தீவிர நிலையை அடையும் யுத்தம்! ரஷ்யாவுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ள செய்தி

உக்ரைனுக்கு எதிரான “ரத்தக்களறியை” உடனே நிறுத்த வேண்டும் எனவும், அங்கிருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற வேண்டும் எனவும்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்க வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. நேற்றையதினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையில், படையெடுப்பு குறித்த தகவல்களை சுயாதீன ஊடகங்கள் ஒளிபரப்பும் திறனை தடுப்பதன் மூலம், “ஊடக சுதந்திரம் மற்றும் உண்மையின் மீது முழு தாக்குதலை” ரஷ்யா தொடங்கியிருப்பதாக, அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. மில்லியன் கணக்கான ரஷ்யர்கள் சுதந்திரமான … Read more

கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க பதவிப்பிரமாணம்…

கைத்தொழில் அமைச்சராகப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில், இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும், இதன்போது இணைந்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 03.03.2022  

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன் ஒலித்த ஜனாதிபதியின் குறியிசை பாடல்! (Video)

 இலங்கையில் தற்போது பிரதான பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் இரவு பகலாக நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றனர். இந்தநிலையில்,எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள் ஜனாதிபதியின் ”வெட கரண அபே விருவா” அதாவது ”வேலை செய்யும் எம் வீரர்” என்ற குறியிசை பாடலை பாடும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதே போல் குறித்த குறியிசை பாடலை வைத்து எரிபொருள் நிலையங்களின் தற்போதைய நிலைமையை … Read more

ஈரான் தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு. ஹஷேம் அஷ்ஜசாதே, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஜயவர்தனபுர, கோட்டேயில் அமைந்துள் பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச் 03) இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் மேலும் இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் ஈரானிய தூதுவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் … Read more

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி தகவல்

வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகனங்களை இறக்குமதி செய்யும் திகதியை இந்நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வாகன இறக்குமதி நடைபெறாது என நாட்டின் முன்னணி வாகன இறக்குமதியாளர்கள் இன்று வெளிப்படுத்தியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்தியாவசியமற்ற 600 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்காது என்பதனை தெளிவுப்படுத்தியுள்ளதாக அவர்கள் … Read more

இலங்கை பத்திரிகை பேரவையின் ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு

இலங்கை பத்திரிகை பேரவை வெளியிட்டுள்ள ஊடக ஆய்வின் 4 ஆவது வெளியீடு நேற்று இடம்பெற்றது. வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது. “சமூக ஊடகங்களின் உயர்வு”என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. முன்னணி ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாசவின் நினைவாக இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 71 இலட்சம் ஆகும். இதேபோன்று உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4.8 பில்லியன் … Read more

சற்றுமுன்னர் வெளியான சாதாரண தர பரீட்சையின் மற்றுமொரு பாட பெறுபேறு

2020 (2021) ஆம் கல்வி ஆண்­டுக்­கான கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் மேலுமொரு பாடத்திற்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்­சைகள் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. கல்விப் பொது­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்சையின் அழகியற்கலை பாடத்திற்கான பெறுபேறுகளே தற்போது வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பரீட்சை பெறுபேறுகளை  https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.  Source link

மத்திய கலாசார நிதியத்தின் வரைவு விதிகள் கௌரவ பிரதமரிடம் கையளிப்பு

1980 ஆம் ஆண்டு 57 ஆம் இலக்க மத்திய கலாசார நிதியச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள வரைவு விதிகள் குழுவின் தலைவர் ஜி.எல்.டபிள்யூ.சமரசிங்க அவர்கள் உள்ளிட்ட குழு உறுப்பினர்களினால் நேற்று (02) அலரிமாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் 2020 செப்டெம்பர் 16 ஆம் திகதி குறித்த … Read more

இலங்கையில் முழுமையாக முடங்கும் ஆபத்தில் பேருந்து போக்குவரத்து! கடுமையான எச்சரிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளின் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதமடையும் ஆபத்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. சிலர், தாம் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக அதிலும் குறிப்பாக டீசலை பெறுவதற்காக ஒரு சில மணித்தியாலங்கள் காத்திருப்பதாக தெரிவிக்கும் அதேவேளை இன்னும் சில சாரதிகள், தாம் 24 மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் வரிசையில் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் எரிபொருள் முறையாக … Read more

இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 26 சதவீதமாக அதிகரிப்பு

இலங்கையில் கடந்த வருடம் தேங்காய் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் ஏற்றுமதி மூலம் 834 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் ஊடாக ஏற்றுமதி 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தென்னையுடன் தொடர்புடைய உற்பத்திகளான தேங்காய் உள்ளீடுகள் , தென்னை நார் உற்றபத்திகள், தென்னை மட்டைகள் உற்பத்திகள் மூலம் 661 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்ததாக இலங்கை சுங்க திணைக்களத்தின் நேற்றைய தின (02) அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. உலக அளவில் உள்ளூர் … Read more