ஜிட்டல் மயப்படுத்தப்பட்ட 1919 அரச தகவல் நிலையத்தின் தொடர்ச்சியான விரிவு படுத்தப்பட்ட சேவை

அரச தகவல் நிலையம் பொது மக்களுக்கு அரச நிறுவகங்களின் தகவல்களை வழங்கும்  24 மணித்தியாலங்கள் செயல்படும் விரிவுபடுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இதுவரையில் இருந்த 1919 துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அரச தகவல்களை வழங்குவதற்கு மேலதிகமாக உடனடி தகவல் சேவை ( Instant messenger   ) வெப் விட்ஜெட் வசதி ( web widgets   ) முகநூல் மற்றும் மின்னஞ்சல் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக தொடர்ச்சியாக சேவைகள் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து தகவல்களை கேட்டறிவதற்கு … Read more

ஆபத்தில் உதவிய இந்தியா! – மோடிக்கு நன்றி கூறிய மகிந்த

 அண்மையில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய பொருளாதார அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் வசதிகளுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அண்மையில் வழங்கப்பட்ட கடன் உதவிக்காக இந்தியப் பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும் என … Read more

அமெரிக்க அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு…

அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) அவர்கள் இன்று, (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களைச் சந்தித்தார். இன்று முற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட விடயங்கள், அதன் முன்னேற்றம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும்  ஜனாதிபதி அவர்கள், திருமதி நூலண்ட் அவர்களிடம் தெரிவித்தார். சைபர் மற்றும் தகவல் தொழிநுட்ப துறைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும்..    உதவிச் … Read more

கீவ் நகரின் புறநகரை மீட்ட உக்ரைன் இராணுவம்: திணறும் ரஷ்ய படை (Video)

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், ஒரு மாதத்தை எட்ட உள்ள நிலையில், தலைநகர் கீவ் நகரின் புறநகர் பகுதியை உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளது. அதேநேரத்தில், தலைநகர் கீவ் நகரை முழுமையாக கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. இதையடுத்து, கீவ் நகருக்குள் வருவதற்கான முக்கிய நெடுஞ்சாலை, உக்ரைன் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,    Source … Read more

தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கட்சி, எதிர்க்கட்சி அனைவரும் ஒன்றிணையுங்கள்… – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்று,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். குறுகியகால மற்றும் நீண்டகால உத்திகளை முன்னெடுப்பதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார் மாநாட்டை ஏற்பாடு செய்தல் நேர்மையான ஒரு முயற்சியாகும். அரசியல் இலாபம் பெறுவதற்கு அல்ல… கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு வருகை தந்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி… பங்கேற்காத கட்சிகளுக்கும் வந்து தமது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கு அழைப்பு… … Read more

மட்டக்களப்பில் ,விசேட தேவையுடைய மாணவர்களின் ஆசிரியர்களுக்கு கலைக்கூறு பயிற்சி

விசேட தேவையுடைய கல்வி அலகுகளில் நிறுவனங்களில் மாணவர்களை வழிப்படுத்தும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கலைகூறு பயிற்சி நெறி,  செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சாரண பயிற்சியினை ஆரம்பிக்கும் முகமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூக சேவைகள் அபிவிருத்தி கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினர் இணைந்து நடத்திய இந்தஇரண்டு நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வில், … Read more

எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்!

சுமார் 1,500 கொள்கலன்கள் பணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக எதிர்வரும் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இந்திய கடன் உதவியின் கீழ் குறித்த கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் நேற்று நிதி அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டதாக அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும்,  துறைமுகத்தில் சிக்கியுள்ள கொள்கலன்களில் கோதுமை மா, அரிசி, சீனி, கடலை மற்றும் மிளகாய் உள்ளிட்டவை அதிகளவில் … Read more

சிறுவர்கள் மேற்கொள்ளும் அபாயகரமான தொழில்கள் 71

திருகோணமலை மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றைய தினம் (22) மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் கருத்து தெரிவிக்கையில் சிறுவர்கள் மேற்கொள்ளும் அபாயகரமான தொழில்களாக 71 தொழில்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அந்த தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை சில நிபந்தனைகளை தவிர அவர்களை ஒருபோதும் வேலைக்கு அமர்த்த முடியாது. தமது பெற்றோர்கள் மேற்கொள்கின்ற … Read more