44 கோடி பேரை பாதித்த கொரோனா வைரஸ்

தற்போது உலகம் முழுவதும் 44 கோடி பேருக்கும் அதிகமானோரை கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 கோடியே 6 … Read more

அதிகரிக்கும் போர் பதற்றம்! பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்கள் இலங்கைக்கு வர விரும்பினால் மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான மோதலில், பெலாரஸ் ரஷ்யாவுக்கு ஆதரவாக படைகளை அனுப்பியதுடன், ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றது. இதனால், உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகள் பெலாரஸூக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில், பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது குறித்த முழுமையான தகவல்களை அறிந்துக்கொள்ள … Read more

உக்ரைனில் இருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம் – ஐ.நா

ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், உக்ரைனில் இருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக உக்ரைன் நாட்டு மக்கள் அண்டைய நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இதேவேளை ,ஒரு வாரத்திற்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் 40 இலட்சம் அல்லது 40 இலட்சத்துக்கு அதிகமான … Read more

கச்சத்தீவு திருவிழாவில் 100 பக்தர்கள் மாத்திரமே பங்கேற்க அனுமதி (Photos)

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும், இந்தியாவிலிருந்து 50 பேரும் மாத்திரமே பங்கேற்க அனுமதிப்பது என்று இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் 11 ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்பவர்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவட் தலைமையில் நடைபெற்றிருந்தது.  இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி … Read more

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும்… ஜனாதிபதி பணிப்புரை

தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்தார். நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இந்தப் பணிப்புரையை விடுத்தார். மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுகளின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னர், தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்தல், கையிருப்பை தொடர்ச்சியாகப் பேணல் மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை … Read more

நாட்டின் எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம்! தேரர் பகிரங்க அறிவிப்பு (Video)

நாட்டின் எதிர்காலத்தை நாமே தீர்மானிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். “முழு நாட்டையும் சரியான பாதைக்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து நேற்று கொழும்பில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 11 பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்த சக்தியாக செயற்படுவோம். அமெரிக்க பிரஜையின் அதிகார செயற்பாட்டிற்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். … Read more

மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை:விவசாயிகளுக்கு விசேட திட்டத்தில் எரிபொருள்

மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெற்செய்கை அறுவடை இடம்பெற்று வருகின்றது. நெல் அறுவடை செய்பவர்களுக்கு எரிபொருளை வழங்க விசேட நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டிசல் மற்றும் ஏனைய எரிபொருட்களை, அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தற்போது நெல் அறுவடை செய்பவர்களுக்கு என மன்னார் மாவட்டத்தில் எரிபொருளை வழங்க விசேட நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது. … Read more

ரஷ்யாவுக்கு எதிர்ப்பு வெளியிடும் நாடுகளின் பட்டியலுக்குள் இணைந்த இலங்கை

உக்ரைன் மீது படையெடுக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முடிவு செய்ததையடுத்து, உலகின் பல நாடுகளின் தலைவர்கள் அந்த முடிவுக்கு எதிராக நிற்க முடிவு செய்தனர். நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்கள், மருந்து மற்றும் பிற உதவிகளை வழங்க ஏற்கனவே முன்வந்துள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படையெடுப்பினால் இதுவரையில் உக்ரைனில் ஏறக்குறைய 2,000 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். எனினும் உலகின் பல … Read more

 ஆடை தயாரிப்பு ஏற்றுமதி மூலம்  ஜனவரி மாதத்தில் 488 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

இலங்கையின் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி மூலம்  5 வருடங்களிலும் பார்க்க 488 மில்லியன் அமெரிக்க டொலராக உச்ச தொகையினை பதிவு செய்துள்ளது. கொரோனாவின் அதீத தொற்று காலங்களிலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முறையான பாதுகாப்பு நடவடிக்கை இத்துறை வளர்ச்சிக்கு பெருமளவு உதவியாக அமைந்துள்ளதாக இலங்கையின் ஒன்றிணைந்த ஆடை சங்க அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையின் ஆடை தொழில் துறையில் உள்ள ஊழியர்களில் 65% பேருக்கு வைரசு தொற்று தடுப்பூசி பூஸ்டர் டோஸ் வழங்கப்படுள்ளதுடன் 95% பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. … Read more

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக தடைசெய்ய வேண்டும்! – ஐநா நிபுணர்கள் கோரிக்கை

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்துவதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள அழைப்பு விடுத்துள்ளனர். அத்துடன், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு இணங்க சட்டத்தை கணிசமான முறையில் மதிப்பாய்வு செய்து திருத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். “தன்னிச்சையாக தடுத்து வைக்கப்படும் மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு ஒரு பெரிய ஆபத்து உள்ளது. குறிப்பாக மத மற்றும் இன சிறுபான்மையினர், மேலும் சட்டத்தின் பயன்பாடு பயனுள்ள முறையான செயல்முறை … Read more