ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலை விவகாரம்! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

2000 ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அண்மையில் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டிருந்தார். பிரித்தானியாவின் போர் குற்ற அதிகாரிகள் குழுவொன்றினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நிமல்ராஜனின் கொலை தொடர்பிலான தகவல்களை அறிந்தவர்களிடம் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் உதவிகளை … Read more

உக்ரேனில் உள்ள 20 இலங்கையர்கள்

உக்ரேனில் உள்ள 20 இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக உக்ரேன் – போலந்து எல்லைக்கு அருகாமையில் வந்துள்ளனர். இவர்களை போலந்துக்கு அழைத்து வந்து இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைமேற்கொண்டுள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கைத் தூதுவர் எம்.ஆர்.ஹசன் தெரிவித்துள்ளார்.இலங்கையர்கள் தொடர்பில் போலந்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கையர்கள் அனைவரையும் போலந்து ஊடாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தூதுவர் எம்.ஆர். ஹசன் கூறினார்.

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம்

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் காரணமாக உக்ரைன் சுற்றுலாப் பயணிகளினால் நாடு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பது குறித்த யோசனை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு குடிவரவு குடியகழ்வு திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்பொழுது … Read more

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் மகாவலி ரண்பிம காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு…

நாட்டை ஆட்சி செய்யும் போது, பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் எதிர்பார்ப்புகளை உறுதி செய்யும் ஜனநாயக முறைமையிலிருந்து விலகப்போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். இருப்பினும், அதனால் கிடைக்கும் சுதந்திரத்தைத் தவாறாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமென்று, அனைத்துத் தரப்பினரிடமும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.  “நாட்டை ஆளும் ஜனநாயக முறைமையிலிருந்து நாங்கள் விலகவில்லை…” “அதனால் கிடைத்துள்ள சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள்…”                                                                                       ஜனாதிபதி தெரிவிப்பு. “புரட்சிகர கட்சிகளெனச் சொல்லிக்கொள்வோர், மக்களை வீதிக்கு இறக்கி அரசியல் இலாபம் பெறுவதையே எந்நாளும் … Read more

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவிப்பு! நாளை முதல் நடைமுறையில் மாற்றம்

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோருக்கு விசேட அறிவித்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் பீ.சி.ஆர் அல்லது என்டிஜன் பரிசோதனைகளை மேற்கோள்ளத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களும் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு இரண்டு வாரங்களுக்குள் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற நடைமுறை காணப்பட்டது. எனினும், எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அதாவது நாளை முதல் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வது பூரண … Read more

இலங்கையில் ரயில் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிக்கும் அபாயம்

ரயில்வே திணைக்களத்திடம், அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ரயில்வே திணைக்களத்தினால் 10 நாட்களுக்கு எரிபொருளை சேமித்து வைக்க முடியும் என்ற போதிலும், தற்போது சுமார் 50 வீதத்தினால் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ள போதிலும், ரயில் சேவைக்கு அது தடையாக இருக்காதென தான் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளொன்றுக்கு சுமார் 100,000 லீற்றர் எரிபொருள் பயன்பாட்டில் ரயில்கள் இயங்குவதாகவும், … Read more

ஒத்துழைப்பு தராவிடின் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும்! இந்தியா – சீனாவுக்கு ரஷ்யா மறைமுக மிரட்டல்

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனா மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.   உக்ரைன் மீது ரஷ்யா இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனில் நடத்தி வரும் பயங்கர தாக்குதலால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் தாக்குதலை நிறுத்தும்படி குரல் கொடுத்து வருகின்றன. இன்னும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா  மீது பொருளாதார தடைகளை விதித்து … Read more

ரஷ்யாவை துண்டு துண்டாக்கியிருக்க வேண்டும்! இந்தப் பேரழிவுக்கு நீங்களே காரணம் – சீற்றமடைந்த டொனால்ட் ட்ரம்ப்

புடின் புத்திசாலி என்பதில் பிரச்சினை இல்லை. அவர் புத்திசாலிதான். ஆனால், உண்மையான பிரச்சினையே, நமது தலைவர்கள் ஊமையாக இருப்பதுதான் என  அமெரிக்காவின் முன்னாள் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், பைடன் மீது விமர்சனம் முன்வைத்துள்ளார்.   உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா போர் தொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டதும், அமெரிக்கா போன்ற நாடுகள் நேட்டோ படைகளை உக்ரைனுக்கு ஆதரவாக … Read more

4300 ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டோம்! உக்ரைன் ராணுவம் அறிவிப்பு

உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன்படி, இன்று உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய  ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலைநகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான … Read more

இறுதி தீர்மானத்தை வெளியிட்டுள்ள ரஷ்யா

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில்,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் “இந்த அற்புதமான கட்டுப்பாடுகள் (பொருளாதார தடைகள்) நிச்சயமாக எதையும் மாற்றாது. … Read more