தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்! வெளியான முக்கிய தகவல்

நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக்க நேரிடும் சாத்தியங்கள் காணப்படுவதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாட்டை உருவாக்கி, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் எண்ணெய் விலையை அதிகரிக்க பல்தேசிய நிறுவனங்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புத்திக்க டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தி வைத்துக் கொண்டு புத்தாண்டு காலத்தில் பாரிய … Read more

கொழும்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் எட்டு பெண்கள், எட்டு நிமிடங்கள் என்னும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வுகள் நேற்று முன்தினம் (08) தினம் நடைபெற்றன. இதன்போது முன்னுதாரணமாக திகழும் வைத்தியர் பபாஸ்ரீ ஜினிக்கே, சஞ்சினி முனவீர, சௌந்தரி டேவிட் டொட்றிக்கே, றோயல் ரெமன்ட், குமுது பிரியங்கா, சிரோமல் கூரே, அனோக்கா அபேரத்தின மற்றும் புலணி ரணசிங்க ஆகிய எட்டு பெண்மணிகளால் நாட்டை தலைமைத்துவம் செய்யும் பொறுப்பு கிடைக்கப்பெற்றால் தாம் ஆற்றும் பணிகள் குறித்து எட்டு நிமிடங்கள் … Read more

திறைசேரியில் 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை! – நாடு திவாலாகும் அபாயம்

திறைசேரியில் தற்போது 400 மில்லியன் டொலர்கள் கூட இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு 900 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை குறுகிய கால நெருக்கடியாக மத்திய வங்கி விளக்குவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மத்திய வங்கி ஆளுநருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை … Read more

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய உல்லாச படகுச் சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்துவைப்பு

யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ் குடாநாட்டின் சுற்றுலா பயணிகளின் எண்ணங்களை நிறைவேற்ற “விக்டோரியா இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்” (Victoria international private Limited) மற்றும் “லியானா கடல் உணவு” தனியார் கூட்டு நிறுவனம் ஆகியன இணைந்து (Liyana sea food) முன்னெடுத்துள்ள கடல் சுற்றுலா படகான “விக்லியா” (“VICLIYA”) படகின் … Read more

வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு பெப்ரவரி மாதத்தில் 2.31 பில்லியன் டொலர்களாக பராமரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. வெளிநாட்டு நாணய கையிருப்பு 2,025 மில்லியன் டொலர்களாகவும் தங்கம் கையிருப்பு 98 மில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் 2021 இல், இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு நிலை 12 ஆண்டுகளில் இல்லாத அளவு 1.6 பில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது. கடந்த வியாழன் (3) இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட வாராந்திர பொருளாதார குறிகாட்டியின் … Read more

இரத்தினபுரி பிரதேச சபையின் நூலகத்தின் e-library   சேவை ஆரம்பித்து வைப்பு

இரத்தினபுரி பிரதேச சபையின் நூலகத்தின் நு-டுiடிசயசல  சேவை நேற்று(8) சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவினால் ஆரம்பித்த வைக்கப்பட்டது. https://library.macroit.lk  என்ற இணையத்தளத்தில் பிறவேசித்து நூல்களை வாசிக்க முடியும். இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னால் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, இரத்தினபுரி பிரதேச சபை தலைவர் சுதத் திசாநாயக்க, மாகாண பிரதான செயலாளர் சுனில் ஜயலத் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.    

அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால் ஏற்பட்ட வினை! – சந்திரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு சீரழிந்துள்ளது விட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் பொருளாதாரம் அதளபாலத்துக்குள் சென்று விட்து. இந்நிலையில், சர்வக்கட்சி மாநாட்டைக் கூட்டி இனி ஒன்றும் செய்ய முடியாது. இந்த அரசாங்கம் புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு … Read more

மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதி கணிசமாக உயர்வு!

இலங்கையில் மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதி கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 230 ஆக வலுவடைந்ததையடுத்து நேற்றைய தினத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்திருந்தது. இந்நிலையில், இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களின் படி மத்திய கிழக்கு நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் ஒன்றின் விற்பனை விலை … Read more

மூன்று முறைகளின் கீழ் குறுகிய காலத்திற்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்படுகின்றது

மூன்று முறைகளின் கீழ் குறுகிய காலத்திற்கு இறக்குமதி கட்டுப்படுத்தப்படுகின்றது: