கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 14ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில்சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாகஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ … Read more

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு பேரிடி

இலங்கையில் நடைமுறையிலுள்ள வற் வரி மீண்டும் அதிகரிக்கப்படலாம் என பொருளியல் நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைய 15 வீதமாக வற் வரி அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராய, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளிகள் இலங்கை வருகின்றனர். இதன்போது மத்திய வங்கியிடம் வைக்கப்படும் முக்கிய கோரிக்கையாக சகல பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியை (வற்) 15 சதவீதமாக உயர்த்துமாறு கோருவது அடங்கியுள்ளதாக … Read more

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தொடரும் – கடற்றொழில் அமைச்சர்

இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்புக்களும் உதவிகளும் தொடர்ச்சியாக கிடைக்கும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (13) நடைபெற்ற கடற்றொழிலாளர்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கான முதலாவது கட்ட உதவிகளை வழங்கியுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும், இலங்கை … Read more

எரிபொருள் விலை அதிகரிப்பு : அமைச்சர் விளக்கம்

நல்லாட்சிக் காலப்பகுதியில்எரிபொருள் கடனடிப்படையிலேயே பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்த எரிபொருளுக்காகவெளிநாடுகளுக்கு மூவாயிரத்து 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை சமகால அரசாங்கத்தினால்செலுத்த இருப்பதாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.   உலக சந்தையின் எரிபொருள் விலைஅதிகரிப்பிற்கு ஏற்ப நாட்டில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படாததனால் இந்த வருடம்ஜனவரி மாதத்தில் மாத்திரம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 7 பில்லியன் ரூபாநட்டம் ஏற்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் இந்த நட்டம் 12 தசம் 6 பில்லியன் ரூபாவாகஅதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் நாளாந்தம் 800தொடக்கம் 900 மில்லியன் … Read more

இன்றும் நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கும்! வெளியானது அறிவிப்பு – செய்திப்பார்வை (Video)

இன்றைய தினம் மின்வெட்டுக்கான இலங்கை மின்சாரசபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, P,Q,R,S,T,U,V,W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேர மின்வெட்டும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேர மின் வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அதேபோல், A,B,C,D,E,F,G,H வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேர … Read more

இன்று முதல் சகல பாடசாலைகளும் வழமைபோன்று இடம்பெறும்

சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் வழமைபோன்று அனைத்து மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டிற்கான 2ஆம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கடந்த (07) ஆம் திகதி ஆரம்பமானதுடன், 20 மாணவர்கள் அல்லது அதற்கு குறைந்த மாணவர்களைக்கொண்ட வகுப்பு மாணவர்கள் வார நாட்களில் பாடசாலைகளுக்கு அழைக்கபட்டிருந்தனர். அதாவது 20 மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில் அனைத்து மாணவர்களும் அனைத்து நாட்களிலும் பாடசாலைக்கு அழைக்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. 20 தொடக்கம் 40 வரையான மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில், மாணவர்கள் … Read more

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி! மாணவன் உயிருடன் இல்லை – யாழில் துயரம்

 யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை என்பது பெரும் துயரமாக மாறியுள்ளது.  மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய் என்ற மாணவன் அண்மையில் உயிரிழந்தார். டெங்கு நோய் தொற்று காரணமாக குறித்த மாணவன் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்தாண்டுக்கான ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றிரவு வெளியானது. இதில் குறித்த 155 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். யாழ். மாவட்ட வெட்டப்புள்ளி 148 என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த மாணவன் … Read more

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்துக்கு ஆப்பு! புதிய யாப்பும் இல்லை, அரசியல் தீர்வும் இல்லை

இலங்கையில் ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவிலிருந்து அதன் கூட்டுக்கட்சியினர் சிலர் வெளியேறப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த சில மாதங்களாக இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி (Economic recession) நிலவுவதாக காண்பிக்கப்படுகிறது. இது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை அதாவது பொருளாதார மந்தத்தை(economic depression ) ஏற்படுத்தும் என ஊடகங்களும் சமூக வலைதளங்களும் செய்தியை வெளியிட்டு கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தில் கோட்டாபய அரசுக்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுவதான செய்திகளும் மிகைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஏதோ இந்த அரசாங்கம் … Read more

முஸ்லிம் மீடியா போரத்தின் வெள்ளி விழாவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கௌரவிப்பு

முஸ்லிம் மீடியா போரத்தின் வெள்ளி விழா மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில்  கொழும்பு அல் – ஹிதாயா மாஹா வித்தியாலயத்தின் பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நேற்று (14) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக்    கலந்துகொண்ட வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு,   போரத்தின் தலைவர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

நாளைய தினம் மின்வெட்டு அமுலாகும் நேரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் நாளைய தினமும் மின்துண்டிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அவ்வாறே P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 9 மணிமுதல் … Read more