பொருளாதாரக் கொள்கைகள், திட்டச் செயற்படுத்துகை அமைச்சின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் வகையில் பிரதமர் அதிகாரிகளுடன் சந்திப்பு
தேசிய மற்றும் துறைசார் கொள்கைகளை வகுப்பதில் உதவி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 18 ஆம் திகதி அமைச்சிற்கு விஜயம் செய்து அதிகாரிகளுடன் அமைச்சின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். நாட்டின் வளர்ச்சியை மேலும் வினைத்திறனாக்க அனைவரும் திறம்பட திட்டமிட்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், திணைக்கள மற்றும் நிறுவன தலைவர்களிடம் ஒவ்வொரு திட்டத்தினதும் … Read more