கடும் இக்கட்டான நிலையில் இலங்கை! பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கப்போகும் சலுகைகள்

சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக மக்களுக்கு நிவாரணங்கள் பலவற்றை வழங்க நிதியமைச்சர்  பசில் ராஜபக்ச இணக்கம் வெளியிட்டுள்ளார்.  இன்றையதினம்  ஜனாதிபதி தலைமயில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.   மேலும், புதிய பாதீடு ஒன்றை முன்வைப்பதற்கும் நிதியமைச்சர் இதன்போது இணக்கம் வெளியிட்டுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் கடும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளனர்.   பலர் தங்களது வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றமை குறிப்பிடத்துக்கது.   Source link

இலங்கையில் இது பஞ்ச நிலைமை இல்லை என்றால், எதனை நாங்கள் பஞ்சம் என்று கருதுவது?

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பஞ்ச நிலைமை என்று சொல்ல முடியாது என்றால் எதை பஞ்சம் என்று கூற முடியும் என்று  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.  சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  இலங்கை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ளமைக்கு பிரதான காரணம் என்றால், அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அதை சுருக்கமாக சொல்வது என்றால், … Read more

இணையவழி On line யூடாக ரயில் ஆசன முன்பதிவுக்கான புதிய முறை அறிமுகம்

இலங்கையில் முதன்முறையாக ரயில் ஆசனங்களை இணையவழியூடாக On line முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகள் எதிர்காலத்தில் அனைத்து ரயில்களுக்குமான ஆசனங்களையும் இணையவழியூடாக முன்பதிவு செய்து கொள்ள முடியும். கொழும்பு கோட்டை – பெலியத்த, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, தலைமன்னார் மற்றும் கண்டி போன்ற நீண்ட தூர ரயில்களுக்கான பயணச் சீட்டுக்களையும் முன்பதிவு செய்வதற்கான வசதியும் கிட்டவுள்ளது. தற்போது புகையிரத பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை டிஜிடல் மயப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் … Read more

1930ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலை

1930ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார மந்த நிலை இது  என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். விழா ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கணடவாறு குறிப்பிட்டார்.  கோவிட் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.  உலகளாவிய பணவீக்கம் இன்று அதிகரித்து, எம்மைப் போன்ற சிறிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் கோவிட் தொற்றால் அமெரிக்கா … Read more

ஒரு கிலோ மர முந்திரி(கஜூ)யின் விலை ரூ. 7,000

துப்பரவு செய்யப்படாத மர முந்திரி (கஜூ) இறக்குமதி நிறுத்தப்பட்டதையடுத்து, ஒரு கிலோ மர  முந்திரி விலை ரூ.7,000 ஆக அதிகரித்துள்ளது. புத்தாண்டு காலங்களிலும் மர முந்திரிக்கான கேள்வி அதிகரிக்கும். உள்நாட்டு மர முந்திரிக்கு (கஜூ) சிறந்த சந்தை வாப்பை ஏற்படுத்தும் நோக்கில், முந்திரி (கஜூ) இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. அண்மையில் ஒரு கிலோ கிராம் மர முந்திரி (கஜூ) 250 ரூபா முதல் 350 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ முந்திரியின் … Read more

சர்வகட்சி மாநாடு ஆரம்பம்…  

சர்வகட்சி மாநாடு இன்று (23) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடவும் ஆலோசனைகளை முன்வைக்கவும் இந்த  சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையக மக்கள் … Read more

ரணிலின் கேள்வியால் திணறிய பசில்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நாடுவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்வியால் நிதியமைச்சர் தடுமாறியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முழுமையான அறிக்கை எமக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் ரணில் … Read more

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கு சலுகை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கு, அவசர தேவைகளில் ஒன்றாகக் கருதி எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சிரமங்களுக்கு உள்ளான சுற்றுலா பஸ்களுக்கு டிப்போக்களின் ஊடாக எரிபொருள் வழங்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சுற்றுலா பஸ்களுக்கு மாத்திரமே இந்த எரிபொருள் வழங்கப்படுகிறது. … Read more

எதிர்வரும் நாட்களில் பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது

மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் போதிய பெற்றோல் கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் நேற்று இரவும் சில பகுதிகளில் பெற்றோலுக்கான நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இது தொடர்பாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரிடம் வினவியபோது, மேலும் ஒரு மாதத்திற்கு போதுமான அளவு பெற்றோல் கொள்வனவுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது பெற்றோல் மற்றும் டீசல் … Read more

இனி முட்டையும் கோழியும் இல்லை

எதிர்காலத்தில் சந்தை தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது என அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  கால்நடை உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளதாக  அந்த சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். தொழில்துறைக்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நீடித்தால் எதிர்காலத்தில் சந்தையின் தேவைக்கு ஏற்ப முட்டை மற்றும் கோழி இறைச்சியை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  Source link