நீடிக்கப்படும் மின்வெட்டு! நேரம் தொடர்பான புதிய அறிவித்தல்

நாளைய தினம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  விதம் தொடர்பான அறிவிப்பை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதற்கமைய,  நாளை   E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும், P Q R S T U V W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட … Read more

உள்வீடு,உள்நாடு, உலகம் முழுவதும் சிக்கித் தவிக்கும் கோட்டாவின் நிர்வாகம்! (காணொளி வடிவ பெட்டகம்)

இலங்கை அரசாங்கம் உள்வீடு, உள்நாடு, இந்தியா உட்பட்ட வெளிநாடு என்று அனைத்து இடங்களிலும் சிக்கல்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் தவறான அனுகுமுறையை சுட்டிக்காட்டுகிறது. இந்தநிலையில் இது தொடர்பான கருத்துக்களையும் தாங்கி வரும் காணொளி உங்களுக்காக! Source link

மஹிந்தவின் உத்தரவு – அமைச்சர்களுக்கான தீவிர பாதுகாப்பில் விமல், கம்மன்பில

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு தொடர்ந்தும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பிற்கு சமமான பாதுகாப்பினை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொதுவாக இரண்டு பாதுகாவலர்கள் மாத்திரமே வழங்கப்படுகின்றது. எனினும் அண்மையில் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கான பாதுகாப்பு வழங்கிய அதிகாரிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவிருந்தது. இந்நிலைமையில் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் விமல் … Read more

சமையல் எரிவாயுவிற்காக காத்திருக்கும் மக்கள் – வீதியை மாற்றி பயணம் செய்த மஹிந்த

குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை கட்டடத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று திறந்து வைத்தார். குருநாகல் – புத்தளம் வீதியில் யந்தம்பலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள தனது மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலகத்தை திறந்து வைக்க வீதியை மாற்றி பிரதமர் பயணித்ததாக தெரிய வருகிறது. பிரதமரின் பிரத்தியேக செயலாளர் ரோஹித ராஜபக்ஷவின் பங்கேற்புடன் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்து. எனினும் நேற்றைய தினம் ரோஹித ராஜபகஷ பங்கேற்கவில்லை என தெரியவந்துள்ளது. குறித்த அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு பொறுப்பை … Read more

வெதுப்பகங்களுக்கு பாரிய சிக்கல்

சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் வெதுப்பங்கள் என்பவற்றுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.  எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில வெதுப்பகங்கள் மற்றும் உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .  எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் வெதுப்பக உற்பத்திகளை விற்பனை செய்வதில் பிரச்சினையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  Source link

எரிபொருள் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டுக்கு தேவையான எரிபொருள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். ஏற்கனவே கப்பலில் இருந்து இறக்கப்பட்ட எரிபொருள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் மேலும் இரண்டு எண்ணெய் கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன. அவற்றுக்கான டொலர் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இறக்கும் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். வீணான அச்சம் காரணமாக நீண்ட வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டிய … Read more

ரஷ்ய தலைவரின் பிரயத்தனமும் இலங்கை மக்களின் போராட்டமும்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சமகாலத்தில் இலங்கையின் நிலைமையும் அதனை ஒத்ததாக இருப்பதாக சமூக வலைத்தளவாசிகள் தகவல் வெளியிட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகரை விரைவாக கைப்பற்ற ரஷ்ய தலைவர் விளாடிமீர் புத்தின் தமது படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனினும் 10 நாட்களாக தொடரும் கள சமரில் அது சாதகமாக மாறவில்லை என்பது யுத்த களமுனை வெளிப்படுத்துகிறது. தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படைகள் நீண்ட வரிசையில் அணிவகுத்திருந்த போதும் அது இன்னும் சாத்தியமாகவில்லை. உக்ரைன் தலைநகரை கைப்பற்ற … Read more

பொருளாதாரதப் பேரவை உருவாக்கும் திட்டத்தில் ஜனாதிபதி

பொருளாதாரப் பேரவை ஒன்றை உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண இவ்வாறு பொருளாதாரப் பேரவை உருவாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார். பாதுகாப்பு பேரவையைப் போன்று இந்த பொருளாதாரப் பேரவையும் வாராந்தம் கூடி நாட்டின் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு இந்தப் பேரவைக்கு வழங்கப்படும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். Source link

மனித உரிமைகள் பேரவை 49 ஆவது அமர்வு – இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான இலங்கையின் நிரந்தர பணியகம் மனித உரிமைகள் கழகம் 49 ஆவது வழமையான அமர்வு இலங்கை குறித்த மனித உரிமை உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை மீதான ஊடாடும் பேச்சுவார்த்தைகள் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ. பேரா. ஜி.எல். பீரிஸ் அவர்களின் அறிக்கை (ஜெனீவா, 04 மார்ச் 2022) தலைவர் அவர்களே, இலங்கை மீதான 46/1 தீர்மானமானது இக்கழகத்தின் பிரிக்கப்பட்ட வாக்குகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்தின் ஆழமான குறைபாடுள்ள நடைமுறை மற்றும் … Read more

உக்ரைன் ராணுவத்திடம் சிக்கிய இளம் ரஷ்ய வீரர்கள்! பெற்றோரை பார்க்க அனுப்பி வைக்கும்படி கெஞ்சல்

ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை ஒவ்வொன்றாக கைப்பற்றி வருகிறார்கள். ரஷ்யா பிடித்துள்ள நகரங்களை மீட்க உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து போராடி வருகிறது. போர் முனையில் நிற்கும் ரஷ்யா படைகளை எதிர்கொண்டு வரும் உக்ரைன் ராணுவத்தினரிடம் ரஷ்யா வீரர்கள் பலர் ஆயுதங்களுடன் சிக்கி வருகிறார்கள். அவர்களை உக்ரைன் ராணுவ அதிகாரிகள் பிடித்து தங்கள் முகாம்களுக்கு கொண்டு சென்று சிறை வைத்துள்ளனர். உக்ரைனிடம் சிக்கிய ரஷ்யா வீரர்கள் சிலர் ராணுவ … Read more