அமைச்சர் பகிரங்கம்

தற்போது நாட்டில் டொலர்கள் இல்லை, வெளிநாட்டு கையிருப்பு இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் டொலர்கள் இல்லை. வெளிநாட்டு கையிருப்பு இல்லை. நாம் உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறோம். இப்போது எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் உள்ளனர், இது அதிகரித்து வருகிறது. இதனை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நேரத்தில் அரசியல் பேதமின்றி அனைவரும் … Read more