இன்று முதல் விமானப் பயணச் சீட்டு விலை அதிகரிப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து விமானப் பயணச் சீட்டுகளின் விலைகளும்; 27 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 203 ரூபாய் 60 சதமாக இருந்த நிலையில், இன்று அதன் பெறுமதி 259 ரூபாய் 99 சதமாக அதிகரித்துள்ளதாக  அவர் … Read more

பாண் மற்றும் உணவுப் பொதி கொள்வனவு செய்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு

இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி உணவுப் பொதியொன்றின் விலை 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. முதலாம் இணைப்பு பாண் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை … Read more

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்11ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான … Read more

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம்… – ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அதன் தலைவர் மசட்சுகு அசகாவா (Masatsugu Asakawa) அவர்கள், இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் தெரிவித்தார். நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மசட்சுகு அசகாவா அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் தனியார் துறையின் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு … Read more

ரஸ்யாவில் கற்கும் இலங்கை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி

ரஸ்யாவில் கல்வியைத் தொடர்ந்து வரும் இலங்கை மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன்படி ரஸ்யாவில் வீசா மற்றும் மாஸ்டர் கார்ட் சேவைகள் ரத்து செய்யப்பட்டதனால் மாணவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். உக்ரைன் மீது ரஸ்யா படையெடுத்ததை தொடர்ந்து பல நாடுகள் தடைகளை விதித்துள்ளன. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்ந்து வருவதாகவும், நேற்று முதல் வீசா மற்றும் மாஸ்டர் அட்டைகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ரஸ்யாவில் கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார். போர் காரணமாக ரஸ்யாவின் நாணய அலகான … Read more

விபத்துக்களின் போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு

தொழிலாளர் இழப்பீட்டுத் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நேற்று (10) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமூலத்தை  சமர்ப்பித்து உரையாற்றிய தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நபர் ஒருவர் பணியில் ஈடுபடும்போது, விபத்துக்குள்ளானால், வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை ஐந்து இலட்சம் ரூபாவிலிருந்து 20 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார். தனியார் துறையில்   ஊழியர் சேவைக்கு வரும்போதோ, பணியிலிருந்து திரும்பும்போதோ விபத்துக்குள்ளானால், இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், இந்த இழப்பீட்டு திருத்தச் சட்டமூலத்தில் அவர்களுக்கும் இழப்பீடு … Read more

கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு ஊடாகபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ … Read more

இலங்கையில் 260 தொடக்கம் 290 ரூபா வரை விற்பனை செய்யப்படும் ஒரு டொலர் (Video)

மக்களுக்கு தேவையான எரிவாயு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை, பால்மா இல்லை, இது தொடர்பாக பதிலளிக்க பொறுப்பான அமைச்சரும் இல்லை, இது தான் இந்த நாட்டின் இன்றைய நிலைமை என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 1000 மில்லியன் டொலர் பிணைமுறி ஒன்றை அரசு செலுத்த வேண்டியிருக்கிறது. அதனை செலுத்தினால் இருக்கும் பணமும் இல்லாமல் போகும், மருந்து பொருட்கள் இல்லாமல் போகும், … Read more

இலங்கைக்கான LNG இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ஏற்கனவே திட்டமிட்டபடி, இலங்கைக்கான (LNG) திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோக திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி (New fortress Energy) நிறுவனம் தெரிவித்துள்ளது. அனல்மின் நிலைய உடன்படிக்கைக்கு எதிரான மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்தமை தொடர்பில் நிறுவனம்  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிற்கு அருகாமையில் (LNG) திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நியூ போர்ட்ரெஸ் எனர்ஜி நிறுவனமும் இலங்கை அரசாங்கமும் கடந்த வருடம் (2021) செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் ஒன்றை … Read more

ஏற்றுமதி சந்தையில் இறப்பர் பொருள் தயாரிப்பு தொழிற்சாலை

ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு அவிசாவளை, கெட்டஹெத்த பிரதேசத்தில் இறப்பர்  தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்காக, அசோசியேட் அட்வான்ஸ் இறப்பர் நிறுவனம், இலங்கை முதலீட்டுச் சபையுடன் அண்மையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.   இந்த திட்டத்திற்காக  5.85 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அசோசியேட் அட்வான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.