கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட் சிறுமி! சந்தேகநபர் சிக்கினார்: பொலிஸார் வெளியிட்ட மேலதிக தகவல்(Photo)

பதுளை − ஹாலிஎல பகுதியில் பாடசாலை மாணவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். காதலை நிராகரித்தமையே, இந்த கொலைக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையை அடுத்து, சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற நிலையில், ஹாலிஎல பொலிஸாரினால் … Read more

புலமைச்சொத்து சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

புலமைச்சொத்து  சட்டமூலம் நேற்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான விவாதத்தில் அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ உரையாற்றினார். உலக சுகாதார அமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வெற்றிகரமான தடுப்பூசி வேலைத்திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்திகளை கூடுதலாக ஏற்றுமதி செய்வதன் மூலம் டொலர் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள முடியும் என விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். நாட்டின் தேயிலை, மரமுந்திரிகை, வள்ளப்பட்டை மற்றும் உள்நாட்டு உணவு … Read more

இலங்கையில் தேசிய அரசாங்கம் – பச்சை கொடி காட்டினார் கோட்டபாய

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அதற்கமைய இது தொடர்பான சர்வ கட்சி மாநாடு இம்மாத இறுதியில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் … Read more

பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது – அமைச்சரவை பேச்சாளர அமைச்சர் டலஸ் அழகப்பெரும

தற்போது நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் எரிபொருள், சமையல் எரிவாயு பிரச்சினை பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. நீண்டகால பொருளாதார கொள்கை வகுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையே இதற்கான காரணம் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தின் மீதான … Read more

மற்றுமொரு இராணுவ ஜெனரலுக்கு முக்கிய பதவி!

 அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்ததாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக விமலவீர திஸாநாயக்க அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னர் அவர் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றினார். விமலவீர திஸாநாயக்க இராஜாங்க அமைச்சராக இருந்த போது ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித … Read more

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக 31 நாடுகள்! – அரசாங்கம் வெளியிட்ட தகவல்

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31 அங்கத்துவ நாடுகள் சாதகமாகவே நோக்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசிய அவர் இதனை கூறியுள்ளார். “இலங்கை அரசாங்கம் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் அரசாங்கமாகும். அது தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 45 அங்கத்துவ நாடுகளில் 31 நாடுகள் இலங்கை … Read more

கௌரவ பிரதமரின் தலைமையில் 08 பெண்கள் பாடசாலைகளும் 02 கலவன் பாடசாலைகளும் தேசிய பாடசாலை அமைப்பில் இணைப்பு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் 08 பெண்கள் பாடசாலைகளும் 02 கலவன் பாடசாலைகளும் தேசிய பாடசாலை அமைப்பில் இணைக்கும் நிகழ்வு அலரி மாளிகையில் இன்று (08) இடம்பெற்றது. நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக கல்வி அமைச்சின் அனுசரணையில் ‘ஆயிரம் தேசிய பாடசாலைகள், வேலைத்திட்டத்தின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த பத்து பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக அறிவிப்பதற்கான பெயர்ப் பலகைகள் கௌரவ பிரதமரினால் அலரி மாளிகையிலிருந்து … Read more

மைத்திரி முன்வைத்த கோரிக்கை! – மகிந்த, கோட்டாபய இணக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த பிரதான பிரேரணைக்கு ஜனாதிபதியும், பிரதமரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “நாட்டின் நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் மீதான அழுத்தத்தைத் தணிக்க சில நிவாரணத் திட்டங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களின் மாநாட்டைக் கூட்டுவதே எங்கள் முக்கிய முன்மொழிவாக … Read more

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு ஆரையம்பதியில் விழிப்புணர்வு நடைபவனி

சர்வதேச மகளிர் தினத்தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானத்தி தலைமையில் விழிப்புணர்வு நடைபவனி இன்று (08) திகதி செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. “நிலைபேறான நாளைக்காக இன்றைய பால்நிலை சமத்துவம்” எனும் இவ்வாண்டிற்கான தொனிப்பொருளிற்கு அமைய காலை 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பு ஆயுள்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி “பெண்களின் தலைமைத்துவத்தின் ஊடாக இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு நஞ்சற்ற உணவினை உற்பத்திசெய்வோம்” எனும் தொனிப்பொருளிற்கு அமைய … Read more