நாட்டு மக்கள் அதிகமாக கேட்கும் பாடல்! தேடிச் செல்லும் புலனாய்வுப் பிரிவினர் – சபையில் அம்பலம்

நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்பி கேட்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இந்த நாட்களில் மக்கள் வேலை செய்யும் எம் வீரன் என்ற பாடலையே மக்கள் அதிகம் கேட்கின்றனர். நான் நினைக்கவில்லை, யொஹானியின் மெனிகே மகே ஹித்தே பாடலை விடவும் இந்தப் பாடல் பிரபல்யமடைந்துள்ளது. மக்கள் வரிசையில் காத்திருக்கும் போதே … Read more

கோட்டபாய ஜனாதிபதியாவதற்கு உதவிய இந்திய வம்சாவளி சட்டத்தரணி! ரகசியத்தை பகிரங்கப்படுத்திய விமல்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பசில் ராஜபக்ச தயரான போது அந்த கனவை தான் உட்பட தனது கட்சியும் தகர்த்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிறுத்த வேண்டும் என்ற கருத்து கொண்டுவரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ‘கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட பசில் ராஜபக்ச தயார் நிலையில் இருந்ததாகவும், அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருந்ததாகவும் விமல் … Read more

கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம்! – வரலாற்றில் மிகப் பெரிய உயர்வு பதிவானது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (10) வரலாற்றில் மிகப்பெரிய ஒரு நாள் உயர்வைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீடு 692.35 புள்ளிகள் அதிகரித்து 10,856.07 புள்ளிகளாக இருந்தது. இது 6.81 சதவீதம் அதிக உயர்வாகும். அதேபோன்று, S&P SL20 இன்டெக்ஸ் இன்று 29.5.89 புள்ளிகள் அதிகரித்து 8.52 சதவீதமாக இருந்தது. இது வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் உயர்வாகும். எவ்வாறாயினும், 2022ம் ஆண்டு இன்று … Read more

நாடாளுமன்றில் விரையாமாகும் மின்சாரம்!

நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து விளக்குகள் மற்றும் குளிரூட்டல்களும் இன்று செயற்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து கவலைகள் எழுந்தன. நாடாளுமன்றத்தில் இன்று சகல மின்விளக்குகள் மற்றும் குளிரூட்டிகள் செயற்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் தியாகம் செய்ய வலியுறுத்தப்படும் இந்த நேரத்தில் நாடாளுமன்றம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எரிசக்தி நெருக்கடியை அடுத்து நாட்டிற்கு உதவுவதற்காக இந்த வளாகத்திற்குள் கூடுதல் … Read more

47 ஆவது தேசிய  விளையாட்டு விழா

47 ஆவது தேசிய மட்ட விளையாட்டு விழாவை முன்னிட்டு முதல் கட்டமாக பிரதேச மட்ட போட்டிகள் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான வலைப்பந்து, கபடி, கிரிக்கெட் மற்றும் கரப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. ஆரையம்பதி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட கழகங்களின் வீராங்கனைகளை அறிமுகம் செய்யும் ஆரம்ப நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் போட்டிகளை … Read more

ஒட்டு மொத்த ரஷ்யாவையும் மிரளவைத்த கோரச்சம்பவம்! விடைதெரியாத மர்மம்

மனித வாழ்வில் எந்தளவிற்கு தெய்வ சக்தியின் ஆதிக்கம் இருக்கிறதோ அந்தளவு அமானுஷ்யங்களும் நடக்கின்றன என்பது பலரது நம்பிக்கை. இவற்றில் பலர் திகிலூட்டும் அனுபவங்களை பெற்றுள்ளதாக பகிர்ந்துள்ளனர். அந்த அனுபவங்களை நேரடியாக நாமே பெறாவிட்டாலும் கூட கதையாக கேட்கும் போதே பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் பல. ஒரு சில சம்பவங்கள் உலகளவில் பலரையும் நடுங்க வைத்து ஆட்டங்காண வைத்துள்ளன. அப்படியொரு கதிகலங்க வைக்கும் விடை தெரியாத மர்மம் அடங்கிய உண்மைச் சம்பவமொன்று தொகுப்பாக, Source link

எரிபொருள் தொடர்பான பிரச்சினை அடுத்த வாரம் முடிவுக்கு வரும்… திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும்… எரிசக்தி அமைச்சின் செயலாளர்

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா அவர்கள் தெரிவித்தார். “வலு சக்தி நாட்டுக்கு ஒரு பலம்” என்ற தொனிப்பொருளில் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்ஹ அவர்களும் கலந்துகொண்ட இந்த ஊடக … Read more

இலங்கை பெண்கள் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வரலாற்று பங்கு வகித்துள்ளனர் – பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷ

இலங்கை பெண்கள் சமூக பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் வரலாற்று பங்கு வகித்துள்ளனர் என பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். இந்தோனேஷியாவின் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சினால் (MoWECP) ஜகர்த்தாவில் இணைய தொழில்நுட்பம் ஊடாக நடத்தப்பட்ட ‘ஆற்றல்மிக்க பெண்கள் பேசத் துணிந்தவர்கள்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினம் – 2022 சர்வதேச அமர்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நேற்று (09) கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமரின் … Read more

இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் மீளவும் எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது இன்று (11) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, அனைத்து விதமான டீசலில் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. … Read more