ஒமிக்ரோன் தீவிரமடைந்தால் நாட்டில் சுகாதார கட்டமைப்பு சரிவடையும்

ஒமிக்ரோன் பரவல் வீதம் அதிகரித்தால் தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் தீவிர நிலையை அடையும் வீதமும் அதிகரிக்கும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் சுகாதார கட்டமைப்பு முழுமையாக சரிவடையும் என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். கடந்த வாரத்தில் 202 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 60 சதவீதமானவை 60 வயதுக்கு மேற்பட்ட நாட்பட்ட … Read more

18.02.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

18.02.2022 அன்று இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:  

மின்துண்டிப்பு தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு! வெளியானது முழு விபரம்

நாளைய தினமும் மின்வெட்டு  நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  எரிபொருள் பற்றாக்குறையால் பல மின் உற்பத்தி நிலையங்கள் நாளை மின்வெட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. இதன்படி, ஏ, பி மற்றும் சி ஆகிய பிரிவுகளில் மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை இரண்டு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் ஏனைய பிரிவுகளில் மூன்று மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  என பொதுப் … Read more

என்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம்: பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இரண்டாம் கட்ட இழப்பீடு

கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி தீ பரவலுக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இரண்டாம் கட்ட நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக , 1.75 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை எதிர்வரும் வாரம் தொடக்கம் நட்டஈடாக வழங்கப்படவுள்ளதாக அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி  இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்ட வலயங்களாக பெயரிடப்பட்ட … Read more

இலங்கையில் அனைத்து அரச பணியாளர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்

இலங்கையில் அனைத்து அரச பணியாளர்களும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தடுக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த இடங்களில் பணியாற்றும் அனைவரும் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். ஏதேனுமொரு கடமைக்காக நிறுவனம் ஒன்றிற்கு செல்லும் … Read more

சாரதி பயிற்சி ஆலோசகர்கள், உதவி சாரதி பயிற்சி ஆலோசகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலம் பரீட்சை  

சாரதி பயிற்சி ஆலோசகர்கள் மற்றும் உதவி சாரதி பயிற்சி ஆலோசகர்களை பதிவு செய்வதற்கான எழுத்து மூலப் பரீட்சை  

கோவிட் தொற்றின் பின்னர் ஏற்படும் அபாயம்! வெளியான திடுக்கிடும் தகவல்

கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தொற்றின் பின்னர் இருதய நோய்கள்  அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அமெரிக்க ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.  ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில்  நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இது தொடர்பில் தெரிவிக்கையில்,  கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு தொற்றின் பின்னர் இருதய நோய்கள் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புள்ளதாக அமெரிக்க  சாதாரணமாக அதாவது கோவிட் தொற்றுக்கு உள்ளாகி தீவிர நிலைமையை அடையாவிட்டாலும் கூட,  இந்த பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளது என … Read more

பொருளாதாரக் கொள்கைகள், திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் வகையில்  பிரதமர் அதிகாரிகளுடன் சந்திப்பு

தேசிய மற்றும் துறைசார் கொள்கைகளை வகுப்பதில் உதவி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 18 ஆம் திகதி அமைச்சிற்கு விஜயம் செய்து அதிகாரிகளுடன் அமைச்சின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். நாட்டின் வளர்ச்சியை மேலும் வினைத்திறனாக்க அனைவரும் திறம்பட திட்டமிட்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், திணைக்கள மற்றும் நிறுவன தலைவர்களிடம் ஒவ்வொரு திட்டத்தினதும் … Read more

இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு நோய்த்தொற்று! இரண்டு மாதத்தில் பதிவான சடுதியான அதிகரிப்பு

நாட்டில் டெங்கு  நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 9,809 ஆக அதிகரித்துள்ளது. டெங்கு பரவுவதற்கு 40% முதல் 45% கழிவுகளே காரணம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார். Source link