சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்ததுடன், அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 14ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கை – சவூதி அரேபிய … Read more

கடலுக்குப் பொறுப்பான பிரதான நிறுவனமென்ற வகையில் சட்டத்தை விரைவாகத் திருத்தி சட்டரீதியான  பலத்தை அதிகரிக்கவும்

நாட்டின் கடல்சார் சூழலை பாதுகாக்கும் பிரதான பொறுப்பை கொண்டுள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டரீதியான அதிகாரத்தை பலப்படுத்தும் வகையில் 2008 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் மறுசீரமைப்பை விரைவு படுத்துமாறு அண்மையில் இடம்பெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுக் கூட்டத்தின் போது அதன் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் குறிப்பிட்டார். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிகார சபையின் அலுவலர்கள் தெரிவித்ததுடன் இந்த சட்டத் திருத்தம் … Read more

முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்! இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து பிரித்தானியா எச்சரிக்கை

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை குறித்து தமது நாட்டிலிருந்த இலங்கை செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இலங்கைக்கான பயண ஆலோசனையில் பிரித்தானியா திருத்தம் செய்துள்ளது. அதன்படி, இறக்குமதிக்கு செலுத்துவதற்கு பணம் இல்லாமை காரணமாக இலங்கை தற்போது அடிப்படைத் தேவைகளில் பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது. மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும், நாட்டில் குறுகிய பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என … Read more

இலங்கையில் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 78.83 வீதமாக அதிகரிப்பு

கடந்த சனிக்கிழமை வரையில் இலங்கையின் சனத்தொகையில் 78.7 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4 ஆம் திகதி தரவுகளின்படி மொத்த சனத்தொகையில் 64.04 வீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு கோடியே 69 இலட்சத்து 21 ஆயிரத்து 171 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது . இரண்டாவது டோஸ் ஒரு கோடியே 42 இலச்சத்து 5 … Read more

கடனட்டை உபயோகிப்போர் மற்றும் அடகு வசதியை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியால் அண்மையில் அறிவிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் என்பவற்றின் கடனட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதம் 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டிருந்தது. அத்துடன் அடகு வசதிகளுக்கான வருடாந்த வட்டி வீதமானது 12 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  … Read more

நல்லிணக்கம், சகவாழ்வு, சகோதரத்துவம், புரிந்துணர்வு சமத்துவ நிலைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வழங்கிவரும் பங்களிப்பு அளப்பரியது – வெகுஜன ஊடக அமைச்சர்

இலங்கை பல்லின மக்கள் பல மதத்தினர் மற்றும் பல்வேறு கலாச்சாரத்தை கொண்ட நாடு. இதில் நல்லிணக்கம், சகவாழ்வு, சகோதரத்துவம், புரிந்துணர்வு மற்றும் சமத்துவ நிலைக்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வழங்கிவரும் பங்களிப்பு அளப்பரியது என்று வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கொழும்பு 10 அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் (12) நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் போரத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக … Read more

மசகு எண்ணெய் ஒருபீப்பாயின் விலை 160 தொடக்கம் 200 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும்

ரஷ்யா, மசகு எண்ணெய்மற்றும் எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்துவதற்குத் தீர்மானித்தால் மசகு எண்ணெய் ஒருபீப்பாயின் விலை 160 தொடக்கம் 200 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமென்று சர்வதேச பொருளாதாரஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மீண்டும் வழமை நிலைக்குத் திரும்புவதற்கு இன்னும் 5வருடங்கள் செல்லும்.  ரஷ்ய எரிபொருள் ஏற்றுமதிமொத்த ஏற்றுமதியில் சுமார் 8 வீதம். நாளாந்தம் இத்தொகையை ரஷ்யா ஏற்றுமதி செய்கிறது..அதாவது, மசகு எண்ணெய் 2 தசம் ஐந்து பீப்பாய்களை ஜேர்மன், இத்தாலி,நெதர்லாந்து, போலந்து, பின்லாந்து, கிறீஸ், ருமேனியா, பல்கேரியாஉள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. … Read more

அறுபது மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவிக் கொட்டுக்கு இலக்கான 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மொனராகலையில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் அலுவலகம்  இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.  Source link

பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் ,மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவில் … Read more