ரஷ்யா – உக்ரைன் மோதல்: இலங்கையில் ஏற்படப்போகும் தாக்கம் – செய்திகளின் தொகுப்பு(Videos)

நாட்டில் அடுத்த சில தினங்களில் வாழ்க்கை செலவு மூன்று மடங்காக அதிகரிக்கலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். உலகம் தற்போது மிகவும் பாரதூரமான விடயத்தை எதிர்நோக்க ஆரம்பித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதலை ஆரம்பித்ததே அந்த நிலைமை. இந்த நிலைமையானது உலகில் அனைத்து நாடுகளுக்கும் பொருளாதார, சமூக ரீதியாக ஓரளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இது … Read more

இலங்கை மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி! இறக்குமதி செய்யப்படும் 600 பொருட்களின் வரி அதிகரிக்கும் வாய்ப்பு?

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியமற்ற 600 ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.   நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியின் ஆளுநரினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆடம்பரப் பொருட்களின் முழுமையான பட்டியலை முன்வைத்து அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பொருட்களின் இறக்குமதியை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்காக அரசாங்கம் இந்த … Read more

பிரபல தமிழ் உதைப்பந்தாட்ட வீரர் திடீரென உயிரிழப்பு (PHOTOS)

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் சிறந்த வீரர்  டக்சன் புஸ்லாஸ் உயிரிழந்துள்ளார். மன்னாரினை சேர்ந்த இவர் இன்று மாலைதீவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழக வீரரும், இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய பியூஸின்  உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார். இலங்கை … Read more

பாம்புத் தீவில் சரணடைய மறுத்த உக்ரைன் வீரர்களின் இறுதி நிமிடங்கள்(Video)

உயிரை துச்சமென கருதி சரணடைய மறுத்ததால் ரஷ்ய படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட, உக்ரைனை சேர்ந்த 13 வீரர்களின் உயிர் தியாகம் உலகளவில் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. போர் தொடுத்த பலம் பொருந்திய ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து சிறிய நாடான உக்ரைனின் ராணுவ வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். இருதரப்பின் ராணுவ பலத்திற்கும் பெரிய அளவிலான வித்தியாசம் இருந்தாலும், தாய் நாட்டை காப்பதில் உக்ரைன் வீரர்களின் உத்வேகம், ஆச்சயர்த்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில், கருங்கடலில் … Read more

கோவிட்டின் புதிய திரிபுகள் எந்த நேரத்திலும் உருவாகலாம்

கோவிட் பெருந்தொற்றின் புதிய திரிபுகள் எந்த நேரத்திலும் உருவாகலாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவர்கள் மற்றும் வைரஸ் தொற்று தொடர்பான நிபுணர்களின் ஆலோசனை வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என சங்கத்தின் துணைச் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். நாளாந்த கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை சராசரியாக ஆயிரத்தை விடவும் அதிகம் என்பதுடன் மரணங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு ஏற்ற இறக்கங்களை பதிவு செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டெல்டா மற்றும் … Read more

அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் – ஜனாதிபதி கோட்டாபயவின் நடவடிக்கை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்குள் கடும் பிளவு ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியினால் கூட்டப்பட்ட விசேட அமைச்சரவை கூட்டத்தில் எரிபொருள் விலை தொடர்பான கலந்துரையாடலின் போது நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு இடையில் கடுமையான பிளவு ஏற்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது. எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் அரச வங்கி முறை பாரியளவில் … Read more

இலங்கையில் வேலை நாட்களின் எண்ணிக்கையை குறைக்க யோசனை

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது. டொலர் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான யோசனையொன்றை ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த யோசனையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளார். … Read more

ஒரே இரவில் ரஷ்யா நடத்த எண்ணிய திட்டம்! தடுத்து நிறுத்திய உக்ரைன் படைகள்

ஒரே இரவில் தன்னை சிறைபடுத்தி, தங்கள் தலைவரை நிறுத்துவதற்கான ரஷ்யாவின் திட்டத்தை படைகள் தடுத்து நிறுத்தியுள்ளன என உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   மேலும், உக்ரைன்  மீதான படையெடுப்பை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, ரஷ்ய மக்களை அவர் கேட்டுக்கொண்டார். உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய நகரங்களில் உக்ரைன் படைகள் கட்டுப்பாட்டில் உள்ளன எனவும் அவர் … Read more

எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது! – அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது

மக்கள் எதிர்நோக்கும் அவல நிலையை கருத்திற் கொண்டு எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் பேச்சாளர் சமிந்த ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருளைக் கருத்தில் கொண்டு, அந்தத் தொகை அடுத்த ஒரு வாரத்திற்கு போதுமானதாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். “தற்போதைக்கு மக்கள் மீதான அழுத்தத்தை கருத்தில் கொண்டு, எரிபொருள் விலையை அதிகரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புகளைப் … Read more

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் யாழ். மாவட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாவட்டத்தில் எரிபொருள் பொது மக்களுக்கு வழமைபோன்று விநியோகிக்கப்பட்டு வருகின்றது காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்தில் தேவையான போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. தேவையான அளவு எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றது எனவே பொதுமக்கள் முண்டியடித்துச் சேமித்து வைத்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தத் தேவையில்லை. அத்தோடு வழமைபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு … Read more