வெளிநாடு ஒன்றில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட இலங்கை பெண்

இலங்கைப் பெண் ஒருவர் ஓமன் நாட்டுக்காக பணிப்பெண்ணாக சென்ற போது தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இருந்து பணிப்பெண்ணாக சென்றவரை வீட்டு உரிமையாளர் தடுத்து வைத்து மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். தான் சுகயீனமடைந்த நிலையில் இருப்பதாகவும் உரிமையாளர் தன்னை விடுவிக்க பல லட்சம் ரூபாய் பணம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை எனவும் தன்னை … Read more

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு – சூசகமாக தகவல் வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்

இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் எரிபொருள் விலையில் திருத்தங்க்ள மேற்கொள்வதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றை பதிவிட்டு மத்திய வங்கி ஆளுநர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசல் விலை பாதிக்கும் குறைவாகவே உள்ளதென மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். நாடுகள் பலவற்றின் எரிபொருள் விலை அட்டவணையையும் பதிவிட்டு, அவர் … Read more

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா செல்லும் பசில்!

கடுமையான அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கான இந்தியாவின் பொருளாதார நிவாரணப் பொதியை முறைப்படுத்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களில் பசில் ராஜபக்சே இந்தியாவிற்க மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும். டிசம்பரில் பசில் ராஜபக்ச இந்தியா சென்றிருந்த நிலையில், “இந்தியாவிடமிருந்து 2.4 பில்லியன் டொலர் உதவியைப் பெற முடிந்தது எனவும், இதனால் பல பயனுள்ள விடயங்கள் … Read more

பாத்ரூமில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுத சிவாங்கி! யார் காரணம்? அம்மாவே பகிர்ந்த தகவல்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமானாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக அனைவரும் மனதிலும் இடம்பிடித்தவர் சிவாங்கி. அண்ணன்- தங்கையாக புகழும்- சிவாங்கியும் அடிக்கும் லூட்டிகள் ஏராளம், 2வது சீசன் முடிவடைந்து தற்போது 3வது சீசனிலும் அசத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சினிமா பாடல்கள், திரைப்படங்கள் என படு பிஸியாக வலம் வரும் சிவாங்கியின் வாழ்வில் ஏதோ சோகம் நடந்துவிட்டது போல. சமீபகாலமாகவே அவரது ஸ்டேட்டஸ்கள் இதை காட்டிக் கொடுத்து விடுகின்றன, கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இன்ஸ்டாகிராம் … Read more

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக தெற்காசிய நாடுகள்! – அமைச்சரின் ஆருடம்

ஜெனிவா விவகாரத்தை வெற்றிகொள்ள அரசாங்கம் சிறந்த பொறிமுறையை வகுத்துள்ளதுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜெனிவாவில் இம்முறை தெற்காசிய வலய நாடுகள் இலங்கைக்கு சார்பாக செயற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கை மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இதுவரையில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு மாத்திரம் இலங்கையின் நடப்பு … Read more

அமைச்சரின் முடிவால் ஸ்ரீலங்கன் விமானங்கள் பறப்பதிலும் சிக்கல்?

பணத்தை செலுத்தினால் மாத்திரமே இனி வரும் காலங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு எரிபொருளை விநியோகிப்பது என்ற கடும் முடிவுவை எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில எடுத்துள்ளார். எந்த மின் உற்பத்தி நிலையத்திற்காவது தேவையான எரிபொருள் கிடைக்காது போயிருந்தால், அதற்கான காரணம் பணத்தை செலுத்தாததே எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிபந்தனையின் கீழேயே இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எ ரிசக்தி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். … Read more

தமிழர் பகுதியில் பீதியை கிளப்பும் சட்ட விரோத செயல்கள்! எங்கே செல்கிறது நிலைமை?

இலங்கையில் இறுதி யுத்தத்திற்கு பின்னர் தமிழர்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க மிகவும் பாடுபட்டுக் கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. தம்மால் கையளிக்கப்பட்ட போதும் இதுவரையில் திரும்பி வராத உறவுகளுக்காக நேரடி சாட்சியாளர்களான இவர்கள் தொடர்ந்தும் காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பல பல போராட்டங்கள், பல்வேறு வடிவங்களில் கோரிக்கைகள் இவை அனைத்திற்கும் எப்போது பலன் கிடைக்கும்? காலமே இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க இன்னொரு பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலை … Read more

நாட்டில் அதிகரிக்கும் ஆபத்து! விசேட வைத்திய நிபுணர் வெளியிட்டுள்ள தகவல்

ஒக்சிஜன் வழங்கப்படும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தது. அதி தீவிர சிகிச்சை பிரிவிலுள்ள 77 கட்டில்களில் 66 கட்டில்களிலும் கோ நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டார். 5700 கோவிட் நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன், 2650 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி கூறினார். இதேவேளை, … Read more

டொலர் நெருக்கடியின் மற்றுமொரு எதிரொலி! திண்டாடும் கால்நடை வளர்ப்பாளர்கள்

கடந்த ஒன்றரை மாதங்களாக நாட்டில் செல்லப்பிராணிகளுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இதற்கு காரணம் என அதன் செயலாளர் கலாநிதி நுவான் ஹேவாகமகே தெரிவித்துள்ளார்.  நாட்டில் பிற கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், கால்நடைத் தீவன விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில், முட்டை விலை குறைந்துள்ளதால், தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். … Read more

பெற்றோலுடன் இலங்கை வரும் கப்பல்: வலுசக்தி அமைச்சு

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் வகையில் 37,000 மெற்றிடக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தவிர நாளைய தினம் 37, 500 மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பலொன்று நாட்டை வந்தடைய உள்ளதாகவும் இந்தக் கப்பலுக்கான கொடுப்பனவைச் செலுத்தும் பணிகள் இடம்பெறுவதாக வலுசக்தி அமைச்சு கூறியுள்ளது. நாட்டில் எரிபொருள் விநியோகம் இன்றையதினம் தடையின்றி இடம்பெறுவதாகவும் … Read more