ஓய்வூதியம் பெறுவோருக்கு புதிய நிவாரணத் திட்டம்

ஓய்வூதிய அடையாள அட்டை வைத்திருக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கு கார்கில்ஸ் பூட் சிட்டி ( Cargills food city ) ஊடாக நேற்று நேற்று முன்தினம் (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிவாரணத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஓய்வூதியத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள கார்கில்ஸ் புட் சிட்டிகள் ( Cargills food city ) மற்றும் மருந்தகங்களிலும் ( Pharmacy ) ஓய்வூதியம் பெறுவோருக்கு சலுகை விலையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வாய்ப்பை … Read more

வடகடல் நிறுவன நிர்வாகத்தில் மாற்றம் – இரண்டு வாரங்களுக்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு

யாழ்ப்பாணம் – குருநகர் வடகடல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இரு வாரங்களில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடகடல் நிறுவனத்தில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஊழியர்கள் குறித்த நிர்வாகத்தினரால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத் தருமாறு கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்து மகஜர் ஒன்றை  கையளித்திருந்தனர். இதன்போது தமது நிறுவனத்தில் தற்போதுள்ள நிர்வாகம் பாரபட்சமானதும் வினைத்திறனற்றதுமாக இருப்பதால் அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தமக்கான … Read more

நான் மீண்டும் பிரதமரானால்……! அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ரணிலின் அதிரடி அறிவிப்பு

நாட்டின் தற்போதைய நிலைமையில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதை விட அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னெடுக்கக் கூடிய மாற்றமில்லாத தேசிய கொள்கையை உருவாக்குவது முக்கியம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால், அதன் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வீர்களா என நாடாளுமன்ற வளாகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கேட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். “நான் பிரதமராக பதவிக்கு வந்தால், உங்களுக்கு அமைச்சு பதவிகளை தருகிறேன்” எனவும் ரணில் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கூட்டவுள்ள … Read more

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு இணையவழி (Online) ஊடாக……….

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை தொடர்பான பாடங்களுக்குரிய பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்ப இணையவழி (Online) ஊடாக மாத்திரமே சமர்பிக்கவேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2022.03.10 ஆம் திகதி முதல் 2022.03.18 ஆம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்களை இணையவழி ஊடாக (Online) சமர்பிக்க முடியும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜனாதிபதியின் கண்காணிப்புக்கு…

வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தையில் பயிற்சிபெற்ற பணியாளர்களுக்கான வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குறித்த தொழில்சார் திறன்கள், அதிக சம்பளம் மற்றும் தொழில் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பத்தரமுல்லை, கொஸ்வத்தை, டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேற்று (11) முற்பகல் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி … Read more

கொழும்பில் அடை மழைக்கு மத்தியில் திரண்டுள்ள மக்கள் (Video)

நாட்டில் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எரிபொருள் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. இந்த நிலையில் கொழும்பில் பல எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசலை பெற்றுக் கொள்வதற்காகவும், மண்ணெண்ணெய் பெறுவதற்காகவும் பெருந்திரளான மக்கள் கூட்டம் வரிசையில் நீண்ட நேரமாக காத்திருக்கின்றமையை அவதானிக்க முடிகிறது.  எனினும் தற்போது கொழும்பின் பல பகுதிகளில் அடை மழை பெய்து வரும் நிலையில் மழை மற்றும் வெள்ள நீர் என்பவற்றையும் பொருட்படுத்தாது மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்ள … Read more

காஸிற்கான தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் நீங்கிவிடும்

காஸிற்கான தட்டுப்பாடு எதிர்வரும் சில தினங்களில் நீங்கிவிடும் என்று ‘லிற்றோ காஸ் நிறுவனம்’ தெரிவித்துள்ளது. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் காஸ் சிலிண்டர்கள் நேற்று(11) பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களில் காஸ் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கையைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும்  நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் வாக்காளர் தின தேசிய நிகழ்வு

வருடாந்த வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (11) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. ஆசியாவிலேயே முதலாவது சர்வஜன வாக்குரிமையை நடைமுறைப்படுத்தியதன் மூலம், உலகளாவிய ஜனநாயக வரலாற்றில் இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஆனால் வாக்களிக்கும் உரிமையைப் பெறுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி பலருக்கும் குறைந்தளவு அறிவே காணப்படுகிறது. வாக்காளர் தினத்தைக் … Read more

குளிர்சாதனப் பெட்டிகளில் இருக்கும் உணவுப் பொருட்களை வாங்கும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் துண்டிப்பு காரணமாக வர்த்தக நிலையங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களின் தரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் மக்களுக்கு அறிவித்துள்ளது. குளிரான உணவுகளில் நிறம், மணம், தோற்றம் போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டால், அது மனிதர்கள் உண்ணத் தகுதியற்றதாக மாறியுள்ள்து என்பதால், இதுபோன்ற உணவுகளை விற்பதையோ, வாங்குவதையோ தவிர்க்குமாறு சங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மனித பாவனைக்கு உகந்தவை அல்லாத இறைச்சி மற்றும் பால் … Read more

கௌரவ பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் 23வது ஆண்டு நிறைவு விழா

இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையின் 23வது ஆண்டு நிறைவு விழா கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (10) பிற்பகல் கொழும்பு ஷங்க்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. 500 க்கும் மேற்பட்ட இலங்கை வணிகங்களை உள்ளடக்கிய இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவை உள்ளூர் தொழில்முனைவோரை முதன்மையாக கொண்ட பேரவையாகும். இப்பேரவையின் ஆரம்பக் கூட்டத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் கலந்துகொண்டிருந்தமை விசேடம்சமாகும். அதன் பின்னர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் பல தடவைகள் … Read more