அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பேராசிரியர் சரித ஹேரத் அவர்களினால் இன்று (08) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் அழைக்கப்பட்ட மற்றும் அதன் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 12 அரசாங்க நிறுவனங்கள் குறித்தே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு, இலங்கை பெற்றோலிய … Read more

ரஷ்ய அதிபரின் உடல்மொழி (Body Language) வெளிப்படுத்தும் செய்தி!! அடுத்து என்ன?

உக்ரைன் – ரஷ்ய மோதல்கள் ஆரம்பமான இரண்டொரு தினங்களில் ரஷ்ய அதிபர் அணு ஆயுதங்கள் பற்றிக் கோபத்துடன் பேசிய காட்சியில் ரஷ்ய அதிபரின் உடல் மொழியை ஆராய்ந்தார்கள் உடல் மொழி வல்லுனர்கள். அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் பொழுது, உக்ரைனில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற எதிர்த்தாக்குதல்கள், ரஷ்யாவுக்கு எதிரான மேற்குலகின் எழுச்சி போன்ற எதிர்வினைகளால் ரஷ்ய அதிபருக்கு ஏற்பட்டுள்ள ‘விரக்தியை’ அவரது உடல் மொழி வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கின்றார்கள் உடல் மொழி வல்லுனர்கள். இந்த விடயங்களையும், உக்ரேனில் தற்பொழுது இடம்பெற்றுவருகின்ற … Read more

பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு பாராளுமன்றத்தில் அங்குரார்ப்பணம்

சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (08) பாராளுமன்றத்தில் திறந்துவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கப் பிரிவு, பாராளுமன்ற வரலாற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் உட்பட பல புத்தகங்கள் மற்றும் பெண்கள் ஆய்வுகள் பற்றிய ஆவணங்களையும் கொண்டுள்ளது. பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவை நம் நாட்டில் நீண்டகாலமாக உணரப்பட்டுவரும் விடயங்கள் விடயங்கள் என்றும், … Read more

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி குறைப்பு! மத்திய வங்கி தீர்மானம் – செய்திப் பார்வை

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியை 230 ரூபா வரை குறைப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு நாணய கொடுக்கல் வாங்கல்களின்போது ஒரு அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 230 ரூபாவாக அமையும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,     Source link

இலங்கை தேயிலை விலையில் சாதனை

பெப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும் தேயிலை ஏலத்தில் இலங்கை தேயிலை விலை 725 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் “சிலோன் தேயிலை ” கொள்வனவாளர்களில் இரண்டாவது பெரிய நாடக ரஷ்யா திகழ்ந்தது.இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக உலகளவில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட தரகு நிறுவனம் போர்ப்ஸ் அண்ட் வால்கெர் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொண்ட பொருளாதார தடைகளால் ரஷ்ய ரூபிள் நாணயம் … Read more

தாய்மாரே! மனைவிகளே! தோழிகளே! – ரஷ்ய படையினரின் பெண் உறவுகளுக்கு புடினின் செய்தி

உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்மார்கள், மனைவிகள், மற்றும் நண்பிகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடினின் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரைன் மீது படையெடுப்பதற்காக அனுப்பப்பட்ட துருப்புக்களைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும் என்று புடின் கூறியுள்ளார். இன்று செவ்வாய்கிழமை அதிகாலை இந்த காணொளி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியில், புடின் “எங்கள் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் தாய்மார்கள், மனைவிகள், சகோதரிகள் மற்றும் தோழிகள்” என்று படையினர் தொடர்புடைய பெண்களை விளித்துள்ளார். “உங்கள் அன்புக்குரியவர்களுக்காக … Read more

நாட்டின் சனத்தொகையில் 78.7 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி

கடந்த சனிக்கிழமை வரையில் நாட்டின் சனத்தொகையில் 78.7 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 4 ஆம் திகதி தரவின்படி மொத்த சனத்தொகையில் 64.04 வீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக நோயியல் பிரிவு அறிக்கை தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் 1 கோடியே 69 இலட்சத்து 21 ஆயிரத்து 171 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது . இரண்டாவது … Read more

பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

இலங்கை டொலருக்கு நிகரான ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்திற்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளது. அதற்கமைய இன்றைய தினம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 302.92 ரூபாவை எட்டியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 294.06 ரூபாயாக பதிவாகியுள்ளது. இலங்கையில் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றிற்கு செலுத்தப்பட்ட மிக அதிகபட்ச கட்டணம் இதுவென்பது … Read more

“ஒரே நாடு – ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் ,பாராளுமன்ற பொதுச் செயலாளரை சந்தித்தது…  

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோரை நேற்று (07) பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்தது. செயலணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும் எண்ணக்கரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக செயலணியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இன மற்றும் மத குழுக்களாக, எந்தவொரு வகையிலும் … Read more