இலங்கையில் மயில் உள்ள பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

இலங்கையில் மயில்கள்  உள்ள பிரதேசங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் குறிப்பிட்ட தோல் நோய் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளது. மயில்களில் இருந்து குறித்த நோய்த் தொற்று பரவுவதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலர் வலயத்தில் அதிகம் காணப்படும் மயில்கள் தற்போது ஈரப்பகுதிக்கு படிப்படியாக படையெடுத்து வர ஆரம்பித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மயில்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும். … Read more

எரிபொருள் நிலைய queue வரிசைக்கு சனிக்கிழமைக்குள் தீர்வு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் queue வரிசைகளுக்கு, எதிர்வரும் வெள்ளி – சனிக்கிழமைக்குள் தீர்வுகாணப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே குறிப்பிட்டுளார். கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறினார் மக்கள் queue வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் திங்கள் – செவ்வாய் கிழமைக்குள் மின் துண்டிப்பு குறைக்கப்பட்டு நாடு வழமைக்குத் திரும்பும் என்றும் அமைச்சர் … Read more

பசிலின் அதிரடி உத்தரவு – நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 பொருட்களுக்கு தடை

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். பால், பாலாடை, வெண்ணெய், பேரீத்தம் பழம், அன்னாசிப்பழம், மாம்பழங்கள் அப்பிள், திராட்சை உள்ளிட்ட பழவகைகள், தானியங்கள், சொக்கலேட்டுகள், பழச்சாறுகள், நீர் போத்தல்கள், ஒரு சில பியர்கள், ஒரு சில வைன்கள், சிகரெட்டுகள், … Read more

உக்ரேனில் உள்ள 27 இலங்கையர்கள் அங்கு தொடர்ந்து தங்கியிருக்க விருப்பம் தெரிவிப்பு

உக்ரேனில் உள்ள 27 இலங்கையர்கள் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.   பெலருஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்படாமல் ஒரு மாத காலத்துக்கு விடுமுறை வழங்குவதற்கு நிர்வாகத்தினர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். உக்ரேனில் 81 பேர் உள்ளனர். இவர்களில் 15 பேர் மாணவர்கள் ஏனைய 39 பேர் … Read more

பொருளாதார நிபுணர் வெளியிட்டு முக்கிய தகவல் – கலக்கத்தில் இலங்கை மக்கள்

இலங்கையின் தற்போதைய நிலைமை காரணமாக பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வர்த்தக பீடத்தின் வணிகப் பொருளியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைவடைந்து செல்கின்றமை மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என என அவர் எச்சரித்துள்ளார். நாட்டின் பணவீக்கம் தற்போது 16.8 வீதமாக உள்ள நிலையில், அது 20 … Read more

பாராளுமன்றத்திலும் அவசியமற்ற மின்குமிழ்களை அணைக்க உத்தரவு

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவசியமற்ற மின்குமிழ்களை அணைத்து ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் சபாநாயகர் அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற வளாகத்தின் அன்றாட நடவடிக்கைகளிலும் குறிப்பாக உணவகங்களிலும் சில குறைபாடுகள் ஏற்படக் கூடும் என மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறான சிரமங்களை பொறுத்துக்கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் … Read more

13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த தவறியுள்ள நிறுவனங்கள் அடையாளம்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் எரிபொருளுக்காக 13 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப்) நேற்றைய அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, புகையிரத திணைக்களம், இலங்கை இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் ஆகியனவும் பணம் செலுத்தத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது. அதிலும் மின்சார சபை 73 பில்லியன் ரூபாயினையும், ஸ்ரீலங்கன் … Read more

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 09ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : … Read more

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை

இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சேவை இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல் சேவை என அச்சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். இச்சேவையின் முதலாவது பயணம் சென்னையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், குறித்த கப்பலில் தங்கும் அறை வசதி முதல் பயணிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய அம்சமாக இக்கப்பலில் பயணிக்க விரும்பும் பயணிகள் இரண்டு … Read more