எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் – ஹெலிகொப்டரில் சுற்றித் திரியும் பிரபுக்கள்! கொந்தளித்த மக்கள்

கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கம் மிகவும் மோசமான அரசாங்கம். நாங்கள் பசியில் வாடுகின்றோம். பிரபுக்கள் ஹெலிகொப்டரில் மிகவும் தாழ்வாக சுற்றி திரிவதாக தென்னிலங்கை மக்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர். அண்மையில், எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, ​​ஹெலிகொப்டர் ஒன்று மிகவும் தாழ்வாகப் பறந்து சுற்றி திரிவதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இது தொடர்பில், மேலும் தெரியவருவதாவது, குருநாகலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் பொது மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த போது, … Read more

உலக வங்கியின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்

உலக வங்கியின் உதவியுடன் முழு நாட்டையும் உள்ளடக்கிய 3000 கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் (ICDP) இரத்தினபுரி மாவட்டத்தில் பல வீதிகளின் அபிவிருத்தித் திட்டங்கள் ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. அதன்படி, கும்பகொட ஆரா சந்தியிலிருந்து கடதாசிச் தொழிற்சாலை தொழிற்சாலை – தலாவ வீதி (4.15 கி.மீ.), கலகெடி ஆரா – நுகே குறுக்கு வீதி (1 கி.மீ.), ஹிங்குர ஆரா … Read more

வீதி விளக்குகள் தொடர்பில் பசில் முன்வைத்துள்ள கோரிக்கை

அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன் உள்ளுராட்சி தலைவர்களிடமும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமும் மின்சாரத்தைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மின்சார பாவனையைக் குறைப்பதற்கான மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறு பசில் ராஜபக்ச கேட்டுக்கொண்டார். Source link

நெதுன்கமுவே ராஜா ஹஸ்திராஜயாவை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

ஸ்ரீ தலதா புண்ணிய கரடுவவை ஏந்திச் சென்ற இறந்த, நெதுன்கமுவே ராஜா ஹஸ்திராஜயாவை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்துமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக நெதுன்கமுவே ஹஸ்திராஜயாவின் உடலைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அறிவித்துள்ளார். தேசிய அருங்காட்சியக அதிகாரிகள் குழுவொன்று அதற்காக ஹஸ்திராஜயா இருந்த கம்பஹா வெலிவேரிய நெதுன்கமுவ பகுதிக்குச் சென்றுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு2022-03-07

கட்டாயமாக்கப்படும் கோவிட் தடுப்பூசி அட்டை! நடைமுறைக்கு வரும் காலம் தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.  எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் கோவிட்-19 செயலூக்கி தடுப்பூசியைப்   பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மீண்டும் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது. இதேவேளை, கோவிட் – 19 மரணங்களுக்கு அரசாங்கத்தினூடாக வழங்கப்பட்ட போக்குவரத்து செயற்பாடுகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   Source link

குளுக்கோமா நோயாளர்களை கண்டறிய நாடு முழுவதும் நடவடிக்கை

சர்வதேச குளுக்கோமா வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இதற்கமைவாக நாட்டில் உள்ள மக்களுக்கு இது தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலும் பல்வேறு வேலைத்திட்டங்கள் இந்த வாரத்தல் முன்னெடுக்கப்படுவதாக தேசிய கண் வைத்தியசாலையின் விஷேட கண் வைத்தியர் பிரதிபா கே ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார். குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர் 40 வயதுக்கு மேற்பட்டோர் இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். இதேவேளை நாட்டில் உள்ள குளுக்கோமா நோயாளர்களை கண்டறிவதற்கான நடவடிக்கை … Read more

சட்டவிரோத நிதி சேகரிப்பில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் தொடர்பில் விசாரணை

நாட்டில் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நிதி சேகரிப்பு தொடர்பில் ஆராயும் விதமாகச் சட்டவிரோத நிதி சேகரிப்பில் ஈடுபட்ட 1100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகச் சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சட்டவிரோத சொத்துகள் தொடர்பாக விசாரணை பிரிவினால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் பணமோசடி சட்டத்தின் கீழ் 78 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத செயல்களில் … Read more

ஜனாதிபதி,பிரதமர் தலைமையில் பாரிய சீமேந்துத் தொழிற்டசாலை இன்று திறப்பு

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்துத் தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இன்று (07)  திறக்கப்படவுள்ளது. மாகம்புர லங்வா தொழிற்சாலையானது 63 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வலயத்தின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையாகும். முதற்கட்டமாக வருடாந்தம் இரண்டு தசம் எட்டு மில்லியன் மெற்றிக்தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்படும். ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என … Read more

இன்னும் ஒரு சில நாட்களில் சுற்றிவளைக்கப்படவுள்ள கொழும்பு (Video)

நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் கோரி எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. இதில் எவ்வித கட்சி பேதமுமின்றி ராஜபக்சர்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களையும் கலந்து கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி எதிர்வரும் 15ஆம் திகதி பாரிய மக்கள் … Read more

உக்ரேன் ரஷ்ய இராணுவ மோதல் சர்வதேச பொருளாதாரத்திற்கு பலத்த தாக்கம்

உக்ரேனின் நிலவும் யுத்த நிலைமை சர்வதேச பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நிதி நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அந்நாட்டின் எதிர்காலம் நம்பிக்கையற்ற நிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. பொருளாதார பாதிப்பு தற்போது பாரியளவில் காணப்படுகின்றது. விசேடமாக ரஷ்யாவுக்கு எதிரான செயற்பாடுகள் பாரிய தடைகள் எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். உக்ரேன் மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ள நாடுகளுக்கு இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. யுத்தத்;தை முன்னெடுக்கத் தூண்டுவோரின் … Read more