ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை

ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் இந்த விமான சேவை இடம்பெறும்.இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இதனை தெரிவித்தார். அபிவிருத்தி திட்டத்திற்கு அமைவாக இரத்மலானை விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைதீவை கேந்திரமாகக் கொண்டு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 இல் … Read more

நாளையும் மின்வெட்டு

நாட்டில் நாளைய தினமும் மின்துண்டிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5 மணிமுதல் … Read more

அரசாங்கத்தின் உத்தேச நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு….

பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு  எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களிடம் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு அமைய நாட்டின் அபிவிருத்தி இலக்குகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் முக்கிய நகர அபிவிருத்திப் பணிகளை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைசார் நிறுவனங்களுடன் இணைந்து திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டத்தின் கீழ், காலி, பண்டாரவளை, இரத்தினபுரி நகர மத்தி மற்றும் திம்பிரிகஸ்யாய, கோட்டை, … Read more

இலங்கையில் புதிய நடைமுறை! இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என பெண்களுக்கு அறிவிப்பு

இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சின் கீழ் ‘மித்துறு பியஸ’ ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இலவச சேவை வழங்கப்படுவதுடன், சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கப்படுவதுடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய சேவை வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம அறிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை … Read more

உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும்

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பில் உண்மைக்கு புறம்பான கூற்றுக்களை தெரிவித்தல் மற்றும் நாட்டுக்கு எதிராக உண்மைக்கு எதிரான கூற்றுக்களை வெளியிடுதல் நிறுத்தப்பட வேண்டும் என்று சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்காமை தொடர்பில்  ,எதிர்கட்சி பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் கிரிஎல்ல எழுப்பிய கேள்விக்கு சபை முதல்வர் பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.   நிதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சரின் உடன்பாட்டுடன் இராஜாங்க அமைச்சர் … Read more

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல்  மற்றும் படகுகள், கப்பற் தொழில் அபிவிருத்தி புதிய இராஜாங்க அமைச்சர் பதவிப்பிரமாணம்…

களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் மற்றும் படகுகள், கப்பற் தொழில் அபிவிருத்தி புதிய இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே அவர்கள், இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.   ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2022-03-10

இலங்கையில் அதிர்ஷ்டமும் இல்லை! கவலையில் மக்கள்

இலங்கையில் தற்போது அதிர்ஷ்டமும் இல்லை என அதிர்ஷ்ட இலாபச் சீட்டுக்களை கொள்வனவு செய்யும் நபர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.  அதிர்ஷ்ட லாப டிக்கெட்டுக்களை அச்சடிக்கும் காகிதத் தாள் தட்டுப்பாட்டினாலேயே அதிர்ஷ்ட லாப சீட்டுக்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பற்றி தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக லொத்தர் விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக 12 வகையான நாளாந்த அதிர்ஷ்ட லாப டிக்கெட்டுக்கள் விற்பனைக்காக கிடைப்பதாகவும் ஆனால், தற்போது 5 வகையான டிக்கெட்டுக்களே கிடைக்கின்றன. அவையும் கேள்விக்கு குறைந்த அளவிலேயே கிடைப்பதாகவும் விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர். … Read more

ஷாங்காய் நகரில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளருடன் சந்திப்பு

துணைத் தூதுவர் அனுர பெர்னாண்டோ 2022 பெப்ரவரி 23ஆந் திகதி சீனாவின் ஷாங்காய் வெளிநாட்டு அலுவல்கள் அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஃபூ ஜிஹோங்கை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.  2022ஆம் ஆண்டு சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65வது ஆண்டு நிறைவையும் ரப்பர்-அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட 70வது ஆண்டு நிறைவையும் குறிக்கின்றது. சகோதர நகரங்களாக, ஷாங்காய் மற்றும் கொழும்பு பல துறைகளில் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன.  இரு தரப்பினரும் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் … Read more

கிழக்கு மாகாணத்தில் 1,272 சிறுவர்கள் ,சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் பராமரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர்களுக்கு வளமான எதிர்காலத்தினை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனான விசேட செயலமர்வு இன்று (10) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் கருத்து தெரிவிக்கையில், அனாதைகள், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கான சேவையினை ஆற்றிவருகின்ற சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம் திருகோணமலையில் தலைமைக் காரியாலத்தினையும், கிழக்கு மாகாணத்திலுள்ள … Read more