போலந்து பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாருடன் சந்திப்பு

இலங்கைக்கான புதுடெல்லியில் உள்ள போலந்து குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ரடோஸ்லாவ் கிராப்ஸ்கி இன்று (மார்ச் 21) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சில் பிரியாவிடை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, கேர்ணல் ரடோஸ்லாவ் கிராப்ஸ்கி தனது பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக பாதுகாப்புச் செயலர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் கேர்ணல் கிராப்ஸ்கி மற்றும் ஜெனரல் குணரத்ன ஆகியோருக்கு … Read more

பாகிஸ்தான் இராணுவ அணி ஸ்பிரிட் (PATS) போட்டியில் இராணுவ அணி வெள்ளி பதக்கம் வென்றது

கரியனில் உள்ள பாகிஸ்தானின் இராணுவ தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான 5 வது சர்வதேச பாகிஸ்தான் இராணுவ அணி ஸ்பிரிட் (PATS) போட்டியில் பங்கேற்ற இலங்கை இராணுவ அணி, வெள்ளிப் பதக்கத்தை வென்றது. இந்த போட்டி மார்ச் 3 முதல் 13 வரை நடைபெற்றது, இதில் 16 க்கும் மேற்பட்ட சர்வதேச அணிகள் போட்டியிட்டன. நேபாளம், துருக்கி, மொராக்கோ, உஸ்பெகிஸ்தான், பஹ்ரைன், கென்யா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் … Read more

பொருளாதார நெருக்கடியால் நிர்க்கதிக்குள்ளாகும் ஈழத்தமிழர்கள்! சீமான் கடும் சீற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து, அந்நாட்டுக் குடிமக்கள் அன்றாடச்செலவினங்களைக்கூட எதிர்கொள்ள முடியாது, வறுமைக்கும், ஏழ்மைக்கும் உள்ளாகி, தவித்து வருகிற செய்திகள் கவலையளிக்கின்றன. சிங்கள இனவெறிப்பிடித்து, தமிழர்களை அழித்தொழிக்க, உலகெங்கும் கடன்களை வாங்கிக்குவித்து, நாட்டு … Read more

தோஹாவில் என்விரொட் கியூ | அக்ரிட் கியூ 2022 இல் இலங்கை பங்கேற்பு

ஜி.சி.சி. சந்தையில் இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் நோக்குடன் தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 2022 மார்ச் 10 முதல் 14 வரை நடைபெற்ற கத்தாரின் 9ஆவது சர்வதேச விவசாயக் கண்காட்சியான அக்ரிட் கியூ 2022 இல் இலங்கையின் விவசாய உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முதன்முறையாக தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம், ஏற்றுமதி அபிவிருத்திச் சபையுடன் இணைந்து மேற்கொண்டது. இலங்கைத் தூதரகம் இரண்டாவது முறையாக இந்தக் கண்காட்சியில் பங்கேற்றது. ட்ரட்லங்கா அக்ரிகல்சரல் எண்டர்பிரைசஸ் … Read more

தூதுவர் கனநாதன் கினியாவில் தனது நற்சான்றிதழ்களைக் கையளிப்பு

கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன், கென்யாவில் வதியும் கினியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற்றுள்ள தனது நற்சான்றிதழை 2022 மார்ச் 11ஆந் திகதி கொனாக்ரியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து கினியாவின் ஜனாதிபதி மாமடி டூம்பூயாவிடம் வழங்கினார். நற்சான்றிதழ்களை சமர்ப்பித்ததன் பின்னர், இருதரப்பு உறவுகளின் நிலை மற்றும் பொதுவான நலன்கள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஒரு சுருக்கமான சந்திப்புக்கு இலங்கைத் தூதுவரை ஜனாதிபதி டூம்பூயா அழைத்திருந்தார். கினியாவில் நற்சான்றிதழ்களைக் கையளித்துள்ளஇலங்கையின் முதலாவது தூதுவராக தூதுவர் … Read more

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி ரூபா 289ஐ தாண்டியுள்ளது

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 289 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளதுடன் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 90 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபா 20 சதம். விற்பனை பெறுமதி 380 ரூபா 30 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 310 ரூபா 45 சதம் விற்பனை பெறுமதி 321 ரூபா 51 சதம். ஜப்பானிய … Read more

சேர் பெறுமதி வரி சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

2002ஆம் ஆண்டு 14ஆம் இலக்க சேர் பெறுமதி வரி சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதிக்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நேற்று (22) கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. வரவுசெலவுத்திட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட MF/FP/32/CM/2021/212  மற்றும் 2021 டிசம்பர் 14ஆம் திகதிய அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. … Read more

தேர்தல் முறைமை தொடர்பான நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்ள கலந்துரையாடல்

உத்தேச தேர்தல் முறைமை தொடர்பில் நிபுணர் குழுவின் கருத்துக்களை மேலும் பெற்றுக்கொள்வது குறித்துத் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங்காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில்  (22) கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக இந்தக் … Read more

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி விசா கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் தற்போதைய ஏற்ற இறக்கம் காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விசா மற்றும் ACS சேவை கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  Source link

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியது  

காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் உள்ளடங்கிய மூன்று வர்த்தமானிகளுக்குப் பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. இதற்கமைய காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்திற்கு அமைய காணி அமைச்சரினால் விதிக்கப்பட்ட, 2021 ஒக்டோபர் 28ஆம் திகதிய 2251/48ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் உள்ளடங்கலாக 2022 பெப்ரவரி 07ஆம் திகதிய 2266/5ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி ஒழுங்கு … Read more