இலங்கையின் வடக்கு – கிழக்கு கரையோர பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை(Photo)

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கரையோரங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடுகையில், ”தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது திருகோணமலை கடற்பரப்பிலிருந்து தென் கிழக்கில் 470 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதோடு, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. … Read more

நெல் சந்தைப்படுத்தல் சபையை ஜனாதிபதி பார்வையிட்டார்…

நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். போட்டித் தன்மையுடன் நெல்லைக் கொள்வனவு செய்து, அரசாங்கத்திடம் போதியளவு நெல் கையிருப்பைப் பேணுவதை இலக்காகக் கொண்டு, இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். கொழும்பு 02, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை … Read more

தென்னிலங்கையில் நூற்றுக்கணக்கான மக்களுடன் பாலம் உடைந்து விழுந்தமையினால் குழப்பம்

மாத்தறையில் நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்துக் கொண்டிருந்த பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்துள்ளது. மாத்தறை பரேவி துவா விகாரையுடன் நிலப்பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பலகையில் செய்யப்பட்டுள்ள பாலம் ஒன்று இன்று இடிந்து வீழ்ந்துள்ளது. விகாரைக்கு மக்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.எனினும் சம்பவத்தின் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். கடலின் குறுக்கே விகாரைக்கு செல்லும் வகையில் கட்டப்பட்ட இந்த பாலம் பொது மக்களுக்களுடன் சேர்ந்து … Read more

கொழும்பில் நாளை 14 மணித்தியாள நீர் விநியோக தடை

கொழும்பு 07, 08, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை (05) காலை 08 மணி முதல் 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு 02, 03 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்திலேயே நீர் விநியோகம் இடம்பெறும் என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு! வெளியானது அறிவிப்பு

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, நாளை   P, Q, R, S, T,U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டும், மாலை 6 மணி தொடக்கம் 10 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், E மற்றும் F ஆகிய பகுதிகளில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.30 … Read more

சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு

தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு தொடர்பு குறித்து அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் முறை தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், வீடுகளில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 150இ000 பேர் தற்போது குணமடைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை உடன் அதிகரிக்குமாறு கோரிக்கை

இலங்கையில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணத்தை உடனடியாக அதிகரிக்குமாறு இலங்கை மத்திய வங்கி மீண்டும் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நேற்று கூடி, அதன் தீர்மானங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்க பல முன்மொழிவுகளை முன்வைத்தது. அதற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணத்தை உடனடியாக அதிகரிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய வங்கி … Read more

மார்ச் 4ஆம் 5 ஆம் திகளில் Western Breeze களியாட்ட நிகழ்வு

மேல்மாகாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Western Breeze களியாட்ட நிகழ்வு, மார்ச் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் கொழும்பு கடலோரப் பாதை (Marine Drive) கொள்ளுப்பிட்டி பகுதியில் நடைபெறவுள்ளது. மார்ச் 4, 5 ஆகிய திகதிகளில் மாலை 5.00 மணி முதல் நள்ளிரவு வரை இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்புடன் மார்ச் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த களியாட்ட … Read more

அமைச்சர் ஒருவரின் செயற்பாடு காரணமாக உச்சகட்ட கடுப்பில் கோட்டாபய

அமைச்சர தினேஷ் குணவர்த்தனவின் செயற்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் கோபத்திற்கு உள்ளானதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்ற வேளையில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் குறித்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காமினி லொக்குகே மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளை வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து சென்றுள்ளார். அவசர கூட்டம் ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி சென்றுள்ள நிலையில் அவர் திரும்பி வரும் … Read more

இலங்கை – இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி

சுற்றுலா இலங்கை அணிக்கும், இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் தற்போது மொஹாலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி சற்று முன்னர் வரை 2 விக்கட் இழப்பிற்கு விக்கட் இழப்பின்றி, 139 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்தது.. இதனைத்தொடர்ந்து இரண்டு போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. … Read more